சூதாட்டத்தில் தொடர்புடையோருக்கு விளையாட்டில் இடமில்லை – ஹரின்

227

சூதாட்டத்துடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புடைய எந்தவொரு நபருக்கும் விளையாட்டுத்துறை நிர்வாகத்தில் ஈடுபட முடியாத விதத்திலும், அதுதொடர்பில் எந்தவொரு பதவியிலும் அங்கத்துவம் வகிக்க முடியாத விதத்திலும் தற்போதைய சட்டமூலம் திருத்தப்பட்டு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். 

ஒருநாள் போட்டியில் விளையாட பாகிஸ்தான் செல்கிறது இலங்கை

இலங்கை கிரிக்கெட் அணி எதிர்வரும்…

அதற்கான வர்த்தமானி அறிவித்தலில் கடந்த 21ஆம் திகதி கையெழுத்திட்டதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். நேற்று (22) விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,

”சூதாட்டத்துடன் சம்பந்தப்பட்டிருந்தாலோ அல்லது அவர்களின் உறவினர்கள் எவரேனும் சூதாட்டத்துடன் தொடர்புபட்டிருந்தாலோ இலங்கையின் விளையாட்டுத்துறையில் எந்தவொரு பதவியையும் வகிக்க முடியாது

அதிலும் குறிப்பாக, கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால் .சி.சியின் யாப்பிலும் இந்த விதிமுறை உள்ளது. எனவே, தற்போது கொண்டு வரப்படவுள்ள புதிய திருத்தத்தின் மூலம் இலங்கையிலும் இந்த சட்டத்தை அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளேம்” என அவர் தெரிவித்தார்.

மேலும், கிரிக்கெட்டில் இனிவரும் காலங்களிலும் சூதாட்டத்துடன் தொடர்புடையவர்களை தடை செய்வதற்கான முதல்கட்ட வேலையாக இதற்கான வர்த்தமானிக்கு நான் கையொப்பமிட்டு பாராளுமன்றத்துக்கு சமர்பித்துள்ளேன். இந்த முடிவு ஒருசில பேருக்கு ஏமாற்றத்தைக் கொடுத்திருந்தாலும், நாட்டின் விளையாட்டுத்றையின் நலனுக்கான நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவினால் எனக்கு பிரபல்யமடைவதற்கான எந்தவொரு தேவையும் கிடையாதுஆனாலும், நீண்டகாலமாக இழுபறி நிலையில் இருந்த இந்த திருத்தத்துக்கு மிக விரைவில் முடிவு கிடைக்கும்” என அவர் மேலும் தெரிவித்தார்

மேலும், இலங்கை அணி பங்கேற்கும் போட்டிகளை ஒளிபரப்புச் செய்வதற்கான தொலைக்காட்சி உரிமையை வழங்கும்போது வெளிப்படைத் தன்மையாக இருக்க வேண்டும் என்பதால் அதற்கு நால்வர் அடங்கிய குழு ஒன்றை நியமிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்

கடந்த காலங்களில் கிரிக்கெட் போட்டிகளுக்கான தொலைக்காட்சி உரிமைகள் விற்பனை இடம்பெற்றபோது முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே இந்த புதிய குழு குறித்து அமைச்சர் குறிப்பிடுகையில்,

”இதில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர், பிரதம நிறைவேற்று அதிகாரி, விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் மற்றும் .சி.சியின் நிர்வாகி ஒருவரும் இருப்பர். இனிவரும் காலங்களில் இந்தக் குழுவின் ஊடாகத்தான் தொலைக்காட்சி உரிமங்கள் விற்கப்படும். இதனால் எவ்விதமான மோசடியும் இடம்பெறாது” என அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் கிரிக்கெட் போட்டிகளுக்காக 800 கோடி செலவு செய்யும் Paytm

இந்தியாவை சேர்ந்த இலத்திரனியல் வர்த்தக…

இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட்டை மாற்றியமைப்பதற்கான முன்மொழிவுகள் அடங்கிய அறிக்கையொன்று பாராளுமன்றத்துக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் தெரிவுக் குழுவொன்றை நியமித்து பாராளுமன்ற விவாதமொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார்.  

இதேநேரம், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் கணக்காய்வு மாதிரி அறிக்கைக்கு இலங்கை கிரிக்கெட் பதிலளித்தாலும், அளிக்காவிட்டாலும் கணக்காய்வாளர் திணைக்களத்தினால் தனக்கு கையளிக்கப்படவுள்ள இறுதி கணக்காய்வு அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும். அதற்கு பதிலளிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 21 நாட்கள் காலஅவகாசம் கோரியிருந்தது. எனவே அதற்கான இறுதிநாள் இன்றாகும் என்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.  

இதேவேளை, இலங்கைக்கு வருகை தந்துள்ள .சி.சியின் அவைத் தலைவர் ஷாங் மனோகரை இன்று (23) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<