டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆதிக்கம் செலுத்தும் சீன வீரர்கள்

Tokyo Olympics - 2020

86
Getty Image/ Reuters

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் ஆரம்பமாகி இடம்பெறும் 32ஆவது டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழா விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

ஜப்பான், அமெரிக்கா, சீனா இடையே யார் அதிகம் தங்கப் பதக்கத்தை வெல்கிறார்கள் என்ற கடுமையான போட்டி நிலவினாலும், மற்ற நாடுகளும் மிகச் சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றன 

இந்த நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கின் ஆறாவது நாளான இன்று பதினேழு தங்கப் பதக்கங்களுக்கான போட்டிகள் நடைபெற்றன. இதில் நீச்சல், ஜூடோ, மேசைப்பந்து, துப்பாக்கி சுடுதல், படகோட்டம் உள்ளிட்ட போட்டிகள் முக்கிய இடத்தைப் பெற்றன.

சீனா வீராங்கனைகளின் உலக சாதனை

டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 4x200 மீற்றர் சாதாரண நீச்சல் (பிறீஸ்டைல்) அஞ்சலோட்டப் போட்டியில் சீனா அணி உலக சாதனையை முறியடித்துள்ளது.

போட்டித் தூரத்தை 7 நிமிடங்கள் 40.33 செக்கன்களில் சீனா கடந்த நிலையில், அவுஸ்திரேலியா வைத்திருந்த உலக சாதனையை முறியடித்திருந்தது.

இதனிடையே, தங்கம் வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க அணி 7 நிமிடங்கள் 40.73 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கத்தை வென்றது

63,000 சனத்தொகை: ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சிறிய நாடு

நடப்புச் சம்பியன் அவுஸ்திரேலிய அணி 7 நிமிடங்கள் 41.29 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து வெண்கலப் பதக்கத்தை வென்றது

சீன அணி வெற்றிப் பெற்றதில், Li Bingjie எனும் வீராங்கனை முக்கிய பங்காற்றினார். அவரது அசாத்திய நீச்சல் திறமையால் தான் சீனாவால் தங்கம் வெல்ல முடிந்தது.

2008 ஆம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்கிற்குப் பிறகு சீனா முதல் முறையாக இந்த வெற்றியைப் பதிவு செய்தது

சீன வீராங்கனைக்கு இரண்டாவது தங்கம்

பெண்களுக்கான 200 மீட்டர் வண்ணத்துப்பூச்சி நீச்சலில் சீன வீராங்கனை சாங் யுபி ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். அமெரிக்கா, அவுஸ்திரேலிய வீராங்கனைகள் பங்குபற்றிய இந்தப் போட்டியை 2 நிமிடங்கள் 3.86 செக்கன்களில் சாங் யுபி நிறைவுசெய்தார்.

முன்னதாக இவர், பெண்களுக்கான 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி நீச்சல் போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

இதனிடையே, அமெரிக்காவைச் சேர்ந்த ரேகன் ஸ்மித் வெள்ளிப் பதக்கத்தையும், ஹலி ப்ளிக்கிங்கர் வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்

Video – ஒலிம்பிக்கில் பிரகாசிக்கத் தவறிய இலங்கை வீரர்கள்..! 2020 Tokyo Olympics

800 மீட்டர் நீச்சலில் அமெரிக்காவுக்கு முதல் தங்கம்

இம்முறை ஒலிம்பிக்கில் முதல்தடவையாக இணைத்துக்கொள்ளப்பட்ட ஆண்களுக்கான 800 மீட்டர் சாதாரண நீச்சலில் (7 நிமிடங்கள் 41.87 செக்.) தங்கப் பதக்கத்தை அமெரிக்கா வீரர் ரொபர்ட் பின்க் தட்டிச் சென்றார்.

இந்தப் போட்டியில் இத்தாலி வெள்ளிப் பதக்கத்தையும், யுக்ரைன் வெண்கலப் பதக்கத்தையும் வெற்றிகொண்டது.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற குட்டி நாடு

இம்முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மிக சிறிய நாடு என்ற சாதனையை சென் மரினோ படைத்துள்ளது

பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் ட்ரெப் பிரிவில் சென் மரினோ நாட்டு வீராங்கனை அலஸ்சாண்ரா பெரில்லி 29 புள்ளிகளை எடுத்து வெண்கலப் பதக்கம் வென்றார்

சென் மரினோவின் சனத்தொகை வெறும் 34000 தான். இது ஐரோப்பாவில் இருக்கும் மிக சிறிய நாடுதான். நாட்டின் மொத்த பரப்பளவே 61 சதுர கிலோ மீட்டர் தான். எனவே மிகச் சிறிய நாடுகளில் ஒன்றான சென் மரினோ முதல் முறையாக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளது.

இந்தப் போட்டியில் 2012, 2016 ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஸ்லோவேக்கியா நாட்டு வீராங்கனை சுசானா ரெஹாக் ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப் பதக்கம் வெல்ல, அமெரிக்கா வீராங்கனை கைல் ப்ரௌனிங் வெள்ளிப் பதக்கம் வென்றார்

ஒலிம்பிக்கில் கலக்கிய 13 வயது சிறுமியும், 58 வயது தாத்தாவும்

உலக சம்பியனுக்கு கொரோனா

கோலூன்றிப் பாய்தலில் 2016 மற்றும் 2019 என இரண்டு தடவைகள் உலக சம்பியன் பட்டம் வென்ற அமெரிக்க வீரரான சாம் கென்ட்றிக்ஸ் கொரோனா தொற்றுக்குள்ளானதைத் தொடர்ந்து இம்முறை ஒலிம்பிக்கிலிருந்து விலகியுள்ளார்

இவர் இறுதியாக 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஹென்ட்றிக்ஸுடன் நெருங்கிய தொடர்பாளர்களாகக் காணப்பட்ட அவுஸ்திரேலியாவின் முழு தடகள அணியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

பளுதூக்குதலில் சீன வீரர் உலக சாதனை

ஆண்களுக்கான 73 கிலோ எடைப் பிரிவு பளுதூக்குதல் போட்டியில் சீனாவின் ஷி ஸியொங் தனது உலக சாதனையை முறியடித்து தங்கப் பதக்கம் வென்றிருந்தார். மொத்தமாக 364 கிலோ எடையை ஸியொங்க் தூக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் இரண்டாம் நாள் முடிவில் பல சாதனைகள்

அரையிறுதியில் ஜோகோவிச்

டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு செர்பியாவின் நொவாக் ஜோகோவிச் முன்னேறினார்

இன்று நடைபெற்ற ஆண்களுக்கான டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் உலகின்நம்பர்–1′ வீரரான செர்பியாவின் நொவாக் ஜோகோவிச், ஜப்பானின் நட்சத்திர வீரரான கெய் நிஷிகோரி ஆகியோர் மோதினர்

இதில் முதல் செட்டை 6–2 எனக் கைப்பற்றிய ஜோகோவிச், 2ஆவது செட்டை 6–0 என வென்றார். இறுதியில் ஜோகோவிச் 2–0 என்ற நேர் செட் கணக்கில் மிகச் சுலபமாக வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

மற்றொரு காலிறுதியில் உலகின் இரண்டாம் நிலை வீரரான ஷ்யாவின் டேனில் மெட்வெடேவ் 2–6, 6–7 என, ஸ்பெய்னின் பாப்லோ கரேனோ பஸ்டாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

மேரி கோம் அதிர்ச்சி தோல்வி   

இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் மேரி கோம், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

இன்று  நடைபெற்ற பெண்களுக்கான 51 கிலோ எடைப் பிரிவு குத்துச்சண்டை போட்டியில் மேரி கோம் கொலம்பியா வீராங்கனை விக்டோரியா வேலன்சியாவை எதிர்கொண்டார். இதில் மேரி கோமை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி விக்டோரியா காலிறுதிக்கு தகுதிபெற்றார்.

2012ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மேரி கோம், 6 தடவைகள் உலக சம்பியன் பட்டம் வென்றமை குறிப்பிடத்தக்கது.

Photos: Day 4 – 2020 Tokyo Olympic Games

உலக சம்பியனை வீழ்த்திய இந்திய வீரர்

ஆண்களுக்கான வில்வித்தை ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் அடனு தாஸ், 4 தடவைகள் ஒலிம்பிக் பதக்கம் வென்ற தென் கொரியாவின் ஒக் ஜின்க்யெக்கை வீழ்த்தி அசத்தினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இந்தியாவின் அடனு தாஸ் 6-4 என்ற கணக்கில் தென் கொரியாவின் ஒக் ஜின்க்யெக்கை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.

மீண்டும் முதலிடம் பிடித்த சீனா

டோக்கியோ ஒலிம்பிக் முதல் நாள் பதக்கப் பட்டியலில் சீனா முதல் இடத்தில் இருந்தது. அடுத்து தொடர்ந்து அமெரிக்கா முதல் இடத்தைப் பிடித்தது. நேற்று ஜப்பான் பதக்கப் பட்டியலில் முன்னிலையில் இருந்தது

இந்த நிலையில், போட்டியின் ஆறாவது நாள் நிறைவடையும் போது 15 தங்கப் பதக்கங்களை வென்று சீனா மீண்டும் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது

மேலும் பல ஒலிம்பிக் செய்திகளைப் படிக்க…