ஒலிம்பிக் இரண்டாம் நாள் முடிவில் பல சாதனைகள்

Tokyo Olympics - 2020

170
Getty Image/ Reuters

டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் 2ஆவது நாள் போட்டிகள் இன்று வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தன. 

நீச்சல், சைக்கிளோட்டம், ஜூடோ, வில்வித்தை, டைவிங், வாள் சண்டை, துப்பாக்கி சுடுதல், டைக்வொண்டோ மற்றும் பளுதூக்குதல் உள்ளிட்ட போட்டிகளின் கீழ் 18 தங்கப் பதக்கங்களுக்கான போட்டிகள் நடைபெற்றன

இதில், ஆண்களுக்கான பளுதூக்குதலில் 2 ஒலிம்பிக் சாதனைகளும், துப்பாக்கி சுடுதலில் இரண்டு ஒலிம்பிக் சாதனைகளும் முறியடிக்கப்பட்டன.

அவுஸ்திரேலியா உலக சாதனை டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் முதலாவது உலக சாதனையை அவுஸ்திரேலியாவின் பெண்கள் நீச்சல் அணி நிலைநாட்டியது.

அத்துடன், இம்முறை ஒலிம்பிக்கில் அவுஸ்திரேலியா வென்ற முதலாவது தங்கப் பதக்கமும் இதுவாகும்

டோக்கியோ நீர்நிலை தடாகத்தில் இன்று காலை நடைபெற்ற பெண்களுக்கான 4X100 மீட்டர் சாதாரண (Freestyle) தொடர் நீச்சல் போட்டியை 3 நிமிடங்கள் 29.69 செக்கன்களில் நிறைவுசெய்து தனது சொந்த உலக சாதனையையும், ஒலிம்பிக் சாதனையையும் அவுஸ்திரேலியா புதுப்பித்தது.

டோக்கியோ ஒலிம்பிக் முதல் நாளில் ஆசிய வீரர்கள் அமர்க்களம்

அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்ற 2018 பொதுநலவாய விளையாட்டு விழாவில் அவுஸ்திரேலியாவினால் நிலைநாட்டப்பட்டிருந்த 3 நிமிடங்கள் 30.05 செக்கன் என்ற உலக சாதனையே இன்று முறியடிக்கப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.  

அதுமாத்திரமின்றி, கோல்ட் கோஸ்டில் உலக சாதனை நிலைநாட்டிய அணியில் இடம்பெற்ற மூன்று வீராங்கனைகள் புதிய உலக சாதனை நிலைநாட்டிய அணியில் இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.

இப்போட்டியில் கனடா (3:32.78) வெள்ளிப் பதக்கத்தையும், ஐக்கிய அமெரிக்கா (3:32.81) வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.

பளு தூக்குதலில் சீன வீரர்கள் சாதனை  ஆண்களுக்கான 61 கிலோ எடைப் பிரிவில் சீன வீரர் ஃபேபின் லி புதிய ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

இன்று பிற்பகல் நடைபெற்ற இப்போட்டியில் 9 பேர் கலந்து கொண்டனர். அதில், சீனாவைச் சேர்ந்த ஃபேபின் லி ஸ்னெட்ச் முறையில் 141 கிலோ எடை தூக்கியும், கிளீன் அண்ட் ஜேர்க் முறையில் 172 கிலோ எடை தூக்கியும் 313 கிலோவுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்

ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்கில் இலங்கைக்கு பெருமை சேர்த்த மில்கா

இந்தோனேஷியாவைச் சேர்ந்த கோ யுகி ஐரவான் (302 கிலோ) வெள்ளிப் பதக்கத்தையும், கஸகஸ்தான் நாட்டைச் சேர்ந்த இகோர் சன் (294 கிலோ) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இதனிடையே, ஆண்களுக்கான 67 கிலோ எடைப் பிரிவில் சீன வீரர் சென் லிஜுன் புதிய ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

டியூனிசியா வீரருக்கு அடித்த அதிஷ்டம்ஆண்களுக்கான 400 மீட்டர் சாதாரண (Freestyle) நீச்சலுக்கான தகுதிகாண் சுற்றில் எட்டாவது வீரராக இறுதிச் சுற்றுக்கு தெரிவான டியூனிசியா வீரர் அஹ்மத் ஹப்னாவோய் எதிர்பாராத விதமாக வெற்றிபெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்

18 வயதான ஹப்னாவோய் 3 நிமிடங்கள், 43.36 செக்கன்களில் 400 மீட்டர் சாதாரண நீச்சல் போட்டியை நிறைவுசெய்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

இப்போட்டியில் வெற்றிபெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவுஸ்திரேலியாவின் ஜெக் மெக்லோலின் (3:42.53) வெள்ளிப் பதக்கத்தை வென்றார். ஐக்கிய அமெரிக்காவின் கீரன் ஸ்மித் (3:43.94) வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

அறிமுக விளையாட்டில் ஜப்பானுக்கு முதல் தங்கம்டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் முதல் தடவையாக அறிமுமாகும் விளையாட்டுக்களில் ஒன்றான சறுக்கல் போட்டியில் (ஸ்கேட்போர்டிங்) முதலாவது தங்கப் பதக்கத்தை ஜப்பானின் இளம் வீரர் யூட்டோ ஹொரிகோம் வென்றார்,

இப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் பிரேசிலின் கெல்வின் ஹோப்லருக்கு சென்றது. ஐக்கிய அமெரிக்காவின் ஸ்கேட்டர் ஜெகர் ஈட்டன் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

Photos: Day 1 – 2020 Tokyo Olympic Games

ஸ்கேட்போர்டிங் விளையாட்டில் மிகப்பெரிய நட்சத்திர வீரராக கருதப்படும் ஐக்கிய அமெரிக்காவின் நைஜா ஹஸ்டன், எட்டு பேர் பங்கேற்ற இறுதிப் போட்டியில் 7ஆவது இடத்தைப் பெற்ற ஏமாற்றம் அடைந்தார்.

விம்பிள்டன் சம்பியன் அதிர்ச்சித் தோல்விடோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் விம்பிள்டன் சம்பியனான அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷ்லே பார்ட்டி அதிர்ச்சி தோல்வியடைந்தார்

இன்று காலை நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில் அவுஸ்திரேலியாவின் ஷ்லே பார்ட்டி ஸ்பெயின் நாட்டின் சாரா சொர்ரிபெஸ் டோர்மோவை எதிர்கொண்டார்.

இந்தப் போட்டியில் ஆஷ்லே பார்ட்டி எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 4-6, 6-3 என அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். இதனால் ஆஸ்திரேலிய ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.

ஆண்டி முர்ரே விலகல்ஒலிம்பிக் 2020 தொடரில் பிரிட்டன் வீரர் ஆண்டி முர்ரே ஒற்றையர் டென்னிஸ் பிரிவில் இருந்து வெளியேறி உள்ளார்.  

தொடையில் ஏற்பட்ட சிறிய சதை காயம் காரணமாக ஆண்டி முர்ரே வெளியேறுவதாக அறிவித்துள்ளார். ஆனால் இவர் தொடர்ந்து இரட்டையர் பிரிவு போட்டியில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கடந்த சனிக்கிழமை இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் ஜோ சலிஸ்பரியுடன் இணைந்து கனடா அணிக்கு எதிராக ஆண்டி முர்ரே வெற்றிபெற்றார்

Photos: Day 2 – 2020 Tokyo Olympic Games

ஆண்டி முர்ரே தொடையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக அவர் ஏதாவது ஒரு பிரிவில் மட்டுமே ஆடுவது நல்லது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து ஒற்றையர் பிரிவில் இருந்து வெளியேற்றிவிட்டு இரட்டையர் பிரிவில் தொடரும் முடிவை ஆண்டி முர்ரே எடுத்துள்ளார்

கடந்த 2012 மற்றும் 2016 ஒலிம்பிக்கில் முறையே லண்டன், ரியோவில் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றவர் ஆண்டி முர்ரே. ஆனால் இம்முறை ஒலிம்பிக்கில் அவர் ஒற்றையர் பிரிவில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கோல்ப் வீரருக்கு கொரோனா

அமெரிக்க கோல்ப் வீரர் பிரைசனுக்கு கொரோனா உறுதியான அடுத்த சில மணி நேரத்தில் ஸ்பெயின் கோல்ப் வீரர் ஜான் ராமிற்கும் பாதிப்பு ஏற்பட்டது. தடுப்பூசி செலுத்திய போதும், கடந்த இரு மாதத்தில் இரண்டாவது முறையாக ஜானுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு அதிர்ச்சித் தோல்விகூடைப்பந்தில் உலகின் முன்னணி நாடாக வலம்வருகின்ற அமெரிக்கா, பிரான்ஸ் அணியுடனான போட்டியில் 83-76 என்ற புள்ளிகள் அடிப்படையில் அதிர்ச்சித் தோல்வியை சந்ததித்து.

2004 ஒலிம்பிக்கிற்கு பின்னர் அமெரிக்கா அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்

5 தங்கங்களுடன் சீனா தொடர்ந்தும் முதலிடத்தில்2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டாவது நாள் நிறைவடையும் போது பதக்கப்பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது. 5 தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலம் அடங்கலாக மொத்தமாக 9 பதக்கங்களை சீனா வென்றுள்ளது.

இரண்டாம் இடத்திலுள்ள ஜப்பான், 5 தங்கம், ஒரு வெள்ளி அடங்கலாக 6 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் மேலும் 12 பேருக்கு கொவிட்-19 தொற்று

2 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தமாக 8 பதக்கங்களுடன் அமெரிக்கா 3ஆம் இடத்திலும், 2 தங்கம், 3 வெண்கலம் அடங்கலாக 5 பதக்கங்களுடன் தென்கொரியா 4ஆம் இடத்திலும் உள்ளன.

ஷ்யா, இத்தாலி, அவுஸ்திரேலியா, டியூனீசியா, ஒஸ்ட்ரியா, ஈக்குவடோர், ஹங்கேரி, ஈரான், கொசோவோ மற்றும் தாய்லாந்து முதலான நாடுகள் தலா ஒவ்வொரு பதக்கங்களுடன், முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளன

>>மேலும் பல ஒலிம்பிக் செய்திகளைப் படிக்க<<<