உலக பாரா மெய்வல்லுனரில் சமித்தவுக்கு வெண்கலம்

World Para Athletics Championship 2023

125
World Para Athletics Championship 2023

உலக பாரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் F64 பிரிவில் பங்குகொண்ட இலங்கை வீரர் சமித்த துலான் வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலக பாரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகின்றது. இம்முறை உலக உலக பாரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இலங்கையிலிருந்து 3 வீரர்கள் பங்குபற்றியுள்ளனர்.

இந்த நிலையில், இன்று (13) நடைபெற்ற ஆண்களுக்கான F64 ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கை சார்பில் போட்டியிட்ட சமித்த துலான், 64.06 மீட்டர் தூரத்தை எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாரிஸ் பாராலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்கேற்கவும் தகுதி பெற்றார்.

அதுமாத்திரமின்றி, உலக உலக பாரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற 3ஆவது இலங்கை வீரராகவும் சமித்த துலான் இடம்பிடித்தார். இதற்கு முன் பிரதீப் சன்ஜய மற்றும் தினேஷ் பிரியன்த ஆகிய இருவரும் இலங்கை சார்பில் பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த 2021இல் நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டு விழா ஈட்டி எறிதலிலும் சமித்த துலான் வெண்கலப் பதக்கம் வென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இந்திய வீரர் சுமித் 70.83 மீட்டர் தூரத்தை எறிந்து புதிய உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தையும், அவுஸ்திரேலியாவின் மைக்கல் புரியன் 65.21 மீட்டர் தூரத்தை எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.

 >>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<