மட்டக்களப்பு புற்தரை மைதான திறப்பு விழா ஒத்திவைப்பு

189
 

நாளை (03) 1996ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ண நாயகர்கள் பங்கெடுக்கும் கண்காட்சி T20 போட்டியுடன், திறக்கப்படவிருந்த மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டுக் கிராம அமைப்பின் புற்தரை கிரிக்கெட் மைதானம், எதிர்வரும் திங்கட்கிழமை (04) திறக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

>>திறப்பு விழாக்காணும் கிழக்கின் முதல் கிரிக்கெட் புற்தரை மைதானம்

இன்று (02) மாலை 6 மணி தொடக்கம் திங்கட்கிழமை காலை 6 மணி வரையில் நாடாளவீயரீதியிலான ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதனை தொடர்ந்தே, கோட்டைமுனை விளையாட்டுக் கிராமத்தின் புற்தரை கிரிக்கெட் மைதான திறப்பு விழா திங்கட்கிழமைக்கு பிற்போடப்பட்டிருக்கின்றது.

மைதானத்தின் திறப்பு விழா பிற்போடப்பட்டிருக்கும் விடயத்தினை கோட்டைமுனை விளையாட்டுக் கிராம அமைப்பின் செயலாளராக காணப்படும் ஜெயதாசன் பாலசிங்கம் ThePapare.com  இடம் உறுதிப்படுத்தியிருந்தார்.

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் கோட்டைமுனை விளையாட்டு கிராம அமைப்பினால் உருவாக்கப்பட்ட புற்தரை கிரிக்கெட் மைதானமானது, கிழக்கிலங்கையில் உருவாக்கப்பட்ட முதல் புற்தரை கிரிக்கெட் மைதானம் என்பது குறிப்பிடத்தக்கது.

>>9 பந்துகளில் 31 ஓட்டங்களை விளாசிய பானுக ராஜபகக்ஷ

அதேநேரம் இந்த மைதான திறப்பு விழாவிற்காக ஒழுங்கு செய்யப்பட்ட கண்காட்சி கிரிக்கெட் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திரவீரர்களான சனத் ஜயசூரிய, அர்ஜூன ரணதுங்க, உபுல் சந்தன போன்ற முன்னணி வீரர்கள் கலந்துகொள்ளவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<