புதிய டெஸ்ட் தலைவரைப் பெறும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி

New Zealand Cricket Team

68
New Zealand Cricket Team

நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு புதிய டெஸ்ட் தலைவராக முன்வரிசைத் துடுப்பாட்டவீரரான டொம் லேதம் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவராக செயற்பட்டு வந்த முன்னணி வேகப்பந்துவீச்சாளரான டிம் செளத்தி குறித்த பதவியில் இருந்து விலகிய நிலையிலையே, டொம் லேதம் புதிய டெஸ்ட் அணித் தலைவர் பதவியினைப் பெற்றிருக்கின்றார்.

>>இரண்டாவது பயிற்சிப் போட்டியில் இலங்கை வெற்றி

அண்மையில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து  அணியாது இலங்கையுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரினை 2-0 எனப் பறிகொடுத்தது. இந்த டெஸ்ட் தொடரின் தோல்வியின் பின்னரே டிம் சௌத்தியின் பதவி விலகலும் நடைபெற்றிருக்கின்றது.

100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் ஆடிய அனுபவம் கொண்ட டிம் சௌத்தி கடந்த 2022ஆம் ஆண்டில் நியூசிலாந்தின் டெஸ்ட் தலைவராக பதவியேற்ற பின்னர் 14 டெஸ்ட் போட்டிகளில் தனது தரப்பினை வழிநடாத்தியிருக்கின்றார்.

டிம் சௌத்தி ஆளுகையிலான நியூசிலாந்து அணி 6 டெஸ்ட் போட்டிகளில் வெற்றியினையும், 6 போட்டிகளில் தோல்வியினையும் 2 போட்டிகளில் சமநிலை முடிவினையும் பெற்றிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

தான் நியூசிலாந்தின் டெஸ்ட் அணித்தலைவராக செயற்பட்ட விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட டிம் சௌத்தி அது தொடர்பில் மகிழ்ச்சி அடைவதாகவும், அதனை தான் பெருமையாக கருதுவதாகவும் குறிப்பிட்டார்.

>>இலங்கை – மே.தீவுகள் தொடருக்கான டிக்கெட் விலைகள் வெளியானது!

அதேநேரம் புதிய தலைவராக மாறியிருக்கும் டொம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து டெஸ்ட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக ஆடவிருப்பதோடு, குறித்த சுற்றுப்பயணத்தின் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரில் இம்மாதம் 16ஆம் திகதி ஆரம்பமாகுகின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<