பங்களாதேஷில் கலக்கப் போகும் கமிந்து மெண்டிஸ்

103

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறைவீரரான கமிந்து மெண்டிஸ் 2023ஆம் ஆண்டுக்கான பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) T20 தொடரில் விளையாடும் சந்தர்ப்பத்தினைப் பெற்றிருக்கின்றார்.

மே.தீவுகள் தொடருக்கான அவுஸ்திரேலியா குழாம் அறிவிப்பு!

அந்தவகையில் இரண்டு கரங்கள் மூலமும் பந்துவீசும் திறன் கொண்ட கமிந்து மெண்டிஸ், பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் அடுத்த ஆண்டு சில்லேட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக ஆடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்றார். கமிந்து மெண்டிஸின் ஒப்பந்தம் இலங்கை நாணயப்படி ரூபா. 10,789,000 இற்கு இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதுவரை மொத்தமாக 45 T20 போட்டிகளில் ஆடியுள்ள கமிந்து மெண்டிஸ் 4 அரைச்சதங்கள் அடங்கலாக 804 ஓட்டங்கள் குவித்திருப்பதோடு, 13 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருக்கின்றார்.

இதேநேரம் பங்களாதேஷ் பிரீமியர் லீக் T20 தொடரின் 2023ஆம் ஆண்டுக்கான போட்டிகள் அடுத்த ஆண்டின் ஜனவரி மாதம் 5ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி வரை நடைபெறவிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந்திய T20i அணியில் மூன்று வீரர்கள் இணைப்பு

அதேநேரம் பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரின் நடப்புச் சம்பியன்களாக கொமில்லா விக்டோரியன்ஸ் அணி காணப்படுகின்றமையும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<