இலங்கை வேகப்பந்து ஆலோசகராக டிம் மெக்கஸ்கில் நியமனம்

311
Tim McCaskill with James Pattinson in the nets at the MCG.

எதிர்வரும் மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயணத்தை ஒட்டி இலங்கை அணியின் வேகப்பந்து ஆலோசகராக அவுஸ்திரேலியாவின் டிம் மெக்கஸ்கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

47 வயதான மெக்கஸ்கில் அவுஸ்திரேலியாவின் தேசியமட்ட போட்டிகளில் பிரதிநிதித்துவப் படுத்தாதபோதும் பயிற்சியாளர் பணியை ஏற்கும் முன்னர் 90களில் சில உள்நாட்டு பருவங்களில் ஆடியுள்ளார். இவர் விக்டோரியா கிரிக்கெட் சங்கத்தின் உயர் செயல்திறன் முகாமையாளருமாவார்.

கார்டிப் போட்டியுடன் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தினை ஆரம்பிக்கும் இலங்கை

ஐ.சி.சி. இன் 2019ஆம் ஆண்டு ஒரு நாள் கிரிக்கெட் உலகக்…

எதிர்வரும் மே மாதம் முதல் வாரத்தில் அவர் இலங்கை வந்து தனது பொறுப்பை ஏற்கவுள்ளார். இதன்போது அவர் தலைமை பயிற்சியாளர் சந்திக்க ஹதுருசிங்க மற்றும் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் ருமேஷ் ரத்னாயக்கவுடன் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பயிற்சிகளை வழங்கவுள்ளார்.

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இலங்கை அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை முன்னிட்டே இந்த பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. ஹதுருசிங்கவின் பரிந்துரையின்படியே இலங்கை கிரிக்கெட் சபை (SLC) மெக்கஸ்கில்லை இந்த பதவிக்கு நியமித்துள்ளது.

அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பட்டிசன் 2015ஆம் ஆண்டு தீவிர எலும்பு முறிவு காயத்திற்கு உள்ளான பின் மீண்டும் அணிக்கு திரும்புவதில் மெக்கஸ்கில் பின்னணியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப் போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கைக் குழாம், அடுத்த மாதத்தின் இரண்டாம் வாரத்தின் போது அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இதில் தெரிவாகும் வீரர்களுக்கு தேசிய அணியின் பயிற்சியாளர் சந்திக்க ஹதுருசிங்க புதிய டெஸ்ட் தொடர் ஒன்றுக்கு ஆயத்தமாகுவதற்கான வழிகாட்டுதல்களை வழங்குவார்.

எதிர்வரும் மே 23ஆம் திகதி மேற்கிந்திய தீவுகளை நோக்கி புறப்படும் முன்னர் இலங்கையின் உத்தேச டெஸ்ட் குழாம் பல்லேகலவில் உள்ள உயர் செயல்திறன் மையத்தில் 10 நாட்கள் பயிற்சி பெறவுள்ளது.  

இந்த தொடர் மூலம், இலங்கை அணி பத்து வருடங்களின் பின்னர் மேற்கிந்திய தீவுகளுக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<