ஐ.சி.சி. இன் சிறந்த வீரர் பரிந்துரையில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ்

132

2022ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி. இன் சிறந்த கிரிக்கெட் வீர, வீராங்கனைகள் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட வீர, வீராங்கனைகளின் பட்டியலானது வெளியிடப்பட்டிருக்கின்றது.

ஐ.சி.சி. இன் ஆண்டுக்கான (2022) சிறந்த வீர,வீராங்கனைகளுக்குரிய விருதுப் பரிந்துரையானது அதன் முழு அங்கத்துவ நாடுகளுக்காக ஒன்பது பிரிவுகளில் வழங்கப்படவிருப்பதோடு, பரிந்துரைக்காக தெரிவு செய்யப்பட்ட வீர, வீராங்கனைகள் 2022ஆம் ஆண்டில் வெளிப்படுத்திய அவர்களது திறமைகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர்.

கோர விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ரிசாப் பாண்ட்

ஐ.சி.சி. இன் ஆண்டுக்கான சிறந்த ஆடவர் கிரிக்கெட் வீரருக்குரிய பரிந்துரையில் பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அசாம், இங்கிலாந்தின் நட்சத்திர சகலதுறைவீரர் பென் ஸ்டோக்ஸ், ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ரஷா மற்றும் நியூசிலாந்தின் டிம் சௌத்தி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர்.

மறுமுனையில் 2022ஆம் ஆண்டுக்கான சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்களை விருதுக்கு இந்தியாவின் ஸ்மிரிதி மந்தனா, அமெலியா கெர், நேட் ஸ்கைவர், பெத் மூனி ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதுப் பரிந்துரையிலும் பென் ஸ்டோக்ஸ் இடம்பெற்றிருப்பதோடு அவர் தவிர இந்தப் பரிந்துரையில் இங்கிலாந்தின் ஜொன்னி பெயர்ஸ்டோவ், அவுஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா மற்றும் தென்னாபிரிக்காவின் ககிஸோ றபாடா ஆகியோரும் காணப்படுகின்றனர்.

ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த வீரர் பரிந்துரையில் பாபர் அசாம் இடம்பெற்றிருப்பதோடு, சிம்பாப்வே இன் சிக்கந்தர் ரஷாவும் இந்த பரிந்துரையில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றார்.

அதேநேரம் T20I போட்டிகளுக்கான சிறந்த வீரர் பரிந்துரையிலும் சிக்கந்தர் ரஷா இடம்பெற்றிருக்க இந்தியாவின் நட்சத்திர அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ், இங்கிலாந்தின் சேம் கர்ரன் மற்றும் பாகிஸ்தானின் மொஹமட் ரிஸ்வான் ஆகியோருக்கும் அதில் இடம்பெற்றிருக்கின்றனர்.

முதன்முறையாக வெளிநாட்டு லீக்கில் விளையாடவுள்ள வியாஸ்காந்த்!

விருதுகளின் வெற்றியாளர்கள் அவர்களுக்கு வழங்கப்படும் வாக்குகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்படவிருப்பதோடு ஐ.சி.சி. இன் அங்கத்துவ நாடுகளின் சிறந்த வீர, வீராங்கனை, போட்டி நடுவர் மற்றும் கிரிக்கெட்டின் போற்றுதலுக்குரிய (Cricket Spirit) விருதுகளும் மேலதிகமாக  வழங்கப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பரிந்துரைகள்

ஐ.சி.சி. இன் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர்

  • பாபர் அசாம்
  • பென் ஸ்டோக்ஸ்
  • சிக்கந்தர் ரஷா
  • டிம் சௌத்தி

ஐ.சி.சி. இன் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனை

  • நேட் ஸ்கைவர்
  • ஸ்மிரிதி மந்தனா
  • அமெலியா கெர்
  • பெத் மூனி

ஐ.சி.சி. இன் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் வீரர்

  • பென் ஸ்டோக்ஸ்
  • ஜொன்னி பெயர்ஸ்டோவ்
  • உஸ்மான் கவாஜா
  • ககிஸோ றபாடா

ஐ.சி.சி. இன் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் வீரர்

  • பாபர் அசாம்
  • அடம் ஷம்பா
  • சிக்கந்தர் ரஷா
  • ஷேய் ஹோப்

ஐ.சி.சி. இன் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் வீராங்கனை

  • சப்னிம் இஸ்மைல்
  • அமெலியா கெர்
  • நேட் ஸ்கைவர்
  • அலீஷா ஹீலி

ஐ.சி.சி. இன் ஆண்டுக்கான சிறந்த T20I வீரர்

  • சூர்யகுமார் யாதவ்
  • சிக்கந்தர் ரஷா
  • சேம் கர்ரன்
  • மொஹமட் ரிஸ்வான்

ஐ.சி.சி. இன் ஆண்டுக்கான சிறந்த T20I வீராங்கனை

  • ஸ்மிரிதி மந்தனா
  • நிதா டர்
  • சோபி டிவைன்
  • தஹ்லியா மெக்ராத்

ஐ.சி.சி. இன் ஆண்டுக்கான சிறந்த வளர்ந்துவரும் வீரர்

  • மார்கோ ஜான்சென்
  • இப்ராஹிம் சத்ரான்
  • பின் அலன்
  • அர்ஷ்தீப் சிங்

ஐ.சி.சி. இன் ஆண்டுக்கான சிறந்த வளர்ந்துவரும் வீரர்

  • ரேனுகா சிங்
  • டார்சி ப்ரோன்
  • அலைஸ் கெப்சி
  • யாஷ்டிகா பாட்டியா

>> மேலும் கிரிக்கெட் செய்திகளுக்கு <<