குறைந்த ஓட்டங்கள் பெறப்பட்ட போட்டியில் கடற்படை அணி வெற்றி

BRC அணிக்கு எதிரான மேஜர் எமர்ஜிங் லீக் போட்டியில் கடற்படை விளையாட்டுக் கழகம் 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. 

வெலிசர கடற்படை மைதானத்தில் நேற்று (01) ஆரம்பமான இரண்டு நாட்கள் கொண்ட இந்தப் போட்டியில் இரு அணிகளும் சொற்ப ஓட்டங்களுக்கு விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் போட்டி பரபரப்புடன் முடிந்தது. 

இதில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட BRC அணி, கவிக்க டில்ஷான் மற்றும் சதிக்கின் அதிரடி பந்துவீச்சின் காரணமாக 102 ஓட்டங்களுக்கு சுருண்டது. கலன மதுஷங்க 42 ஓட்டங்களை பெற்றபோதும் வேறு எந்த வீரரும் சோபிக்கவில்லை. கவிக்க டில்ஷான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, சதிக் 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். 

பங்களாதேஷ் இளம் கிரிக்கெட் அணி வலுவான நிலையில்

சுற்றுலா இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் அணி, பங்களாதேஷ் 19 வயதுக்கு…

தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த கடற்படை விளையாட்டுக் கழகம் சவிந்து பீரிசின் அரைச்சதத்தின் உதவியோடு 147 ஓட்டங்களை பெற்றது. இதனால் முதல் இன்னிங்ஸில் 42 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையிலேயே BRC அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது. இரண்டாவது இன்னிங்ஸிலும் சோபிக்கத் தவறிய அந்த அணி 99 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதனால் கடற்படை விளையாட்டுக் கழகத்திற்கு 55 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டதோடு அதனை அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து எட்டியது.        

இலங்கை கிரிக்கெட் சபையினால் இளம் வீரர்களுக்காக இந்த தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

போட்டியின் சுருக்கம்

BRC (முதல் இன்னிங்ஸ்) – 102 (39.3) – கலன மதுஷங்க 42, நிமந்த குணசிறி 23, கவிக்க டில்ஷான் 5/36, சதிக் 4/30

கடற்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 147 (46.2) – சவிந்து பீரிஸ் 51, ஷலித் பெர்னாண்டோ 40, டினால் இஷேன் 24, துவிந்து திலகரத்ன 4/31, நிமந்த குணசிறி 3/1, கெவின் கொத்திகொட 2/23

BRC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 99 (42.3) – நிமந்த குணசிறி 22, சவிந்து பீரிஸ் 3/17, சதுஷ்க நிமல்ஷ 3/21, அஷேன் டில்மான் 2/17, கவிக்க டில்ஷான் 2/22

கடற்படை விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 58/5 (13) – தெவின் திலகரத்ன 3/20

முடிவு – கடற்படை விளையாட்டுக் கழகம் 5 விக்கெட்டுகளால் வெற்றி   

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<