தேசிய பயிற்சிக் குழாத்தில் இருந்து பாசித் வெளியே ; ரொஷான் இணைப்பு

184

இலங்கை கால்பந்து அணியின் மூன்றாவது கட்ட பயிற்சிகள் எதிர்வரும் 19ம் திகதி முதல் 24ம் திகதிவரை நடைபெறவுள்ளதாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது.

இலங்கையில் நடைபெறவுள்ள சுப்பர் லீக்கின் முன்பருவகால போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில், இதற்கிடைப்பட்ட காலப்பகுதியில் வீரர்களின் உடற்தகுதி, உளவியல் நிலை மற்றும் திறன் என்பவற்றை ஆராயும் வகையில் இந்த பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது.

புளூ ஸ்டாருக்கு முதல் வெற்றி; சீ ஹோக்ஸ் – நியு யங்ஸ் மோதல் சமநிலையில்

எவ்வாறாயினும், இந்த பயிற்சிகளுடன், சுப்பர் லீக் முன்பருவ போட்டி ஆரம்பமாவதற்கு இரண்டு நாட்களுக்கு முதல், வீரர்கள் அவர்களுடைய கழகங்களுக்கு அனுப்பப்படுவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆரம்பிக்கப்படவுள்ள இந்த பயிற்சியிலிருந்து உபாதை காரணமாக அப்துல் பாசித் நீக்கப்பட்டுள்ளார். இவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இவருக்கு பதிலாக டிபென்டர்ஸ் கால்பந்து கழக வீரர் ரொஷான் அப்புஹாமி குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், தனிப்பட்ட காரணங்களுக்காக பயிற்சி முகாமில் இருந்து வெளியேறியிருந்த வசீம் ராஸிக் மீண்டும் குழாத்துடன் இணைந்துக்கொண்டுள்ளார். அத்துடன், கோல் காப்பாளர் நுவான் கிம்ஹான 23 வயதுக்குட்பட்டோருக்கான குழாத்துடன் இணையவுள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனவரி 3ஆம் திகதியிலிருந்து 17ம் திகதிவரை முதற்கட்ட பயிற்சிகள் நடைபெற்றுவந்ததுடன், இரண்டாவது கட்ட பயிற்சிகளின் பின்னர், மூன்றாவது கட்ட பயிற்சிகளும் ஆரம்பமாகவுள்ளன. இந்த பயிற்சி முகாமானது, ஜூன் மாதத்தில் தேசிய அணி விளையாடவுள்ள போட்டிகளை கருத்திற்கொண்டு நடத்தப்படுவதாக இலங்கை கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.

பயிற்சிகளுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள வீரர்கள் விபரம் 

சுஜான் பெரேரா, ப்ரபாத் ருவன் அனுரசிறி, ஆர்.பி. தனுஷ்க, எம்.ஏ. நுவான் கிம்ஹான, எம். ஷலன சமீர, ரொஷான் அபுஹாமி, மதுஷான் பெர்னாந்து, ஜூட் சுபன், ஷரித்த ரத்னாயக்க, சமோத் டில்ஷான், ரிஸ்கான் பைசர், அஷிகுர் ரஹ்மான், மொஹமட் சபீர் ரசூனியா, றஹ்மான், யூ.எஸ்.டி. தனுஷ்க, சர்வான் ஜோஹர், கவிந்து இஷான், சுபுன் தனன்ஜய விஜயசிங்க, சுந்தராஜ் நிரேஷ், றிப்கான் மொஹமட், அஹமட் வஸிம் ராஸிக், ஹர்ஷ பெர்னாந்து

>>மேலும் பல கால்பந்து செய்திகளை படிக்க<<