2021இல் வடக்கின் விளையாட்டிற்கு பாரிய வேலைத்திட்டங்கள்

119

கொவிட் – 19 வைரஸை வெற்றிக்கொண்டு 2021 புத்தாண்டில் புதிய விளையாட்டு கலாசாரத்தின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு உறுதி பூண்டுள்ளது. 

விளையாட்டுக்கு பெறுமதியை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, கடந்த வருடத்தில் மாத்திரம் பல்வேறு வேலைத்திட்டங்களை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்திருந்தார்

எனவே, குறித்த வேலைத்திட்டங்களை 2021 புத்தாண்டில் மிக விரைவில் பூர்த்தி செய்து வீரர்களின் பாவனைக்காக வழங்குவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளது

விளையாட்டு திறன் மேம்பாட்டு மத்திய நிலையமாகும் கிளிநொச்சி விளையாட்டுத் தொகுதி

கல்வி அமைச்சின் கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் மேற்பார்வையின் கீழ் விளையாட்டின் ஆரம்ப இடமான உள்ள நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தி உட்கட்டமைப்பு வசதிகளை வேகப்படுத்தல், சர்வதேச ரீதியில் இந்நாட்டின் விளையாட்டை அபிவிருத்தி செய்யும் முதல்கட்டமாக விளையாட்டு பல்கலைக்கழகத்தை விரைவில் பூர்த்தி செய்தல், வரலாற்றில் முதல்தடவையாக ஹம்பாந்தோட்டை சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அண்மித்ததாக மும்மொழி கிரிக்கெட் விளையாட்டுக்கான புதிய தேசிய பாடசாலையொன்றை ஆரம்பித்தல் உள்ளிட்ட முக்கிய வேலைத்திட்டங்களை 2021இல் விளையாட்டுத்துறை அமைச்சு முன்னெடுக்கவுள்ளது.

இதில் விளையாட்டுப் பாடசாலைகளின் உட்கட்மைப்பு வசதிகளை துரிதப்படுத்தல், மேலும் புதிய விளையாட்டுப் பாடசாலைகளை உருவாக்குதல், விளையாட்டு புலமைப்பரிசில்கள் உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுகளை வீரர்களுக்கு பெற்றுக்கொடுத்தல் தொடர்பில் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட பத்திரத்துக்கு அனுமதி கிடைத்துள்ளதால் 2021இல் நிச்சயம் இலங்கையின் விளையாட்டுத்துறையில் உத்வேகம் ஏற்படும் என விளையாட்டுத்துறை அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

தேசிய விளையாட்டு பேரவையின் 2021இற்கான பாதீடு மஹேலவினால் சமர்ப்பிப்பு

இதன்படி, நாட்டில் உள்ள 26 விளையாட்டுப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல், சூரியவெவ கிரிக்கெட் தேசிய பாடசாலையில் இவ்வருடத்திலிருந்து தரம் 6 இற்கு மாணவர்களை உள்வாங்குதல், பெலவத்த நவோதய பாடசாலையை மெய்வல்லுனர் மற்றும் கரப்பந்தாட்ட பாடசாலையாக அபிவிருத்தி செய்தல், பிடிபன மஹிந்த ராஜபக்ஷ பாடசாலையை மெய்வல்லுனர் பாடசாலையாக தரமுயர்த்தல், மன்னார் முருங்கன் மகா வித்தியாலயத்தை கால்பந்து மற்றும் மெய்வல்லுனர் பாடசாலையாக அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட முன்மொழிவுகள் குறித்த அமைச்சரவை பத்திரத்தில் இடம்பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும்

இதனிடையே, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த வருடத்தில் கிராமிய மட்டத்தில் எந்தவொரு பாடசாலை மட்ட விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறவில்லை. எனினும், இவ்வருடத்தில் கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும், ஒவ்வொரு பிரதேச செயலக மட்டத்திலும், மாவட்ட மட்டத்திலும் புனரமைக்கப்பட்ட மைதானங்களில் விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்வதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நடவடிக்கை எடுப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை இடைவேளையை அதிகரிக்க விளை.துறை அமைச்சர் புது யோசனை

இதன்படி, கிராமப் புறங்களில் உள்ள இளைஞர்களின் விளையாட்டுத் திறமைகளை மேலும் அதிகரிக்கும் நோக்கில் இவ்வருடத்துக்கான வரவுசெலவு திட்டத்தில் 8,264 மில்லியன் ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

அதுமாத்திரமின்றி, கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நாட்டின் பின்தங்கிய கிராமங்களில் உள்ள திறமையான வீரர்களை தேசிய மற்றும் சர்வதேச மட்டத்துக்கு கொண்டு வருவதற்கான சவாலை வெற்றி கொள்வதே இந்தப் புத்தாண்டில் விளையாட்டுத்துறை அமைச்சின் பிரதான குறிக்கோளாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அருண சிங்கள நாளிதழுக்கு வழங்கிய நேர்காணலில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கருத்து தெரிவிக்கையில்

“விளையாட்டுப் பாடசாலைகள் அனைத்திலும் 130 மீற்றர் நீளமான செயற்கை ஓடுபாதைகளை அமைப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். டொரின்டண் மற்றும் குருநாகலில் செயற்கை ஓடுபாதைகளை இந்த வருட இறுதிக்குள் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்த்துள்ளோம். யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் தற்போது வெளிநாடொன்றுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம்

இலங்கையில் நடைபாதைகளுடன் தொடர்புடைய உடற்பயிற்சி கழகங்கள்

அத்துடன், சுகததாஸ அதிகார சபையின் நிதியினைப் பயன்படுத்தி போகம்பரையில் செயற்கை ஓடுபாதையினை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் தெரிவித்தார்.

எனவே, 2021 புத்தாண்டில் விளையாட்டுத்துறை அமைச்சினால் முன்னெடுக்கவுள்ள விளையாட்டு பாடசாலைகள், விளையாட்டு பல்கலைக்கழகம், புதிய கிரிக்கெட் தேசிய பாடசாலை, விளையாட்டுப் புலமைப்பரிசில், கிராமப்புறங்களில் புதிய விளையாட்டு அரங்குகளை நிர்மாணித்தல் உள்ளிட்ட வேலைத்திட்டங்கள் வெற்றிகரமாக இடம்பெற வேண்டும் என இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<