புளூ ஸ்டாருக்கு முதல் வெற்றி; சீ ஹோக்ஸ் – நியு யங்ஸ் மோதல் சமநிலையில்

Super League - Pre-Season 2021

338

சுகததாச அரங்கில் இடம்பெற்ற சுபர் லீக் கால்பந்து சுற்றுத் தொடருக்கான முன் பருவப் போட்டிகளின் முதல் நாள் மோதல்களில், புளூ ஸ்டார் அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் ரெட் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்த, சீ ஹோக்ஸ் – நியு யங்ஸ் இடையிலான மோதல் தலா ஒரு கோலுடன் சமநிலையடைந்தது. 

ரெட் ஸ்டார்ஸ் கா.க எதிர் புளூ ஸ்டார் வி.க 

முன் பருவத்தின் முதல் போட்டியாக இடம்பெற்ற, குழு A இற்கான இந்த ஆட்டத்தின் 15ஆவது நிமிடத்தில் மைதானத்தின் மத்தியில் இருந்து ரெட் ஸ்டார்ஸ் பின்கள வீரருக்கு மேலால் ரிசான் அனுப்பிய பந்தை பெற்ற பசால், எதிரணியின் கோல் காப்பாளரையும் தாண்டி பந்தை கடத்திச் சென்று புளூ ஸ்டார் அணிக்கான முதல் கோலை பெற்றார். 

இரண்டு குழுக்களாக மோதல் இடம்பெறவுள்ள சுபர் லீக் முன் பருவம்

அதன் பின்னர் முதல் பாதி முடிவடையும்வரை போட்டியில் கோலுக்கான வாய்ப்புகள் எதுவும் இரு அணிகளுக்கும் பெறப்படவில்லை. 

முதல் பாதி: புளூ ஸ்டார் வி.க  1 – 0 ரெட் ஸ்டார்ஸ் கா.க 

தொடர்ந்து இரண்டாம் பாதி ஆரம்பமாகி 12 நிமிடங்களில் மத்திய களத்தில் இருந்து பசால் வழங்கிய பந்தைப் பெற்ற ரிசான், அதனை வலைக்குள் செலுத்தி இரண்டு கோல்களால் புளூ ஸ்டார் அணியை முன்னிலைப் படுத்தினார். 

தொடர்ந்து புளூ ஸ்டார் வீரர் தரிந்து எரங்க மைதானத்தின் ஒரு திசையில் இருந்து கோல் நோக்கி செலுத்திய பந்தை ரெட் ஸ்டார்ஸ் கோல் காப்பாளர் முபாரக் பாய்ந்து தடுத்தார். 

அதன் பின்னர் ரெட் ஸ்டார் வீரர் இஸ்மயில் அபுமெரி வழங்கிய பந்துப் பரிமாற்றத்தை, சுபுன் தனன்ஜய கோலாக்க நேரம் எடுத்தமையினால், புளூ ஸ்டார் பின்கள வீரர்கள் பந்தை அங்கிருந்து வெளியேற்றினர். 

எனவே, போட்டி முடிவில் இரண்டு கோல்களினால் புளூ ஸ்டார் அணி வெற்றியை சுவைத்தது. 

முழு நேரம்: புளூ ஸ்டார் வி.க  2 – 0 ரெட் ஸ்டார்ஸ் கா.க

கோல் பெற்றவர்கள் 

புளூ ஸ்டார் வி.க – M. பசால் 15’, M. ரிசான் 57‘ 

இலங்கையை FIFA தரப்படுத்தலில் 150இற்கு முன்னேற்றுவோம்: அமைச்சர் நாமல்

நியு யங்ஸ் கா.க  எதிர் சீ ஹோக்ஸ் கா.க

மின்னொளியின் கீழ் ஆரம்பமாகிய இந்த ஆட்டத்தில் ஆரம்பத்தில் நியு யங்ஸ் வீரர்கள் அதிக நேரம் தமது ஆதிக்கத்தை செலுத்தினர். 

எனினும், 40ஆவது நிமிடத்தில் ஷதுர எதிரணியின் கோல் எல்லையில் இருந்து செலுத்திய பந்தை தனுஷ்க மதுசங்க கோலுக்கு அண்மையில் இருந்து வேகமாக கம்பங்களுக்குள் செலுத்தி அணியை முன்னிலைப் படுத்தினார். 

முதல் பாதி நிறைவடையும் நிமிடத்தில் எதிரணி கோல் திசைக்கு தனியே பந்தை எடுத்துச் சென்ற கெலும் சன்ஜய அதனை வெளியே அடித்தார். 

முதல் பாதி: நியு யங்ஸ் கா.க  0 – 1 சீ ஹோக்ஸ் கா.க 

இரண்டாம் பாதி ஆரம்பமாகியது முதல் இரண்டு அணிகளும் எதிர்த் தரப்பின் எல்லையில் கோலுக்கான முயற்சிகளை எடுத்தாலும் இரு அணியின் முன்கள வீரர்களும் சற்று தடுமாற்றம் கண்டனர்.  

எனினும், 65ஆவது நிமிடத்தில் சீ ஹோக்ஸ் கோல் எல்லையில் வைத்து நியு யங்ஸ் வீரர்கள் எடுத்த அடுத்தடுத்த கோல் முயற்சிகளின் நிறைவில் கவின் சுஷாரித அவ்வணிக்கான முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தார். 

முழு நேரம்: நியு யங்ஸ் கா.க  1 – 1 சீ ஹோக்ஸ் கா.க 

கோல் பெற்றவர்கள்  

நியு யங்ஸ் கா.க  –  கவின் சுஷாரித் 65’

சீ ஹோக்ஸ் கா.க –  தனுஷ்க மதுசங்க 40’

இதேவேளை, நாளை (18) இடம்பெறவுள்ள முதல் போட்டியில் டிபெண்டர்ஸ் கால்பந்து கழகம் ரினௌன் விளையாட்டுக் கழகத்தை எதிர்கொள்ளவுள்ளதுடன், நாளை இரவு இடம்பெறவுள்ள அடுத்த போட்டியில் புளூ ஈகல்ஸ் விளையாட்டுக் கழகம் கொழும்பு கால்பந்துக் கழகத்தை எதிர்கொள்ளவுள்ளது.   

>> மேலும் பல கால்பந்து செய்திகளை படிக்க <<