விறுவிறுப்பான போட்டிகளில் பார்சிலோனா, செல்சி மற்றும் PSG அணிகள் வெற்றி

151

UEFA சம்பியன்ஸ் கிண்ண கால்பந்து தொடரின் விறுவிறுப்பான 3 போட்டிகளில் பார்சிலோனா அணி தாம் பெற்ற ஓவ்ன் (own) கோலினாலும், செல்சி அணி இறுதித் தருவாயில் பெற்ற கோலினாலும் PSG அணி, தமது முன்கள வீரர்களின் அதிரடியான ஆட்டத்தாலும் தமக்கான வெற்றிகளைப் பெற்றுள்ளன.

இத்தொடரின் இரண்டாம் கட்டத்தின் இறுதிக் கட்டப் போட்டிகள் 27ஆம் திகதி நடைபெற்றன. இதில் 3 முன்னணிக் கழகங்கள் மோதிய மிகவும் விறுவிறுப்பான 3 ஆட்டங்கள் இடம்பெற்றன.

டோர்ட்மன்ட் அரங்கில் ரியல் மெட்ரிட் சாதனை

இவ்வெற்றியின் மூலம் டோர்ட்மன்ட் கழகத்தின் மைதானத்தில் இறுதியாக விளையாடிய 7 போட்டிகளின் பின்னரான தனது முதல் வெற்றியை ரியல் மெட்ரிட் அணி பதிவு செய்துள்ளது. UEFA சம்பியன் ,,,,,,,

பார்சிலோனா எதிர் ஸ்போர்டிக் (Sporting)

ஸ்போர்டிக் அணியின் அரங்கமான ஜோஸ் அல்வலாடே (Jose Alvalade) அரங்கில் நடைபெற்ற இப்போட்டியை கால்பந்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருந்த போட்டியாக குறிப்பிடலாம்.

போர்த்துக்கல் நாட்டின் கழகமான ஸ்போர்டிக் அணியின் ஆதரவாளர்கள், போர்த்துக்கலின் பிரபல வீரரும் ரியல் மெட்ரிட் அணியின் நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் புகைப்படத்துடனான “உலகத்தின் சிறந்த கால்பந்து வீரர்” என்று பொறிக்கப்பட்டிருந்த பதாதைகளுடன் பார்சிலோனா கழக வீரர்களை தமது அரங்கத்திற்கு வரவேற்றனர்.

அத்துடன் பார்சிலோனா அணியின் முன்னாள் பின்கள வீரர் ஜேரமி மெதீவ் (Jeremy Mathiew) ஸ்போர்டிக் அணியுடன் இணைந்ததன் பின்னர், பார்சிலோனா அணிக்கு எதிராக விளையாடிய முதல் போட்டி இதுவாகும்.

இந்நிலையில் ஆரம்பமான இந்தப் போட்டியின் 16ஆம் நிமிடத்தில் ஸ்போரட்டிக் அணியின் பின்கள வீரர் பிகினீ (Piccini) மூலம் கோலை நோக்கி முதல் முயற்சி எடுக்கப்பட்டது. எனினும் உதையப்பட்ட பந்து கம்பங்களிற்கு வெளியால் சென்றது.

போட்டியின் 18ஆம் நிமிடத்தில் பார்சிலோனா வீரர் ஜோடி அலபா (Jordi Alaba) வழங்கிய பந்தை, லியொனல் மெஸ்ஸி கோலை நோக்கி உதைந்த போதும் எதிரணி கோல் காப்பாளர் இலகுவாக பந்தை பற்றிக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து போட்டியின் 28 ஆம் நிமிடத்தில் பூரூனோ பெர்னான்டஸ் (Bruno Fernandez) மூலம் பெனால்டி எல்லையின் வலது பக்கத்திலிருந்து உதையப்பட்ட பந்தை பார்சிலோனா கோல் காப்பாளர் சிறப்பாகத் தடுத்தார்.

இறுதி நிமிட கோலினால் ஸாஹிராவை வீழ்த்திய புனித பத்திரிசியார் கல்லூரி

ஸாஹிராவிற்கு கிடைத்த ப்ரீ கிக்கினை மொஹமட் ரஷீட் நேரடியாக கோலினை நோக்கி பந்தை அனுப்பினார். இருந்த போதும் கோல் காப்பாளரால் அது தடுக்கப்பட்டது. ஹெய்ன்ஸ் எடுத்துச்சென்ற பந்தினை நோக்கி ஸாஹிரா கோல் காப்பாளர் முன் நகர்ந்து வந்தார்…….

முதல் பாதியின் இறுதி முயற்சியானது முன்னணி வீரர் மெஸ்ஸி மூலம் எடுக்கப்பட்டது. பிகே (Pique) மூலம் மத்திய களத்திலிருந்து வழங்கப்பட்ட பந்தை சுவாரெஸ் (Suarez) தனது கால்களுக்கிடையால் மெஸ்ஸிக்கு வழங்க, அவர் பெனால்டி எல்லையில் பெற்ற பந்தை கோலை நோக்கி உதைந்தார். எனினும், ரியல் மெட்ரிட் அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய ஸ்போர்டிக் அணி வீரருமான பெபியோ கோன்டெரோ (Fabio Contero) சிறப்பாக பந்தை தடுத்தார்.

முதல் பாதி: பார்சிலோனா 0 – 0 ஸ்போர்டிக்

போட்டியின் இரண்டாம் பாதியை ஆரம்பித்த பார்சிலோனா அணி, 48ஆம் நிமிடத்தில் ஸ்போர்டிக் அணியின் பின்களத்தின், வலது பக்கத்திலிருந்து ப்ரீ கிக் வாய்ப்பை பெற்றது.

அந்த உதையைப் பெற்ற மெஸ்ஸி பந்தை எதிரணியின் பெனால்டி எல்லைக்குள் உள்ளனுப்பியபோது, தடுப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சியின்போது, ஸ்போர்டிக் அணியின் மத்தியகள வீரர் மார்கஸ் அகுனா (Marcus Aquna) மூலம் ஓவ்ன் கோல் (Own) பெறப்பட்டதால் பார்சிலோனா அணி போட்டியில் முன்னிலை பெற்றது.

போட்டியின் 70ஆம் நிமிடத்தில் ஸ்போர்டிக் அணிக்கு போட்டியை சமப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பு கிட்டியது. பார்சிலோனாவின் மத்திய களத்தில் விடப்பட்ட தவறால் பாஸ் டொஸ்ட் (Bas Dost) தனக்கு வழங்கப்பட்ட பந்தை பார்சிலோனாவின் பெனால்டி எல்லையில் பெற்று, பந்தை வலது பக்கத்திலிருந்த பெப்ரிகாஸிற்கு வழங்கினார். பெப்ரிகாஸ் பந்தை கோலை நோக்கி உதைந்தபோதும், பார்சிலோனா கோல் காப்பாளர் சிறப்பாக பந்தை தடுத்தார்.

போட்டியின் 86ஆம் நிமிடத்தில் சுவாரெஸ், ஸ்போர்டிக் அணியின் பின்கள வீரர்களிடமிருந்து கைப்பற்றிய பந்தை போலினோவிற்கு (Paulinho) வழங்கினார். பந்தைப் பெற்ற போலினோ பெனால்டி எல்லை வரை கொண்டு சென்றபோதும், ஸ்போர்டிக் அணியின் கோல் காப்பாளர் முன்னேறிச் சென்று பந்தை தடுத்தார்.

ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் கிடைக்கப்பெற்ற பல வாய்ப்புகள் வீணடிக்கப்பட்டன.

முழு நேரம்: பார்சிலோனா 0 – 0 ஸ்போர்டிக்

தொடர் வெற்றிகளால் லா லிகா தொடரில் பார்சிலோனா முன்னிலை

லா லிகா சுற்றுப் போட்டியின் ஜந்தாவது வர நிறைவில் தாம் ஆடிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று 15 புள்ளிகளுடன் பார்சிலோனா அணி புள்ளிப் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றது ……….

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டி அன்றைய தினம் அட்லடிகோ மெட்ரிட் அணியின் புதிய அரங்கமான வன்டா மட்ரோபோலினோவில் நடைபெற்றது.

போட்டியில் இரு அணிகளும் சமமான ஆதிக்கத்தையே வழங்கின. எனினும் 40ஆம் நிமிடத்தில் பெற்ற பெனால்டி வாய்ப்பின் மூலம் அன்டோனியோ கிரிஸ்மன் (Antonio Grizemen) அட்லடிகோ மெட்ரிட் அணிக்கான முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

முதல் பாதி: செல்சி 0 – 1 அட்லடிகோ மெட்ரிட்

அதனைத் தொடர்ந்து இரண்டாம் பாதியில் அல்வாரோ மோராடா (Alvaro Morata) தனது தலையால் முட்டி பெறப்பட்ட கோலினால் போட்டி சமநிலைப் பெற்றது. வன்டா மட்ரோபோலினோ அரங்கில் மோராடா பெற்ற கோலானது அட்லடிகோ மெட்ரிட் அணிக்கு எதிராக தனது புதிய அரங்கில் பெறப்பட்ட முதல் கோலாகும்.

போட்டியின் இறுதித் தருணமான 93ஆம் நிமிடத்தில் அட்லடிகோ அணியின் பெனால்டி எல்லைக்குள் தரைவழியாக மார்கோ அலன்ஸோ (Marc Alonso) மூலம் உள்ளனுப்பப்பட்ட பந்தை மாற்று வீரராக களமிறங்கிய மிசி பட்சூயாயி (Michy Batshuyaei) கோலாக்கினார். இதன் மூலம் இறுதித் தருவாயில் செல்சி அணி வென்றது.

முழு நேரம்: செல்சி 2 – 1 அட்லடிகோ மெட்ரிட்

கைது செய்யப்பட்ட பென் ஸ்டோக்ஸ் இன்றைய போட்டியில் இருந்து நீக்கம்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை ஆட்டக்காரரும் , இங்கிலாந்து டெஸ்ட் அணியின் உப தலைவருமான 26 வயதான பென் ஸ்டோக்ஸ் ,,,,,,,,,

பரிஸ் செய்ண்ட் ஜெய்ன்ட் (PSG) எதிர் பயர்ன் முனிச்

இவ்விரு அணிகளுக்கிடையிலான பலப்பரீட்சையும் அன்றைய தினம் PSG யின் அரங்கில் நடைபெற்றது.

இப்போட்டியில் அதிரடியாக ஆடிய PSG 3-0 என்ற கோல்கள் அடிப்படையில் வென்றது. PSG அணிக்காக டேனி அல்வெஸ் (Dani Alves) இரண்டாம் நிமிடத்திலும், எடிஸன் கவானி (Edison Cavani) 31ஆம் நிமிடத்திலும், நெய்மர் JP 63ஆம் நிமிடத்திலும் கோல்களை பெற்றனர். அத்துடன் கெய்லன் எம்பாப்பே (Kylian Mbappe) தனது அணி இரு கோல்களை பெற காரணமாக அமைந்தார்.

போட்டியில் பயர்ன் முனிச் கழகத்தால் அதிக ஆதிக்கம் செலுத்தப்பட்டது. எனினும், கிடைக்கப்பெற்ற வாய்ப்புக்களைப் பயன்படுத்துவதில் பயர்ன் முனிச் அணி வீரர்கள் தோல்வி கண்டனர்.

பயர்ன் அணியின் கோல் காப்பாளரான மனுவேல் நெயுர் (Manuel Neuer) உபாதைக்குள்ளாகி விளையாடாத தருணத்தில், அவ்வணியின் முக்கிய வீரர்களான பிரன்க் ரிபரி (Frank Ribery) மற்றும் அயர்ன் ரொபின் (Arjen Robben) ஆகியோர் இப்போட்டியின் முதல் பதினொரு வீரர்களில் அடங்காதது ஆச்சரியமாகவே காணப்பட்டது.

முழு நேரம்: PSG 3 – 0 பயர்ன் முனிச்

மேலும் சில போட்டி முடிவுகள்

மெ.யுனைடட் 4 – 1 மொஸ்கோ

செல்டிக் 3 – 0 அன்டலர்ச்சட்

பார்சல் 5 – 0 பெனிவீசியா

ஜுவன்டஸ் 2 – 0 ஓலிம்பியாஸஸ்