வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் ஐ.பி.எல் தொடருக்கு சென்னை அணி மறுப்பு

65
CSK

இந்திய வீரர்களை மட்டும் வைத்து இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட் தொடரை நடத்தும் யோசனையை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிராகரித்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்தாண்டு நடக்க வேண்டிய .பி.எல் கிரிக்கெட் தொடர் காலவலையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது

4000 கோடி நஷ்டத்தை சந்திக்குமா BCCI??

இந்த ஆண்டு இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) போட்டிகள் நடைபெறாது போனால்…

இதற்கிடையில் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டால், செப்டம்பர் – ஒக்டோபர் மாதம் .பி.எல்  கிரிக்கெட் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. 

முன்னதாக வெளிநாட்டு வீரர்கள் பயணம் செய்ய தடை உள்ளதால், இந்திய வீரர்களை மட்டும் வைத்து .பி.எல் கிரிக்கெட் தொடரை நடந்த பிசிசிஐ திட்டமிட்டு வந்தது

கொரோனா வைரஸ் தொற்றால் பிற்போடப்பட்டுள்ள இந்த வருடத்துக்கான .பி.எல் தொடர் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மறுபுறத்தில் .பி.எல் தொடர் ரத்தானால் 4,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது

முன்னதாக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி இந்திய வீரர்களை மாத்திரம் வைத்து .பி.எல் தொடரை நடத்தலாம் என ஆலோசனை தெரிவித்திருந்தது.

இந்நிலையில் வெளிநாட்டு வீரர்கள் இல்லை என்றால் இவ்வருடம் நடைபெறவுள்ள .பி.எல் தொடரை நடத்துவதில் பயனில்லை என்று சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்வாகி ஒருவர் தகவல்கள் கூறுகையில், வெறும் இந்திய வீரர்களை வைத்து மட்டும் .பி.எல் கிரிக்கெட் தொடரை நடத்தும் யோசனைக்கு CSK அணி நிர்வாகம் ஒப்புக்கொள்ளவில்லை.   

ஒருவேளை இந்திய வீரர்களை மட்டும் .பி.எல் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டால் உள்ளூர் தொடரான சையது முஸ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடர் போல இருக்கும்

நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருவதால் பிசிசிஐயிடம் எந்த அணி நிர்வாகமும் தொடர்பில் இல்லை. இந்தாண்டு இறுதியில் .பி.எல் கிரிக்கெட் தொடர் நடக்கும் என எதிர்பார்க்கலாம்” என்றார்.

IPL போட்டிகளை நடத்த ஐக்கிய அரபு இராட்சியம் கோரிக்கை

கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள 13ஆவது இந்தியன்..

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மூன்று முறை சம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்தாண்டு .பி.எல் தொடர் நடக்கவில்லை என்றால் கிரிக்கெட் அவுஸ்திரேலியா போல பிசிசிஐயும் மிகப்பெரிய பொருளாதார சிக்கலுக்கு முகங்கொடுக்கும்.  

இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் .பி.எல் கிரிக்கெட் தொடரை நடத்த முடியாமல் போனாலும், இலங்கை, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகள் .பி.எல் தொடரை நடத்த முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<