நஸீம் சாஹ்விற்கு உபாதை சிக்கல்கள் ஏற்படவில்லை – பாபர் அசாம்

185

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளரான நஸீம் சாஹ், உபாதைகள் எதற்கும் முகம் கொடுக்கவில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவரான பாபர் அசாம் குறிப்பிட்டிருக்கின்றார்.

>> ஆசியக் கிண்ணத்தை வெற்றியுடன் ஆரம்பித்த இந்தியா

நேற்று (28) பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் இடையில் நடைபெற்ற ஆசியக் கிண்ண T20I  மோதலில் நஸீம் சாஹ் தன்னுடைய இறுதி ஓவரினை வீசும் போது சிரமப்பட்டிருந்ததனை அவதானிக்க முடியுமாக இருந்தது.

எனினும் சிரமத்தினை அடுத்து தன்னுடைய இறுதி ஓவரினை முழுமையாக வீசி முடித்த நஸீம் சாஹ் இந்திய அணிக்கு எதிரான அவரின் கன்னி T20I போட்டியில் கே.எல். ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் விக்கெட்டுக்களை பதம் பார்த்து சிறப்பான பந்துவீச்சினை வெளிப்படுத்தியிருந்தார்.

பின்னர் நஸீம் சாஹ்வின் பந்துவீச்சை தாண்டியும் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று, ஆசியக் கிண்ணத் தொடரில் தமது முதல் வெற்றியினைப் பதிவு செய்தது. ஆனால் நஸீம் சாஹ் உபாதைக்குள்ளாகியிருந்தாரா? என்கிற சந்தேகம் தொடர்ந்து நிலவியிருந்தது.

>> WATCH – ஆசியக் கிண்ண கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் | முழுமையான பார்வை!

இந்த சந்தர்ப்பத்தில் நஸீம் சாஹ்வின் உபாதை குறித்து கருத்து வெளியிட்ட பாபர் அசாம், அவருக்கு போட்டியின் போது ஏற்பட்ட வலி அதிக அழுத்தம் காரணமாக உருவான வலி என்றும், நஸீம் சாஹ்வின் உடற்தகுதி தொடர்பில் பயப்படத் தேவை இல்லை என்றும் தெரிவித்திருந்திருந்தார்.

இன்னும் நஸீம் சாஹ் ஆசியக் கிண்ணத் தொடரின் எஞ்சிய போட்டிகளில் விளையாடுவதில் எந்த தடையும் இருக்காது என்பதனையும் பாபர் அசாம் உறுதி செய்திருந்தார்.

பாகிஸ்தான் அணி ஆசியக் கிண்ண T20I தொடரின் தமது அடுத்த போட்டியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (02) ஹொங் கொங் அணியினை எதிர்கொள்ளவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<