சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து 19 வயதின் கீழ் (U19) கிரிக்கெட் அணிகள் இடையே நடைபெறும் இளையோர் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநிறைவில் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்துள்ள இலங்கை இளையோர் கிரிக்கெட் அணி சிறந்த ஆரம்பத்தை பெற்றுள்ளது.
>> முதல் நாளில் அபாரம் காண்பித்த இங்கிலாந்தின் இளம் கிரிக்கெட் வீரர்கள்
டேர்பி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (28) ஆரம்பித்த இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது, தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி 90 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 268 ஓட்டங்கள் பெற்றது. களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்ரி சிங் 98 ஓட்டங்களுடனும், பேர்டி போர்மன் 2 ஓட்டங்களுடனும் காணப்பட்டிருந்தனர்.
தொடர்ந்து போட்டியின் இரண்டாம் நாளான திங்கட்கிழமை (29) முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து இளையோர் அணி இரண்டாம் நாளில் 122.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 381 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது.
இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் ஹர்ரி சிங் 6 சிக்ஸர்கள் அடங்கலாக 104 ஓட்டங்கள் எடுக்க, அரைச்சதம் விளாசிய ஜேம்ஸ் சேல்ஸ் 52 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
இலங்கை பந்துவீச்சில் சஹான் மிஹிர, ரவீன் டி சில்வா, துவின்து ரணதுங்க மற்றும் வனுஜ சஹான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டினர்.
பின்னர் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை U19 கிரிக்கெட் அணி, ஆரம்பத்தில் அசித்த வன்னிநாயக்கவின் விக்கெட்டை இழந்து சிறு தடுமாற்றம் காட்டிய போதும் செவோன் டேனியல், அபிஷேக் லியனராச்சி ஆகியோரின் திறமையான ஆட்டத்தோடு, போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 55 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து 203 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது.
>> ஆசியக் கிண்ணத்தை வெற்றியுடன் ஆரம்பித்த இந்தியா
இலங்கை U19 கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டத்தில் அபிஷேக் லியனராச்சி 8 பெளண்டரிகள் அடங்கலாக 49 ஓட்டங்கள் பெற்றதோடு, இரண்டாம் விக்கெட் இணைப்பாட்டமாக செவோன் டேனியல் உடன் இணைந்து 116 ஓட்டங்களையும் பகிர்ந்திருந்தார்.
இதேநேரம் சதத்தினை நெருங்கியிருக்கும் செவோன் டேனியல் 92 ஓட்டங்களுடனும், பவன் பதிராஜ 37 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது நிற்கின்றனர்.
இங்கிலாந்து இளம் அணி பந்துவீச்சில் டோம் லேவ்ஸ் மாத்திரம் ஒரு விக்கெட்டினை சாய்த்திருந்தார்.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Harry Singh | b sahan mihira | 104 | 304 | 6 | 0 | 34.21 |
Ben McKinney | c Asitha Wanninayake b Wanuja Sahan | 22 | 34 | 3 | 0 | 64.71 |
Ross Whitfield | c & b Wanuja Sahan | 2 | 8 | 0 | 0 | 25.00 |
James Rew | c Lahiru Dewatage b Duvindu Ranatunga | 9 | 22 | 2 | 0 | 40.91 |
Matthew Hurst | c Lahiru Dewatage b sahan mihira | 116 | 189 | 11 | 0 | 61.38 |
Bertie Foreman | c Raveen de Silva b Duvindu Ranatunga | 10 | 29 | 1 | 0 | 34.48 |
James Sales | b Vinuja Ranpul | 52 | 66 | 6 | 0 | 78.79 |
Tom Lawes | run out (Duvindu Ranatunga) | 10 | 22 | 1 | 0 | 45.45 |
Stanley McAlindon | c & b Raveen de Silva | 20 | 41 | 2 | 0 | 48.78 |
Benjamin Cliff | c Lahiru Dewatage b Raveen de Silva | 2 | 11 | 0 | 0 | 18.18 |
Yousef Majid | not out | 11 | 12 | 2 | 0 | 91.67 |
Extras | 23 (b 11 , lb 6 , nb 4, w 2, pen 0) |
Total | 381/10 (122.2 Overs, RR: 3.11) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Vinuja Ranpul | 18 | 1 | 81 | 1 | 4.50 | |
Duvindu Ranatunga | 23 | 4 | 58 | 2 | 2.52 | |
sahan mihira | 19 | 4 | 75 | 2 | 3.95 | |
Wanuja Sahan | 31 | 8 | 67 | 2 | 2.16 | |
Raveen de Silva | 23.2 | 4 | 56 | 2 | 2.41 | |
Shevon Daniel | 1 | 0 | 2 | 0 | 2.00 | |
Asitha Wanninayake | 7 | 1 | 25 | 0 | 3.57 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Asitha Wanninayake | b Tom Lawes | 4 | 14 | 1 | 0 | 28.57 |
Abisheak Liyanaarachchi | run out (Bertie Foreman) | 49 | 91 | 8 | 0 | 53.85 |
Shevon Daniel | c Harry Singh b Benjamin Cliff | 155 | 237 | 25 | 1 | 65.40 |
Pawan Pathiraja | c James Rew b Benjamin Cliff | 55 | 155 | 9 | 0 | 35.48 |
Ranuda Somarathne | c Benjamin Cliff b Bertie Foreman | 37 | 67 | 7 | 0 | 55.22 |
Raveen de Silva | lbw b Yousef Majid | 74 | 197 | 7 | 1 | 37.56 |
Lahiru Dewatage | b James Sales | 0 | 6 | 0 | 0 | 0.00 |
Vinuja Ranpul | c Ben McKinney b Yousef Majid | 65 | 108 | 7 | 2 | 60.19 |
Wanuja Sahan | c James Sales b Bertie Foreman | 2 | 10 | 0 | 0 | 20.00 |
Duvindu Ranatunga | c James Sales b Yousef Majid | 54 | 58 | 8 | 2 | 93.10 |
sahan mihira | not out | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Extras | 47 (b 10 , lb 22 , nb 3, w 12, pen 0) |
Total | 542/10 (157.1 Overs, RR: 3.45) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Benjamin Cliff | 28 | 3 | 94 | 2 | 3.36 | |
Tom Lawes | 18 | 3 | 50 | 1 | 2.78 | |
Stanley McAlindon | 12 | 1 | 62 | 0 | 5.17 | |
James Sales | 20 | 4 | 53 | 1 | 2.65 | |
Yousef Majid | 36.1 | 10 | 104 | 3 | 2.88 | |
Bertie Foreman | 41 | 8 | 139 | 2 | 3.39 | |
Ben McKinney | 2 | 0 | 8 | 0 | 4.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Harry Singh | c Asitha Wanninayake b Raveen De Silva | 25 | 57 | 2 | 0 | 43.86 |
Ben McKinney | lbw b Raveen de Silva | 74 | 104 | 9 | 0 | 71.15 |
Ross Whitfield | st Lahiru Dewatage b Shevon Daniel | 63 | 46 | 5 | 4 | 136.96 |
James Rew | not out | 34 | 77 | 4 | 0 | 44.16 |
Matthew Hurst | lbw b Wanuja Sahan | 6 | 14 | 0 | 0 | 42.86 |
James Sales | b Raveen de Silva | 1 | 6 | 0 | 0 | 16.67 |
Tom Lawes | not out | 33 | 55 | 3 | 0 | 60.00 |
Extras | 13 (b 0 , lb 8 , nb 1, w 4, pen 0) |
Total | 249/5 (59.4 Overs, RR: 4.17) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Duvindu Ranatunga | 4 | 0 | 26 | 0 | 6.50 | |
Wanuja Sahan | 17 | 4 | 52 | 1 | 3.06 | |
sahan mihira | 10 | 0 | 48 | 0 | 4.80 | |
Raveen de Silva | 22 | 2 | 83 | 3 | 3.77 | |
Shevon Daniel | 6 | 0 | 31 | 1 | 5.17 | |
Ranuda Somarathne | 0.4 | 0 | 1 | 0 | 2.50 |
போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடரும்
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<