உலக கால்பந்து ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து நிற்கும் தொடர்களில் ஒன்றான ஸ்பெய்னின் லா லிகா சுற்றுத் தொடரின் 2017/18 பருவகாலத்திற்கான போட்டிகள் இம்மாதம் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

பார்சிலோனா, ரியல் மெட்ரிட், அட்லடிகோ மெட்ரிட் மற்றும் செவில்லியா போன்ற பல பிரசித்தி பெற்ற அணிகள் உட்பட மொத்தம் 20 அணிகளைக் கொண்ட இச்சுற்றுப் போட்டியின் கடந்த பருவகால சம்பியன் பட்டத்தை ரியல் மெட்ரிட் சுவீகரித்தது.  

அத்துடன் லியொனல் மெஸ்ஸி, கிரிஸ்டியானோ ரொனால்டோ, அன்டோனியோ கிரீஸ்மன் போன்ற பல பிரபல வீரர்கள் இச் சுற்றுப் போட்டியில் விளையாடுவதால், இத்தொடர் பார்வையாளர்களிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

பத்தாவது முறையாகவும் ஸ்பானிய சுப்பர் கிண்ணத்தை வென்றது ரியல் மெட்ரிட்

ரியல் மெட்ரிட் கால்பந்துக் கழக அணி தனது மிகப் பெரிய போட்டியாளரான…

பல புதிய வீரர்களின் இணைவுடனேயே இந்த பருவகாலத்திற்கான லா லிகா சுற்றுப் போட்டி ஆரம்பமாக இருக்கின்றது. குறிப்பாக இப்பருவகாலத்திற்கான பார்சிலோனா அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக, 2013ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையில் அத்லடிக் பில்பாகு அணியின் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய ஸ்பெய்ன் நாட்டை சேர்ந்த எர்நேஸ்டோ வல்வாடே கடமையாற்ற உள்ளார்.  

கடந்த வருடம் பார்சிலோனா அணியானது ரியல் மெட்ரிட் அணியிடம் 3 புள்ளிகள் வித்தியாசத்தில் கிண்ணத்தை தவறவிட்டது. இவ்வருடம் இச்சவாலை எவ்வாறு எர்நேஸ்டோ முறியடிக்கப் போகிறார் என்பதை காண பார்சிலோனா ஆதரவாளர்கள் ஆர்வமாய் உள்ளனர்.

Photo Courtesy - thefalse9.com - ரியல் மெட்ரிட் அணியின் புதிய வீரர் டேனி ஸேபலோஸ்
Photo Courtesy – thefalse9.com – எர்நேஸ்டோ வல்வாடே – பார்சிலோனானவின் புதிய பயிற்றுவிப்பாளர்

அத்துடன் பிரசித்தி பெற்ற கால்பந்து வீரரான நெய்மார் JR இன் விலகலுடனும் பிரேசில் வீரர் பார்லினியோ மற்றும் போர்த்துக்கல் வீரர் நெல்சன் சேமேடோ போன்ற வீரர்களின் வருகையுடனும் புதிய ஒரு திருப்பத்துடனேயே இம்முறை லா லிகா சுற்றுப் போட்டியில் பார்சிலோனா அணி களமிறங்குகின்றது.

அதேபோன்று, கடந்த வருட லா லிகா சம்பியனான ரியல் மெட்ரிட் இவ்வருடமும் ஸினேடின் ஸிடேனின் பயிற்றுவிப்பின்கீழ் கிண்ணத்தை சுவீகரிக்க எதிர்பாத்திருக்கின்றது. எனினும், கடந்த பருவகாலத்தில் லா லிகா மற்றும் UEFA கிண்ணம் என்பவற்றை சுவீகரிக்க ரியல் மெட்ரிட் அணிக்கு பெரும் பங்களிப்பு வழங்கிய கொலம்பிய வீரர் ஜேம்ஸ் ரொட்றிக்ஸ் மற்றும் ஸ்பெய்ன் வீரர் அல்வாரோ மோரோடா ஆகியோர் வேறு கழகங்களுக்காக விளையாட இணைந்துள்ளனர்.    

மென்செஸ்டர் யுனைடெட் கழகத்திற்காக விளையாடும் உசேன் போல்ட்

உலகின் அதிவேக வீரரும், கடந்த வாரம் சர்வதேச மெய்வல்லுனர் அரங்கிலிருந்து…

எனினும், அந்த குறைகளைப் போக்குவதற்காகவும், அணியை மேலும் வலுவூட்டுவதற்காகவும் டேனி ஸேபலோஸ் மற்றும் தியோ ஹேனன்டர்ஸ் போன்ற ஸ்பெய்னின் இளம் வீரர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

டீயோகா செமியோனி தலைமையிலான அட்லடிகொ மெட்ரிட் அணியானது கிண்ணத்தை கைப்பற்றுவதற்காக ஸ்பெய்ன் நாட்டின் செவில்லியா அணிக்காக விளையாடிய விடோலோவை தமது அணியுடன் இணைத்துக் கொண்டுள்ளது. அவர்கள் மேலும் பல முக்கிய வீரர்களை இணைத்துக் கொள்வதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வணியானது கடந்த வருடம் பார்சிலோனா, ரியல் மெட்ரிட், செவில்லியா போன்ற வலுவான அணிகளுக்கு சவால் விடுக்கக்கூடிய அணியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

எர்நேஸ்டோ வல்வாடே – பார்சிலோனானவின் புதிய பயிற்றுவிப்பாளர்
        ரியல் மெட்ரிட் அணியின் புதிய வீரர் டேனி ஸேபலோஸ்

கடந்த பருவகாலத்தில் ஜோர்ஜ் ஸம்போலியின் பயிற்றுவிப்பின் கீழ் 72 புள்ளிகளைப் பெற்று லா லிகா சுற்றுப் போட்டியில் 4வது இடத்தைப் பெற்றுக்கொண்ட செவில்லியா அணியின் புதிய பயிற்றுனராக ஆர்ஐன்டீன நாட்டைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கால்பந்து வீரரான எடுவார்ட் பிரிஸ்ஸோ நியமிக்கப்பட்டுள்ளார்.  

பல அனுபவம் மிக்க வீரர்களைக் கொண்ட இவ்வணிக்கு கொலம்பிய வீரர் லுயிஸ் முயிரியல் மற்றும் ஸ்பெய்ன் வீரர் நோலிடோ போன்ற பல வீரர்களும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். தமது அணியை மேலும் பலம் பொருந்தியதாக மாற்றி இவ் வருட லா லிகா கிண்ணத்தை கைப்பற்றுவதற்காகவே இவர்கள் இணைத்துக் கொள்ளபட்டுள்ளனர்.

பிஃபா தரவரிசையில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறிய பிரேசில்

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிஃபா) புதிய தரவரிசை பட்டியலில் உலகக்…

அதேவேளை, விலரல் ரியல் ஸோஸிடட் வேலன்ஸியா மற்றும் லஸ்பல்மாஸ் போன்ற அனைத்து அணிகளும் பல புதிய திட்டங்களுடனும் பல புதிய ஓப்பந்தங்களுடனும் லா லிகா சுற்றுப் போட்டியை கோலாகலமாக்க உள்ளனர்.  

இவ்வாறான மாற்றங்கள் அனைத்தும் கால்பந்து ரசிகர்களுக்கு இந்த பருவகால சுற்றுப் போட்டியானது பெரும் விருந்தாக அமையும் என்பற்கு சிறந்த உதாரணமாக உள்ளது.