ஆப்கான் உள்ளூர் T20 போட்டியில் பந்துவீசிய அணி உரிமையாளர்

177
Abdul-Latif-Ayobi

ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற உள்ளூர் T20 லீக் கிரிக்கெட் தொடரில் காபுல் ஈகல்ஸ் அணியின் உரிமையாளரான அப்துல் லத்தீப் அய்யூபி என்பவர், இறுதி பதினொருவர் அணியில் விளையாடியதால் தடையை சந்தித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை ஸ்பாகீசா (SHPAGEEZA CRICKET LEAGUE 2020) என்ற T20 லீக் கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. இதில் ஆறு அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன

>> இலங்கையில் கிரிக்கெட் விளையாட விரும்பும் ஸ்ரீசாந்த்!

இதில் காபுல் ஈகிள்ஸ் அணியின் உரிமையாளராக அப்துல் லத்தீப் அய்யூபி உள்ளார். 40 வயதான இவர் மித வேகப் பந்துவீச்சாளர் ஆவார்.

இந்தத் தொடருக்கான காபுல் ஈகிள்ஸ் அணியில் வீரர்கள் பட்டியலில் இவர் இடம்பெறவில்லை. என்றாலும், ஸ்பீன் கார் டைகர்ஸ் அணிக்கெதிராக கடந்த 13ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் காபுல் ஈகல்ஸ் அணியின் உரிமையாளரான அப்துல் லத்தீப் அய்யூபி 11 பேர் கொண்ட அணியில் இடம்பிடித்து ஒரு ஓவரை வீசினார். இதில் அவர் 16 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. 

எனினும், 142 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு களமிறங்கிய காபுல் ஈகிள்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பையும் பெற்றுக் கொண்டது.

இதனிடையே, காபுல் ஈகல்ஸ் அணி உரிமையாளரின் பெயர் வீரர்கள் பட்டியலில் இடம்பெறாத நிலையில், அவரும் ஒரு வீரராக பதினொருவர் அணியில் சேர்ந்து விளையாடியதால் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை அவருக்கு தடை விதித்துள்ளது.  

>> Video – கொரோனாவினால் மீண்டும் தள்ளிப் போகும் பங்களாதேஷ் தொடர்? |Sports RoundUp – Epi 132

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஒழுக்க விதிமுறை சட்டக்கோவைக்கு அமைய இலக்கம் 9 மற்றும் 18ஆவது சரத்துக்களை மீறிய குற்றச்சாட்டில் அவருக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஆப்பகானிஸ்தான் பணப் பெறுமதியில் 30 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது

இதனால் குறித்த தொடரின் எஞ்சிய போட்டிகளில் காபுல் ஈகிள்ஸ் அணியுடன் இவர் செல்ல முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை, ஆறு அணிகள் பங்கேற்ற ஸ்பாகீசா T20 லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று (16) காபுல் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் மிஸ்அய்னக் நைட்ஸ் அணியை 9 ஓட்டங்களால் விழ்த்திய ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ் தலைமையிலான காபுல் ஈகல்ஸ் அணி சம்பியன் பட்டத்தை வெற்றி கொண்டது

குறித்த தொடரில் அந்த அணி 2ஆவது தடவையாகவும் சம்பியன் பட்டம் வென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.  

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<