கோப்பா அமெரிக்கா தொடருக்கு பிரேசில் அணியில் நெய்மார் இல்லை

161

கட்டாருக்கு எதிராக 2-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி வெற்றி பெற்ற பிரசிலியாவில் நடைபெற்ற நட்புறவு கால்பந்து போட்டியின்போது கணுக்கால் உபாதைக்கு உள்ளான முன்னணி வீரர் நெய்மார், தனது சொந்த மண்ணில் நடைபெறவுள்ள கோபா அமெரிக்கா தொடரில் இருந்து விலகியுள்ளார்.

மத்தியஸ்தரை அவமதித்த நெய்மாருக்கு 3 ஐரோப்பிய போட்டிகளில் தடை

சம்பியன்ஸ் லீக் தொடரில் மென்செஸ்டர் ……

கடந்த மே மாதம் பிரேசில் அணியின் தலைமைப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட 27 வயதுடைய பரிஸ் செயிண்ட் ஜெர்மைன் அணியின் முன்கள வீரரான நெய்மார், கட்டாருக்கு எதிராக புதன்கிழமை நடந்த போட்டியின் 17 ஆவது நிமிடத்தில் வைத்து நொண்டியபடி மைதானத்தை விட்டு வெளியேறினார்.   

குறித்த போட்டியின் 16 ஆவது நிமிடத்தில் ரிசாலிசன் முதல் கோலை போட்டு பிரேசில் அணியை முன்னிலை பெறச் செய்ததோடு எட்டு நிமிடங்கள் கழித்து மன்செஸ்டர் சிட்டி முன்கள வீரர் கப்ரியல் ஜேசுஸ் இரண்டாவது கோலை புகுத்தினார்.

பிரேசில் அணியின் உதவிப் பணியாளர்களின் உதவியோடு மைதானத்தை விட்டு அழைத்துச் செல்லப்பட்ட நெய்மார் மருத்துவமனையில் ஸ்கேன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். எனினும், அவரது உபாதை மோசமானதில்லை என்று நம்பப்படுகிறது.

கடந்த 2017 ஓகஸ்ட் மாதம் 222 மில்லியன் யூரோக்களுக்கு பார்சிலோனாவில் இருந்து பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் அணிக்குச் சென்ற நெய்மார், இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஜனவரி தொடக்கம் ஏப்ரல் வரை தனது வலது கால் முன்பாதப் பகுதியில் ஏற்பட்ட உபாதையால் போட்டிகளில் ஆட முடியாமல் இருந்தார்.

ஐரோப்பிய லீக் சம்பினாக முடிசூடிய செல்சி

ஈடன் ஹசார்ட்டின் இரட்டை கோல் மூலம் ஆர்சனல் கழகத்தை ……..

இதே உபாதை காரணமாக 2018 ஆம் ஆண்டு சத்திர சிகிச்சை செய்து கொண்டு மூன்று ஆண்டுகள் ஓய்வெடுத்த நிலையில் உலகக் கிண்ண போட்டிகளுக்கே அவர் அணிக்குத் திரும்பினார்.

ரசிகர் ஒருவரை தாக்கியது உட்பட ஒழுக்காற்று விவகாரம் காரணமாக தேசிய அணித் தலைமைப் பொறுப்பில் இருந்து நெய்மார் நீக்கப்பட்ட நிலையில் தனது பரிஸ் செயிண்ட் ஜெர்மைன் அணி சக வீரரான டானியல் அல்வேஸிடம் பிரேசில் அணியின் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்க மண்டலத்திற்கான கோபா அமெரிக்கா தொடரில் பிரேசில் அணி 2007 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறை கிண்ணத்தை வெல்லும் எதிர்பார்ப்புடனேயே இம்முறை களமிறங்குகிறது. மொத்தமாக 12 அணிகள் பங்கேற்கும் கோபா அமெரிக்கா தொடர் வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 14) ஆரம்பமாகவுள்ளது.

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<