சம்பியன் அணியை கௌரவிக்கும் இங்கிலாந்து

294
©AFP

கடந்த வாரம் நிறைவுற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள், அந்நாட்டு பிரதமர் தெரேசா மேயை சந்தித்து வாழ்த்து பெற்றனர். 

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) லண்டனிலுள்ள லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அணி சம்பியனாகத் தெரிவாகியது. இதன்மூலம், கனவான்களின் விளையாட்டான கிரிக்கெட்டை உலகுக்கு அறிமுகப்படுத்திய இங்கிலாந்தின் 44 வருடகால கிரிக்கெட் கனவு நனவாகியது.

கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதி மோதலை அலங்கரித்த சுவாரசியங்கள்

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 12ஆவது …..

இந்த நிலையில், தற்போது இங்கிலாந்து அணிக்கு உலகம் முழுவதும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. அத்துடன், முதல் முறையாக இங்கிலாந்து அணி உலகக் கிண்ணத்தை வென்றதை அந்நாட்டு ரசிகர்கள் பெருமிதத்துடன் கொண்டாடி வருகின்றனர்

இதுஇவ்வாறிருக்க, இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பிரதமர் தெரேசா மேயை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்து நேற்றுமுன்தினம் (15) சந்தித்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள், அவரிடம் வாழ்த்து பெற்றனர்

கிரிக்கெட் விளையாட்டை உலகிற்கு அறிமுகப்படுத்திய இங்கிலாந்து அணி வரலாற்றை புதுப்பித்துள்ளதாக இதன்போது தெரேசா மே தெரிவித்துள்ளார். சொந்த மண்ணில் கிரிக்கெட்டை நேசிக்கும் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை இங்கிலாந்து வீரர்கள் பூர்த்தி செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டு மக்களுக்கு கிரிக்கெட்டை மீண்டும் காதலிக்க நீங்கள் உதவியுள்ளீர்கள். இறுதிப் போட்டி கிரிக்கெட்டை மட்டுமல்ல, விளையாட்டிலும் மிகச் சிறந்ததாக இருந்தது. தைரியம், விளையாட்டுத்திறன், நம்பமுடியாத திறமை மற்றும் அதிஷ்டம் என அனைத்தும் இந்தப் போட்டியின் மூலம் உருவாகியிருந்தன. இது எங்கள் சிறந்த விளையாட்டுகளில் ஒன்றாகும்.

இது ஒரு சிறந்த போட்டித் தொடராக இருந்ததற்கு ஒரு பொருத்தமான முடிவையும் பெற்றுக் கொடுத்தது. மேலும் நம் நாட்டை மீண்டும் விளையாட்டு உலகில் முன்னணி பெறச் செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்எனவும் தெரேசா மே தெரிவித்தார்

துடுப்பாட்டம், பந்துவீச்சு என சகலதுறையிலும் கலக்கிய பென் ஸ்டோக்ஸ்

12 ஆவது ஐ.சி.சி உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்……

இதனிடையே, இங்கிலாந்து குழாத்தில் இடம்பெற்ற அனைத்து வீரர்களையும் உள்ளடக்கிய வகையிலான கையொப்பத்துடன் நினைவு பரிசொன்றையும் தெரேசா மேயிற்கு இயென் மோர்கன் தலைமையிலான வீரர்கள் இதன்போது பரிசளித்துள்ளனர்

அத்துடன், உலகக் கிண்ணத்தை கையில் ஏந்தியவாறு தெரேசா மேயுடன் அவர்கள் குழுவாக இருந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டதுடன், விசேட விருந்து உபசாரமும் இங்கிலாந்து அணிக்கு வழங்கப்பட்டது

இதேவேளை, உலகக் கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து வீரர்களுக்கு பிரித்தானியாவின் இரண்டாவது மகாராணியான எலிசெபெத் வாழ்த்து கூறியுள்ளார்.

எலிசெபெத் மகாராணி மற்றும் இளவரசர் பிலிப் ஆகியோரால் வழங்கப்பட்ட வாழ்த்து அட்டையை இங்கிலாந்தின் றோயல் தபால் சேவை வீரர்களுக்கு பரிசளித்துள்ளது.

அத்துடன், இந்த வரலாற்று வெற்றியைக் கொண்டாடும் பொருட்டு இங்கிலாந்தில் அமைந்துள்ள 15 தபால் நிலையங்களின் அஞ்சல் பெட்டிகளில் முழுமையாக வெள்ளை நிறத்துக்கு மாற்றி தங்க முழாமில் அலங்கரிப்பதற்கும் தீர்மானிக்கட்டுள்ளது.

இங்கிலாந்து அணித்தலைவர் ஒய்ன் மோர்கன் மற்றும் 2017 ஆம் ஆண்டு மகளிர் உலகக் கிண்ணத்தை இங்கிலாந்துக்கு வென்று கொடுத்த ஹீதர் நைட் ஆகியோரின் தனித்துவத்தை உலகம் முழுவதும் தெரியப்படுத்துவதே இதன் நோக்கமாகும். அத்துடன், இந்த ஓவியங்கள் 3 மாதங்களுக்கு நீடிக்கும் வகையில் அலங்கரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாகாண மட்ட ஆரம்ப போட்டிகளில் கொழும்பு, கண்டிக்கு வெற்றி

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் 19 ………

முன்னதாக, 2012 லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இங்கிலாந்து வீரர்களை கௌரவிக்கும் வகையில் இங்கிலாந்தின் றோயல் தபால் சேவையினால் அஞ்சல் பெட்டிகளை சிவப்பு நிறத்தினால் மாற்றி தங்க முழாமில் அலங்கரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை நினைவுகூறத்தக்கது

அத்துடன், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில், உலக சம்பியன் பட்டத்தை வென்ற இங்கிலாந்து வீரர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்களை நேற்று முன்தினம் (16) சந்தித்துள்ளனர்.

கிரிக்கெட் விளையாட்டு தொடர்பில் பாடசாலை மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கில் இங்கிலாந்து கிரிக்கெட் சபை இந்தத் திட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<