ஐ.பி.எல் தொடரில் இன்னுமொரு உபாதை

268
Ashish Nehra

9வது ஐ.பி .எல் தொடரில் 50 போட்டிகள் முடிவுற்றுள்ள நிலையில் இன்னும் 10 போட்டிகள் மட்டுமே மீதமாக உள்ளன. ஒவ்வொரு அணியும் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால் இனிவரும் அனைத்து போட்டிகளிலும் அல்லது இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற தீர்க்கமான சூழ்நிலையில் உள்ளது.

இந்நிலையில் புள்ளிப் பட்டியலில் 8 வெற்றிகளோடு முதல் இடத்திலிருக்கும் சன்றயிசஸ் ஹைதராபாத் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் அஷிஷ் நெஹ்ரா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடனான போட்டியில் தொடை எலும்பு காயத்திற்கு உள்ளாகியுள்ளார். இதனால் இவர் ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இலங்கை அணி மற்றும் ரசிகர்களுக்கு கவலையான செய்தி 

இந்தப் பருவகால ஐ.பி.எல் தொடரில் 37 வயதான நெஹ்ரா 8 போட்டிகளில் விளையாடி 22.11 என்ற பந்துவீச்சு சராசரியில் 9 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது பந்துவீச்சு ஓட்ட விகிதம் 7.65 ஆகும்.

கொல்கத்தா அணி குஜராத் அணியுடான போட்டியில் வெற்றி பெற்றால் சன்றயிசஸ் அணி ப்ளே-ஒப் சுற்றுக்குத் தெரிவாகும். அவ்வாறு இல்லாமல் கொல்கத்தா அணி குஜராத் அணியுடான போட்டியில் தோல்வியுற்றால் ப்ளே-ஒப் சுற்றுக்கு தெரிவாக சன்றயிசஸ் அணிக்கு மீதமுள்ள இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியிலாவது வெற்றிபெற வேண்டிய நிலையில் உள்ளது.

மிகுதி 2 போட்டிகளில் ஒரு போட்டியிலாவது வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில் உள்ள ஹைதராபாத் அணி ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகிய அசிஷ் நெஹ்ராவிற்குப் பதிலாக இந்த ஐ.பி.எல் போட்டித் தொடரில் 9 போட்டிகளில் 9 விக்கட்டுகளைக் கைப்பற்றியுள்ள இடதுகை வேகப்பந்து வீச்சாளார் பரிண்டர் ஸ்ரன்னை அணியில் இணைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்