சுற்றுலா இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையிலான T20I தொடரின் நான்காவது போட்டியில், அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
இலங்கை – இந்திய கிரிக்கெட் தொடர் போட்டி அட்டவணையில் மாற்றம்
மேலும் இந்த வெற்றியுடன் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட T20I தொடரில் இன்னும் ஒரு போட்டி எஞ்சியிருக்க 4-0 என முன்னிலை அடைகின்றது.
முன்னதாக மெல்பர்ன் நகரில் தொடங்கியிருந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஆரோன் பின்ச் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை அணிக்கு வழங்கியிருந்தார்.
இப்போட்டிக்கான இலங்கை அணியில் இருந்து உபாதை காரணமாக நுவான் துஷார விலகியிருக்க, அவரிற்குப் பதிலாக லஹிரு குமாரவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. மறுமுனையில் அவுஸ்திரேலிய அணி அடம் ஷம்பா மற்றும் ஜை ரிச்சர்ட்ஸன் ஆகிய வீரர்களை தமது குழாத்திற்குள் உள்வாங்கியிருந்தது.
இலங்கை அணி
பெதும் நிஸ்ஸங்க, தனுஷ்க குணத்திலக்க, சரித் அசலங்க, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால், தசுன் ஷானக்க (அணித்தலைவர்), ஜெப்ரி வன்டர்சே, சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, மகீஷ் தீக்ஷன, லஹிரு குமார
அவுஸ்திரேலிய அணி
ஆரோன் பின்ச்(அணித்தலைவர்), பென் மெக்டோர்மெட், ஜோஸ் இங்கிலீஸ், டேனியல் சேம்ஸ், கிளன் மெக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டொய்னிஸ், மெதிவ் வேட், கேன் ரிச்சர்ட்ஸன், ஜை ரிச்சர்ட்ஸன், அஸ்டன் ஏகார், அடம் ஷம்பா
தொடர்ந்து நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைய தமது துடுப்பாட்டத்தினை தொடங்கிய இலங்கை அணிக்கு, தனுஷ்க குணத்திலக்க – பெதும் நிஸ்ஸங்க ஜோடி சிறந்த ஆரம்பத்தினை வழங்கிய போதும், அஸ்டன் ஏகாரின் அபார பந்துவீச்சினால் இலங்கை அணியின் முதல் விக்கெட் அவர்கள் 35 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் பறிக்கப்பட்டது.
இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக மாறியிருந்த தனுஷ்க குணத்திலக்க ஒரு சிக்ஸர் அடங்கலாக 17 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இதனையடுத்து குசல் மெண்டிஸ் – பெதும் நிஸ்ஸங்க ஜோடி இலங்கை அணிக்கு நல்ல இணைப்பாட்டம் ஒன்றினை இரண்டாம் விக்கெட்டுக்காக பெற்றுக் கொடுத்தனர். 41 ஓட்டங்கள் வரை நீடித்த அந்த இணைப்பாட்டம் குசல் மெண்டிஸ் ரன் அவுட்டோடு நிறைவுக்கு வந்தது. கிளன் மெக்ஸ்வெல் மூலம் ரன் அவுட் செய்யப்பட்டிருந்த குசல் மெண்டிஸ் 21 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக 27 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.
இதன் பின்னர் சரித் அசலன்க சிறிது நேரம் ஜொலித்திருந்த போதும் அவரின் விக்கெட் அவர் 19 பந்துகளுக்கு 22 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் பறிபோயிருந்தது. சரித் அசலன்கவின் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுக்களைப் இழந்த இலங்கை கிரிக்கெட் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களையே பெற்றுக் கொண்டது.
இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் பெதும் நிஸ்ஸங்க, 40 பந்துகளுக்கு 4 பௌண்டரிகள் அடங்கலாக 46 ஓட்டங்களை எடுத்திருந்தார். இதேநேரம் அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு சார்பில், ஜை ரிச்சர்ட்ஸன்
மற்றும் கேன் ரிச்சர்ட்ஸன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து போட்டியின் வெற்றி இலக்காக நிரண்யம் செய்யப்பட்ட 140 ஓட்டங்களை 20 ஓவர்களில் அடைய பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணிக்கு ஆரம்ப வீரர்களாக அஸ்டன் ஏகார் மற்றும் பென் மெக்டெர்மோட் ஆகியோர் களம் வந்தனர்.
அவுஸ்திரேலிய அணியின் இன்னிங்ஸ் தொடக்கத்தில் இலங்கை பந்துவீச்சாளர்களான மகீஷ் தீக்ஷன, லஹிரு குமார போன்றோர் நெருக்கடியினை உருவாக்கியிருந்தனர். இதனால், அவுஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் 49 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.
மீண்டும் இலங்கை அணிக்கு திரும்பும் நிரோஷன் டிக்வெல்ல
எனினும், நான்காம் விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த கிளன் மெக்ஸ்வெல் – ஜோஷ் இங்கிலீஸ் ஜோடி அதிரடி கலந்து நிதானமான முறையில் ஓட்டங்களை சேர்த்தது. 71 ஓட்டங்கள் வரை நீடித்த இந்த ஜோடியின இணைப்பாட்டத்தோடு, அவுஸ்திரேலிய அணி போட்டியின் வெற்றி இலக்கினை 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 143 ஓட்டங்களுடன் அடைந்தது.
அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக்காக பங்களிப்புச் செய்த, துடுப்பாட்டவீரர்களில் ஜோஷ் இங்கிலீஸ் 20 பந்துகளுக்கு 3 பெளண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 40 ஓட்டங்களைப் பெற்றார். மறுமுனையில், கிளன் மெக்ஸ்வெல் 39 பந்துகளுக்கு 48 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் லஹிரு குமார 2 விக்கெட்டுக்களையும், மகீஷ் தீக்ஷன மற்றும் துஷ்மன்த சமீர ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் ஆட்டநாயகனாக கிளன் மெக்ஸ்வெல் தெரிவாகியிருந்தார். இனி இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் பங்குபெறும் T20I தொடரின் ஐந்தாவதும் இறுதியுமான போட்டி ஞாயிற்றுக்கிழமை (20) நடைபெறுகின்றது.
போட்டியின் சுருக்கம்
முடிவு – அவுஸ்திரேலியா 6 விக்கெட்டுக்களால் வெற்றி
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | st Matthew Wade b Adam Zampa | 46 | 39 | 1 | 0 | 117.95 |
Dhanushka Gunathilake | c Aaron Finch b Ashton Agar | 17 | 1 | 0 | 0 | 999.99 |
Kamindu Mendis | run out (Glenn Maxwell) | 27 | 21 | 0 | 0 | 128.57 |
Charith Asalanka | c Josh Inglis b Jhye Richardson | 22 | 19 | 0 | 0 | 115.79 |
Dinesh Chandimal | c Aaron Finch b Jhye Richardson | 2 | 3 | 0 | 0 | 66.67 |
Dasun Shanaka | c Ashton Agar b Jhye Richardson | 1 | 4 | 0 | 0 | 25.00 |
Chamika Karunaratne | not out | 14 | 7 | 0 | 0 | 200.00 |
Dushmantha Chameera | b Jhye Richardson | 1 | 3 | 0 | 0 | 33.33 |
Maheesh Theekshana | run out (Matthew Wade) | 3 | 3 | 0 | 0 | 100.00 |
Jeffery Vandersay | not out | 5 | 3 | 0 | 0 | 166.67 |
Extras | 1 (b 0 , lb 0 , nb 0, w 1, pen 0) |
Total | 139/8 (20 Overs, RR: 6.95) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Daniel Sams | 2 | 0 | 14 | 0 | 7.00 | |
Jhye Richardson | 4 | 0 | 20 | 2 | 5.00 | |
Kane Richardson | 4 | 0 | 44 | 2 | 11.00 | |
Glenn Maxwell | 2 | 0 | 21 | 0 | 10.50 | |
Ashton Agar | 4 | 0 | 14 | 1 | 3.50 | |
Adam Zampa | 4 | 0 | 26 | 1 | 6.50 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Ashton Agar | c Kusal Mendis b Lahiru Kumara | 26 | 31 | 0 | 0 | 83.87 |
Ben McDermott | c & b | 9 | 10 | 0 | 0 | 90.00 |
Aaron Finch | c & b | 2 | 5 | 0 | 0 | 40.00 |
Glenn Maxwell | not out | 48 | 39 | 0 | 0 | 123.08 |
Josh Inglis | c & b | 40 | 20 | 0 | 0 | 200.00 |
Marcus Stoinis | not out | 8 | 4 | 0 | 0 | 200.00 |
Extras | 10 (b 0 , lb 3 , nb 0, w 7, pen 0) |
Total | 143/4 (18.1 Overs, RR: 7.87) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Maheesh Theekshana | 4 | 0 | 20 | 1 | 5.00 | |
Lahiru Kumara | 4 | 0 | 22 | 2 | 5.50 | |
Dushmantha Chameera | 4 | 0 | 33 | 1 | 8.25 | |
Chamika Karunaratne | 2.1 | 0 | 22 | 0 | 10.48 | |
Jeffery Vandersay | 4 | 0 | 43 | 0 | 10.75 |
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<