T-10 கிரிக்கெட் தொடரில் வெற்றிகளை பறிகொடுத்த இலங்கை வீரர்கள்

1628

கிரிக்கெட் வரலாற்றில் புரட்சியினை ஏற்படுத்தும் விதமாக முதற்தடவையாக நடைபெறும் அணிக்கு பத்து ஓவர்கள் கொண்ட, T-10 கிரிக்கெட் தொடரின் குழு நிலை ஆட்டங்கள் யாவும் இந்த வாரத்தின் வியாழனும் (14),  வெள்ளியும்(15) நடைபெற்று முடிந்திருக்கின்றன.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள்  அடங்கிய ஆறு அணிகள் A, B என இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் யாவும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜா நகர மைதானத்தில் நடைபெற்றிருந்தன.

இந்தியாவுக்கு எதிரான இலங்கை T20 குழாம் அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான எதிர்வரும் T20…

  • வியாழன் (14)

பெங்கால் டைகர்ஸ் எதிர் கேரளா கிங்ஸ்

தொடரின் ஆரம்ப போட்டியான குழு A இற்கான இந்த ஆட்டத்தில் அயர்லாந்து அணியின் சகலதுறை வீரர் போல் ஸ்டிரிங் பெற்ற கன்னி T-10 அரைச் சதத்துடன் கேரளா கிங்ஸ் அணி 8 விக்கெட்டுக்களால் பெங்கால் டைகர்ஸ் அணியினை வீழ்த்தியிருந்தது.

போட்டியின் சுருக்கம்

பெங்கால் டைகர்ஸ் – 86/1(10) ஜோன் சார்ள்ஸ் 33(27), அன்ட்ரூ ப்ளெச்சர் 32(24), வஹாப் ரியாஸ் 11/2(2)

கேரளா கிங்ஸ் – 90/2(8) போல் ஸ்டிரிங் 66(27)*, ஆமர் யாமின் 4/1(1)


பக்தூன்ஸ்  எதிர் மராத்தா அரபியன்ஸ்

குழு B இற்கான இந்தப் போட்டியில் அணித் தலைவர் சஹீட் அப்ரிடி பெற்றுக்கொண்ட ஹட்ரிக்கோடு  பக்தூன்ஸ் அணி, விரேந்திர சேவாக் தலைமையிலான மராத்தா அரேபியன்ஸை 25 ஓட்டங்களால் தோற்கடித்தது.

போட்டியின் சுருக்கம்

பக்தூன்ஸ்121/4(10) பக்கார் ஷமான் 45(22)*, லியம் டவ்சன் 44(23), இமாத் வஸீம் 20/2(2)

மராத்தா அரேபியன்ஸ் – 96/7 (10) அலெக்ஸ் ஹேல்ஸ் 57(36)*, சஹீத் அப்ரிடி 19/3(2), மொஹமட் இர்பான் 19/2(2)


  • வெள்ளிக்கிழமை (15)

பெங்கால் டைகர்ஸ் எதிர் பஞ்சாபி லெஜென்ட்ஸ்

குழு A இல் தமது இறுதிப் போட்டியில் பஞ்சாப் லெஜென்ட்ஸ் அணியினை எதிர்கொண்டிருந்த பெங்கால் டைகர்ஸ் அணி, 3 விக்கெட்டுக்களால்  வெற்றி பெற்று தொடரில் தமது முதல் வெற்றியினை பதிவு செய்தது.

போட்டியின் சுருக்கம்

பஞ்சாபி லயன்ஸ் – 99/6 (10) உமர் அக்மல் 38(25), சொஹைப் மலிக் 30(15), எம் டி லாங்கே 21/2(2), அன்வர் அலி 25/2(2)

பெங்கால் டைகர்ஸ் – 105/7 (9.2) ஆமர் யாமின் 18(5),  ஹசன் அலி 7/4(2)

முதலாவது T-10 தொடர் குறித்த முழுமையான பார்வை

உலகின் அனைத்து துறைகளிலும் நவீன…

டீம் ஸ்ரீ லங்கா (இலங்கை) எதிர் மராத்தா அரேபியன்ஸ்

குழு B இற்கான இந்த ஆட்டத்தில் மராத்தா அரேபியன்ஸ் அணி இலங்கை அணியினை 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தியது.

தினேஷ் சந்திமாலினால் வழிநடாத்தப்பட்டு முழுவதும் இலங்கை வீரர்களினையே கொண்டிருந்த டீம் ஸ்ரீ லங்கா அணி இந்தப் போட்டியில் முதல் வெற்றியினை எதிர்பார்த்த வண்ணம் மராத்தா அரபியன்ஸ் உடன் பலப்பரீட்சை நடாத்தியிருந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி அடைந்த விரேந்திர சேவாக் தலைமையிலான மராத்தா அரேபியன்ஸ் அணி, இலங்கை அணிக்கு முதலில் துடுப்பாட வாய்ப்பினை வழங்கியது.

இந்த அடிப்படையில் முதலில் துடுப்பாடிய இலங்கை வீரர்கள் தினேஷ் சந்திமால் மற்றும் ஷெஹான் ஜயசூரிய ஆகியோரின் சிறப்பாட்டத்தினால் அங்குரார்ப்பண T-10 கிரிக்கெட் தொடரில் அதிக மொத்த ஓட்டங்கள் குவித்த அணியாக மாறினர். 10 ஓவர்கள் நிறைவில் இலங்கை தரப்பு 4 விக்கெட்டுக்களை இழந்து 125 ஓட்டங்களை குவித்தது. இதில் இலங்கை அணியின் தினேஷ் சந்திமால் 24  பந்துகளுக்கு 37 ஓட்டங்களினையும், ஷெஹான் ஜயசூரிய 28 ஓட்டங்களினையும் பெற்றனர்.

மராத்தா அரேபியன்ஸ் அணிப் பந்து வீச்சில் ஹர்டோஸ் வில்ஜோய்ன் மற்றும் வேய்ன் பிராவோ ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டினர்.

பதிலுக்கு வெற்றி இலக்கான 126 ஓட்டங்களை பெற துடுப்பாடிய மராத்தா அரபியன்ஸ் அணி தென்னாபிரிக்க வீரர் ரிலே ருஸ்ஸோவின் அதிரடியோடு போட்டியின் இறுதிப் பந்தில் வெற்றி இலக்கினை அடைந்தது. ருஸ்லோ வெறும் 18 பந்துகளுக்கு 49 ஓட்டங்களை சேர்த்து தனது அணிக்கு வெற்றி பெற உதவியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

டீம் ஸ்ரீ லங்கா – 125/4 (10) தினேஷ் சந்திமால் 37(24), ஷெஹான் ஜயசூரிய 28(11), வேய்ன் பிராவோ 12/2(2)

மராத்தா அரேபியன்ஸ் – 131/5 (10) ரிலே ருஸ்லோ 49(18)*, ரி வென் டி மேர்வே 25(14), விஷ்வ பெர்னாந்து 15/2(2)

அஷான், மிலிந்த ஆகியோரின் சதங்களின் உதவியுடன் SSC வலுவான நிலையில்

2017/2018 பருவ காலத்திற்கான இலங்கை…

கேரளா கிங்ஸ் எதிர் பஞ்சாபி லெஜென்ட்ஸ்

குழு A சார்பான அணிகள் இடையிலான இறுதி குழு நிலை ஆட்டமான இந்தப் போட்டியில் பஞ்சாப் லெஜென்ட்ஸ் அணி, சொஹைப் மலிக்கின் அதிரடியோடு முதல் வெற்றியினை சுவைத்தது.

போட்டியின் சுருக்கம்

கேரளா கிங்ஸ்114/4 (10) போல் ஸ்டிரிங் 46(29), ஈயோன் மோர்கன் 21(13), கிரிஸ் ஜோர்டான் 17/2(1)

பஞ்சாபி லெஜென்ட்ஸ் – 115/2 (9) சொஹைப் மலிக் 60(25)*,  உமர் அக்மல் 31(25)


டீம் ஸ்ரீ லங்கா எதிர்  பக்தூன்ஸ்

இறுதி குழு நிலை ஆட்டமான குழு B இன் இந்தப் போட்டியில் பக்தூன்ஸ் அணி, 27 ஓட்டங்களால் டீம் ஸ்ரீ லங்காவினை வீழ்த்தியிருந்தது.  

நாணய சுழற்சியில் முதலில் வெற்றி பெற்ற பக்தூன்ஸ் அணித் தலைவர் சஹீட் அப்ரிடி முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தார். இதன்படி துடுப்பாட தொடங்கிய பக்தூன்ஸ் அணி பங்களாதேஷின் துடுப்பாட்ட வீரரான தமிம் இக்பாலின் அதிரடி அரைச்சதத்தோடு 10 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 111 ஓட்டங்களினை குவித்துக் கொண்டது.

பக்தூன்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் தமிம் இக்பால் 27 பந்துகளுக்கு 4 சிக்ஸர்கள் மற்றும் 5 பெளண்டரிகள் அடங்கலாக மொத்தமாக 56 ஓட்டங்களினை குவித்துக் கொண்டார்.

இலங்கையை பிரதிநிதித்துவம் செய்த அணியின் பந்து வீச்சு சார்பாக ஷெஹான் ஜயசூரிய மற்றும் விஷ்வ பெர்னாந்து ஆகிய வீரர்கள் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டியிருந்தனர்.

தொடர்ந்து வெற்றி இலக்கான 112 ஓட்டங்களை 10  ஓவர்களில் அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி, ஒரு கட்டத்தில் 25 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. இந்த நேரத்தில் களத்தில் நின்ற வனிந்து ஹஸரங்க இலங்கை அணியினை மீட்கும் விதத்திலான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தார். எனினும் போட்டியின் ஏழாவது ஓவரில் பரிதாபகரமான ரன் அவுட் ஒன்றின் மூலம் ஹஸரங்கவின் விக்கெட் பறிபோனது.

ஹஸரங்கவினை  அடுத்து இலங்கை சார்பாக யாருமே பிரகாசிக்கவில்லை. இதனால், 10 ஓவர்கள் முடிவில் இலங்கை தரப்பு 7 விக்கெட்டுக்களை இழந்து 84  ஓட்டங்களை மாத்திரம் குவித்து போட்டியில் தோல்வியினை தழுவியது.

டீம் ஸ்ரீ லங்கா அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக வனிது ஹஸரங்க 12 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பெளண்டரிகள் அடங்கலாக 31 ஓட்டங்களினை குவித்திருந்தார்.

பக்தூன்ஸ் அணி சார்பாக இங்கிலாந்து அணியின் இடது கை சுழல் வீரரான லியாம் டவ்சன் 2 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

பக்தூன்ஸ் – 111/6(10) தமிம் இக்பால் 56(27), விஷ்வ பெர்னாந்து 15/2(2)

டீம் ஸ்ரீ லங்கா – 84/7 (10) வனிது ஹஸரங்க 31(12), லியம் டவ்சன் 6/2(1)