மேற்கிந்திய தீவுகளை அடுத்து இலங்கைக்கு தென்னாபிரிக்காவின் சவால்

798

கடந்த ஆண்டு கத்துக் குட்டி அணிகள் தொடக்கம் ஜாம்பவான் அணிகள் வரைக்கும் அனைவரிடமும் வலிதரக் கூ டிய தோல்விகளை சந்திந்த இலங்கை கிரிக்கெட் அணிக்கு, முன்னணி வீரர்களின் உபாதைகள், போட்டித் தடைகள் என்பன வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நிகழ்வுகளாக இருந்தன.

ஜயசூரியவின் சகதுறை ஆட்டத்தால் முதல் நாள் இலங்கை ஏ அணி வசம்

பங்களாதேஷுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள..

இலங்கையின் இந்த தொடர் தோல்விகள் தென்னாபிரிக்க அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இருந்தே ஆரம்பித்திருந்தன. 2017ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணி அதில் முதற்கட்டமாக இடம்பெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-0 என தென்னாபிரிக்க அணியினால் வைட் வொஷ் செய்யப்பட்டிருந்தது.

இந்த டெஸ்ட் தொடரினை அடுத்து கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களின் பின்னர் இலங்கை மண்ணுக்கு வந்திருக்கும் தென்னாபிரிக்க அணி வியாழக்கிழமை (12) காலியில் ஆரம்பமாகும் மோதலுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மைதானச் சொந்தக்காரர்களுடன் ஆடவிருக்கின்றது. குறிப்பிட்ட அந்த டெஸ்ட் தொடரின் முன்னோட்டமே இது.

இலங்கைதென்னாபிரிக்க டெஸ்ட் போட்டிகள் வரலாறு

1993 ஆம் ஆண்டிலிருந்து இரண்டு அணிகளும் டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகின்றன. இரண்டு அணிகளுக்குமிடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிய இன்றுவரை இரண்டு அணிகளும் மொத்தமாக 25 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளன. அதில் 14 போட்டிகளில் தென்னாபிரிக்க அணியும், 5 போட்டிகளில் இலங்கை அணியும் வெற்றிகளைப் பதிவு செய்திருக்கின்றன. இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டியோடு சேர்த்து இதுவரையில் 6 போட்டிகள் சமநிலை அடைந்திருக்கின்றன.

இதேவேளை, இலங்கை தமது சொந்த மண்ணில் வைத்து தென்னாபிரிக்க அணியுடன் 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருப்பதோடு அவற்றில் 4 வெற்றிகளையும், 5 சமநிலை முடிவுகளையும் பெற்றிருக்கின்றது. அதேநேரம், தென்னாபிரிக்க அணி இலங்கையில் இதுவரையில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் வெற்றியினை சுவைத்திருக்கின்றது.

Photos: South Africa team practicing before the Test series

Photos of South Africa team practicing before…

கடைசியாக 2014ஆம் ஆண்டு இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட தென்னாபிரிக்க அணி, அப்போது இலங்கை அணியுடன் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரினை 1-0 என கைப்பற்றியிருந்தது.

கடந்த கால போட்டி முடிவுகள் அனைத்தையும் பார்க்கும் நிலையில் இலங்கையுடன் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் தென்னாபிரிக்க அணி ஆதிக்கத்தை காட்டியுள்ளது. அதே தருணத்தில், இலங்கையின் சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டிகளில் அவ்வணி சற்று தளர்வுடன் இருந்ததனையும் காணாக் கூடியதாக இருக்கின்றது. எனவே, இலங்கையில் நடைபெறவிருக்கும் இந்த டெஸ்ட் தொடரில் யாரின் ஆதிக்கம் மேலோங்கும் என்பதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.  

இலங்கை அணி

மேற்கிந்திய தீவுகளுடனான தமது அண்மைய டெஸ்ட் தொடரினை வரலாற்று வெற்றியோடு 1-1 என சமநிலை செய்த இலங்கை அணி, அதோடு சேர்த்து இறுதியாக தாம் விளையாடிய நான்கு டெஸ்ட் தொடர்களிலும் சிறப்பான பதிவுகளையே காட்டியிருக்கின்றது.  

.சி.சி. இன் டெஸ்ட் தரவரிசையில் 91 புள்ளிகளுடன் ஆறாம் இடத்தில் காணப்படும் இலங்கை அணி, தென்னாபிரிக்க அணியுடனான இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை 2-0 எனக் கைப்பற்றும் எனின் டெஸ்ட் தரவரிசையில் 97 புள்ளிகளுடன், தமது நிலையினை முன்னேற்றிக் கொள்ளும்.

சந்திமால், ஹத்துருசிங்க, குருசிங்க மீதான ஐ.சி.சி யின் இறுதித் தீர்ப்பு நாளை

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக சென்.லூசியா…

இந்த டெஸ்ட் தொடரில் இலங்கையை வழிநடாத்த இலங்கை டெஸ்ட் அணியின் வழமையான தலைவர் தினேஷ் சந்திமால் நியமிக்கப்பட்ட போதிலும், மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடரில் இரண்டாவது போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தை தாமதித்த குற்றச்சாட்டில் அவருக்கு போட்டித்தடை விதிக்கப்பட சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. இதனால், அவருக்கு இந்த டெஸ்ட் தொடரில் முழுமையாக விளையாட முடியாது போகலாம்.  

சந்திமால் இல்லாது போனால் இலங்கை அணியினை தென்னாபிரிக்க தொடரில் வேகப்பந்து வீச்சாளரான சுரங்க லக்மால் வழிநடாத்துவதாக கூறப்பட்டிருக்கின்றது. மறுமுனையில் சந்திமாலின் இழப்பு இலங்கை அணியின் துடுப்பாட்டத்துறைக்கு ஏற்படப்போகும் பாரிய பின்னடைவாகும்.

இலங்கை அணிக்காக கடந்த ஆண்டின் ஆரம்பத்திலிருந்து இதுவரையில் 16 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கும் சந்திமால் 48.67 என்கிற சராசரியுடன் மொத்தமாக 1,349 ஓட்டங்களை குவித்திருக்கின்றார். இதில் நான்கு சதங்களும், ஆறு அரைச்சதங்களும் அடங்கும்.

சந்திமால் போன்றே, இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்கவும் விளையாட்டின் மகத்துவத்தை சீர்குழைக்கும் வகையில் நடந்துகொண்ட

சந்திமால் இல்லாது போனாலும் இலங்கை அணிக்கு ஆறுதல் தரும் விடயமாக மாறியிருப்பது அனுபவமிக்க துடுப்பாட்ட வீரரான திமுத் கருணாரத்னவின் மீள்வருகையாகும். இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் கடந்த ஆண்டு 1,000இற்கும் மேற்பட்ட ஓட்டங்களை கடந்த அவர் காயம் காரணமாக மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடரில் ஆடியிருக்கவில்லை. தற்போது அணிக்கு திரும்பியுள்ள கருணாரத்ன தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடரிலும் நம்பிக்கை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, தென்னாபிரிக்க அணியுடனான பயிற்சிப் போட்டியில் 92 ஓட்டங்களை விளாசிய மெதிவ்ஸ் இலங்கை அணியின் மற்றுமொரு துடுப்பாட்ட நம்பிக்கையாகும். இலங்கை அணியின் மத்தியவரிசையினை பலப்படுத்தும் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான மெதிவ்ஸிற்கு டெஸ்ட் போட்டிகளில் 5,000 ஓட்டங்களை எட்டுவதற்கு இன்னும் 44 ஓட்டங்களே தேவையாக இருக்கின்றது.

Photos: Sri Lanka team practicing before the Test series

Photos Sri Lanka team practicing before the Test series…

மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடரில் இலங்கை சார்பில் அதிக ஓட்டங்கள் (285) குவித்த குசல் மெண்டிஸ் இலங்கை அணியினால் இந்த டெஸ்ட் தொடரில் எதிர்பார்க்கப்படுகின்ற ஏனைய துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர். எதிரணிகளின் எவ்வகைப் பந்து வீச்சாளர்களினையும் கையாளும் திறன் கொண்ட 23 வயதான குசல் மெண்டிஸிற்கு தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை கட்டுப்படுத்தும் பொறுப்பு காணப்படுகின்றது.  

அதோடு அண்மைய மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடரில் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பான ஆட்டத்தினை வெளிக்காட்ட தவறிய ரோஷேன் சில்வா, தனன்ஜய டி சில்வா, நிரோஷன் திக்வெல்ல, குசல் ஜனித் பெரேரா போன்றோருக்கு இந்த டெஸ்ட் தொடர் துடுப்பாட்டத்தில் திறமைகளை நிரூபிக்க ஒரு வாய்ப்பாகும்.

இலங்கை அணியின் பந்து வீச்சுத்துறையினை எடுத்துப் பார்க்கும் போது சுழல் வீரரான ரங்கன ஹேரத் தென்னாபிரிக்க டெஸ்டிற்கான குழாத்தில் உள்ளடக்கப்பட்ட போதிலும் காயம் காரணமாக அவர் இந்த டெஸ்ட் தொடரின் போட்டிகளில் விளையாடுவது சந்தேகமான நிலையில் இருக்கின்றது.

ஹேரத் இல்லாத இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சுத்துறை தில்ருவான் பெரேரா, அகில தனன்ஜய, சைனமன் சுழல் வீரர் லக்ஷான் சந்தகன் ஆகியோரினை நம்பி இருக்கின்றது. தென்னாபிரிக்க அணி இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணியுடன் இடம்பெற்ற பயிற்சி ஆட்டத்தின் போது சுழல் பந்துவீச்சாளர்களிடமே அதிக விக்கெட்டுக்களை பறிகொடுத்திருந்த நிலையில் இந்த தொடரில் சுழல் வீரர்களினை இலங்கை அணி பெரிதும் நம்பியிருக்கின்றது.  

ஐ.சி.சி. தண்டனையிலிருந்து தப்பிக்க தயாராகும் சந்திமால், டூ ப்ளெசிஸ்

ஒழுக்காற்று குற்றச்சாட்டில் போட்டித்தடையை பெறும்..

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சுத்துறையினை சுரங்க லக்மால் முன்னெடுக்க அவருக்கு பக்கபலமாக லஹிரு குமார, கசுன் ராஜித ஆகியோர் இருக்கவுள்ளனர்.

இதில் இளம் வேகப் புயலான லஹிரு குமார மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடரில் 17 விக்கெட்டுக்களை கைப்பற்றி இலங்கையின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான சமிந்த வாஸின் சாதனையை (வெளிநாட்டு டெஸ்ட் தொடர் ஒன்றில் அதிக விக்கெட்டுக்கள் கைப்பற்றிய இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர்) முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை குழாம்

தினேஷ் சந்திமால் (அணித்தலைவர்), திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, ரொஷேன் சில்வா, தனன்ஜய டி சில்வா, அஞ்செலோ மெதிவ்ஸ், தனுஷ்க குணத்திலக்க, நிரோஷன் திக்வெல்ல, ரங்கன ஹேரத், தில்ருவான் பெரேரா, லக்ஷன் சந்தகன், அகில தனன்ஜய, சுரங்க லக்மால் (உப தலைவர்), லஹிரு குமார, கசுன் ராஜித   

தென்னாபிரிக்க அணி

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளில் உலகத்தரம் வாய்ந்த அணியாக வலம் வருகின்றது எனக் கூறினால் அது மிகையாகாது. 2016ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து ஒன்பது டெஸ்ட் தொடர்களில் ஆடியுள்ள தென்னாபிரிக்கா, அதில் ஒரு டெஸ்ட் தொடர் தவிர ஏனைய எட்டு தொடர்களினதும் வெற்றியாளர்களாக மாறியிருக்கின்றது.

.சி.சி. இன் டெஸ்ட் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் காணப்படும் தென்னாபிரிக்க அணி இந்த ஆண்டு பலமிக்க இந்தியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளையும் டெஸ்ட் தொடர்களில் தோற்கடித்திருப்பதால், இலங்கை அணிக்கு கடுமையான போட்டியாளர்களாக இருக்கப் போகின்றார்கள் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை.

எனினும், இறுதியாக (2016 ஆம் ஆண்டில்) தமது மண்ணுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த, டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஆசிய கண்டத்தினை சேராத அவுஸ்திரேலிய அணியினை மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-0 என இலங்கை வைட் வொஷ் செய்திருந்ததனையும் தென்னாபிரிக்க வீரர்கள் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும்.  

தென்னாபிரிக்க அணி சிரேஷ்ட துடுப்பாட்ட வீரரான ஏபி டிவில்லியர்ஸ், நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான மொர்னே மோர்க்கல் ஆகியோர் சர்வதேச  கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வினை அறிவித்த பின்னர் விளையாடும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும்.  

தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டத்துறையினை எடுத்து பார்க்கும் போது ஆரம்ப வீரராக களம் வரும் டீன் எல்கார் அவ்வணியின் முதுகெலும்பாக இருக்ககூடிய ஒருவராக காணப்படுகின்றார். இலங்கை அணி இறுதியாக தென்னாபிரிக்கவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போது இடம்பெற்ற டெஸ்ட் தொடரில் அதிக ஓட்டங்கள் (308) குவித்த எல்கார், தென்னாபிரிக்காவின் அண்மைய அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுடனான டெஸ்ட் தொடர்களிலும் தனது தரப்புக்கு அதிக ஓட்டங்கள் சேர்த்த முதன்மையானவர்களில் ஒருவராக இருந்தார்.

எல்காரோடு சேர்த்து தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டத்துறை அனுபவமிக்க ஹஷிம் அம்லா, அணித் தலைவர் பாப் டு ப்ளேசிஸ், எய்டன் மார்க்ரம், குயின்டன் டி கொக் ஆகியோருடன் இன்னும் வலுப்பெறுகின்றது. இவர்களில் டெஸ்ட் போட்டிகளில் 9,000ஐ அண்மித்த ஓட்டங்கள் வரையில் பெற்றிருக்கும் ஹஷிம் அம்லா இலங்கை அணிக்கு நெருக்கடி தரும் ஆற்றல் கொண்ட முக்கிய துடுப்பாட்ட வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை அணிக்கு எதிராக இதுவரையில் 10 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள அம்லா இரண்டு சதங்கள் உட்பட மொத்தமாக 636 ஓட்டங்களினை குவித்திருக்கின்றார்

மேற்குறிப்பிட்ட வீரர்களில் அம்லாவுக்கு அடுத்ததாக இலங்கை அணிக்கு சிக்கல்களை உருவாக்க கூடிய ஏனைய வீரராக இளம் துடுப்பாட்ட நட்சத்திரம் எய்டன் மார்க்ரம் உள்ளார்.  

அண்மையில் நடைபெற்று முடிந்த அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரில் 480 ஓட்டங்களை விளாசிய 24 வயதான மார்க்ரம், இத்தொடரிலும் அதே சிறப்பாட்டத்தினை காட்டுவார் என அனைவராலும் நம்பப்படுகின்றார்.

©Getty Images

தென்னாபிரிக்க அணியின் பந்து வீச்சினை எடுத்து நோக்கும் போது அவ்வணி வேகப்பந்து வீச்சாளர்களினையே பெரிதும் நம்பியிருக்கின்றது. தென்னாபிரிக்க அணியின் அண்மைய டெஸ்ட் வெற்றிகளிலும் வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கினை வகித்திருந்தனர். இத்தொடரின் மூலம் தென்னாபிரிக்க அணிக்கு சிரேஷ்ட வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான டேல் ஸ்டெய்ன் திரும்பியிருக்கின்றார். தென்னாபிரிக்காவுக்காக 86 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 419 விக்கெட்டுக்களை சாய்த்திருக்கும் டேல் ஸ்டெயினின் அனுபவம் அவரது தரப்புக்கு பெரும் பலமாகும்.

©Getty Images

இதேவேளை, டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இளம் வேகப்பந்து வீச்சாளரான ககிஸோ றபாடாவினையும் தென்னாபிரிக்க அணி வைத்திருக்கின்றது. ரிவர்ஸ் ஸ்விங் பந்துகள் மூலம் துடுப்பாட்ட வீரர்களை இலகுவாக ஆட்டமிழக்கச் செய்யும் திறமை கொண்டுள்ள றபாடா தென்னாபிரிக்க அணியினால் இத்தொடரில் எதிர்பார்க்கப்படுகின்ற மிக முக்கிய பந்துவீச்சாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை இந்த ஆண்டு நடைபெற்றிருக்கும் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை (38) சாய்த்த வீராரகவும் றபாடா காணப்படுகின்றார்.

றபாடா தவிர தென்னாபிரிக்க அணி வெர்னோன் பிலாண்டர், லுங்கி ன்கிடி, தியோனிஸ் டி ப்ரெய்ன் ஆகியோரால் தமது வேகப்பந்து வீச்சு துறையினை இன்னும் பலப்படுத்திக் கொள்கின்றது.

தென்னாபிரிக்க அணிக்கு இத்தொடரில் சுழல் வீரர்களாக சேவை புரிய கேசவ் மகராஜ், தப்ரைஸ் சம்சி ஆகியோர் இருக்கின்றனர். இதில் சைனமன் சுழல் வீரரான சம்சி, தென்னாபிரிக்க அணிக்காக இதுவரையில் ஒரு டெஸ்ட் போட்டியில் மாத்திரமே ஆடியுள்ள போதிலும் இலங்கை கிரிக்கெட் சபை  தலைவர் பதினொருவர் அணியுடன் இடம்பெற்ற பயிற்சி ஆட்டத்தில் 5 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார். இதேவேளை, கேசவ் மகராஜ் தென்னாபிரிக்க அணிக்காக 74 டெஸ்ட் விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்க குழாம்  

பாப் டு ப்ளேசிஸ் (அணித்தலைவர்), ஹஷிம் அம்லா, டெம்பா பெவுமா, டீன் எல்கார், எய்டன் மார்க்ரம், தியோனிஸ் டி ப்ரெய்ன், கேசவ் மகராஜ், வெர்னோன் பிலாண்டர், தப்ரைஸ் சம்சி, சோன் வொன் பேர்க், குயின்டன் டி கொக், கெயின்ரிச் கிளாசன், லுங்கி ன்டிகிடி, ககிஸோ றபாடா, டேல் ஸ்டெய்ன்

இறுதியாக

இலங்கை அணி கடந்த ஆண்டு போல் அல்லாது தமது தோல்விகளில் மீண்டு புதிய அத்தியாயம் ஒன்றினை நோக்கி பயணித்து வருகின்றது. தமது தோல்விகளில் இருந்து மீண்டு வருகின்ற இலங்கை அணியின் பலத்தினை ஒரு தடவை பரீட்சித்து பார்க்கும் சந்தர்ப்பத்தினை தென்னாபிரிக்காவுடனான இந்த டெஸ்ட் தொடர் ஏற்படுத்தி தரும் என்பதில்  ஐயமில்லை.

டெஸ்ட் தொடர் அட்டவணை

முதல் டெஸ்ட் போட்டிஜூலை 12 ஆம் திகதி தொடக்கம் ஜூலை 16 வரைகாலி சர்வதேச மைதானம், காலி

இரண்டாவது டெஸ்ட் போட்டிஜூலை 20 ஆம் திகதி தொடக்கம் ஜூலை 24 ஆம் திகதி வரை – SSC மைதானம், கொழும்பு

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<