உலகின் அனைத்து துறைகளிலும் நவீன தொழில்நுட்ப மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. இதற்கு விளையாட்டுத்துறையும் விதிவிலக்கல்ல. அதிலும் குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டைப் பொறுத்தமட்டில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஒருநாள் போட்டிகளுக்கும், பின்னர் T-20 போட்டிகளுக்கும் மாற்றம் பெற்ற கிரிக்கெட் யுகம் தற்போது T-10 போட்டிகளை அறிமுகப்படுத்துவதற்கு தயாராகி வருகின்றது.

அதிரடி நட்சத்திரங்களுடன் கிரிக்கெட் உலகைக் கலக்க வரும் T-10 போட்டி

அந்த வகையில் அங்குரார்ப்பண T-10 லீக் கிரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம் 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியத்தின் சார்ஜாவில் நடைபெறவுள்ளன. 10 ஓவர்கள், 6 அணிகள், 90 நிமிடங்கள் என மிகக் குறுகிய நேர எல்லைக்குள் 4 நாட்கள் நடைபெறவுள்ள இத்தொடரில், கிரிக்கெட் உலகின் அதிரடி நட்சத்திரங்களான சஹீட் அப்ரிடி, குமார் சங்கக்கார, கிறிஸ் கெய்ல், விரேந்திர சேவாக் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள் மற்றும் தற்போது விளையாடி வருகின்ற இளம் வீரர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்நிலையில், T-10 லீக் போட்டித் தொடருக்கான வீரர்கள் ஏலம் கடந்த 5ஆம் திகதி டுபாயில் இடம்பெற்றது. ஐக்கிய அரபு இராச்சியத்தைச் சேர்ந்த 27 வீரர்களும், 300இற்கும் அதிகமான சர்வதேச வீரர்களும் இந்த ஏலத்தில் கலந்துகொண்டிருந்தனர். அத்துடன், வசீம் அக்ரம், இயென் மோர்கன், சஹீட் அப்ரிடி மற்றும் சர்பராஸ் அஹமட் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

பஞ்சாபி லெஜன்ட்ஸ், பக்தூன்ஸ், மராத்தா அராபியன்ஸ், பெங்கால் டைகர்ஸ், இலங்கை அணி (லங்கன்ஸ்), மற்றும் கேரளா கிங்ஸ் என ஆறு அணிகளின் பங்குபற்றுதலுடன் இப்போட்டிகள் இடம்பெறவுள்ளதுடன், இலங்கை அணியைத் தவிர ஒவ்வொரு அணியிலும் 2 ஐக்கிய அரபு இராச்சிய வீரர்கள் இடம்பெறவேண்டும் என்பது விதிமுறையாகும். இதன்படி ஐக்கிய அரபு இராச்சியத்தைச் சேர்ந்த 27 வீரர்கள் ஏலத்தில் இடம்பெற்றதுடன், 10 வீரர்கள் இதன்மூலம் தெரிவுசெய்யப்பட்டனர்.

அதன்படி, மராத்தா அராபியன்ஸ் அணியின் ஆலோசகராக பாகிஸ்தானின் வசீம் அக்ரமும், கேரளா கிங்ஸ் அணியின் ஆலோசகராக மேற்கிந்திய தீவுகளின் பிரெயன் லாராவும், பெங்கால் டைகர்ஸ் அணியின் ஆலோசகராக வக்கார் யூனிஸும் செயற்படவுள்ளனர்

ThePapare Tamil weekly sports roundup – Episode 03

கடந்த வாரம் இலங்கை மற்றும் சர்வதேச அளவில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வுகளில் இருந்து தொகுக்கப்பட்ட சில முக்கிய நிகழ்வுகளுடன் …..

இந்தப் போட்டித் தொடரில் இந்தியாவின் விரேந்திர சேவாக் தலைமையிலான மராத்தா அராபியன்ஸ் அணியில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர ஜாம்பவானுமான குமார் சங்கக்கார இடம்பெற்றுள்ளார். அத்துடன், பாகிஸ்தானின் மொஹமட் ஆமிர், கம்ரான் அக்மல் மற்றும் இமாத் வசீமும் இவ்வணியில் விளையாடவுள்ளனர். இந்த அணியின் ஆலோசகராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வசீம் அக்ரம் செயற்படவுள்ளார்

இதேவேளை, இலங்கை டெஸ்ட் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளராக ஜொலித்துக்கொண்டிருக்கின்ற 39 வயதான ரங்கன ஹேரத்தும் இப்போட்டித் தொடரில் பாகிஸ்தானின் சொஹைப் மலிக் தலைமையிலான பஞ்சாபி லெஜன்ட்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற T-20 உலகக் கிண்ணப் போட்டிகளுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற ஹேரத், முதற்தடவையாக வெளிநாட்டு தொடரொன்றில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மராத்தா அராபியன்ஸ் அணி

மராத்தா அராபியன்ஸ்

விரேந்திர சேவாக் (தலைவர்), அலெக்ஸ் ஹேல்ஸ், லென்டில் சிம்மென்ஸ், ரில்லி ரொசோவ், மொஹமட் ஆமிர், மொஹமட் சமி, இமாத் வசீம், வெய்ன் பார்னெல், குமார் சங்கக்கார மற்றும் கம்ரான் அக்மல்

பெங்கால் டைகர்ஸ் அணி

பெங்கால் டைகர்ஸ்

சர்பராஸ் அஹமட்(தலைவர்), மொஹமட் நவாஸ், அன்வர் அலி, ரும்மான் ரயீஸ், முஸ்தபிசூர் ரஹ்மான், டெரன் சமி, டெரன் பிராவோ, ரோமன் பவெல், சுனில் நரைன், அன்ட்ரூ பிளெட்சர் மற்றும் ஜொன்சன் சார்லஸ்

கேரளா கிங்ஸ் அணி

கேரளா கிங்ஸ்

இயென் மோர்கன்(தலைவர்), கிரென் பொல்லார்ட், சகிப் அல் ஹசன், சொஹைல் தன்வீர், லயம் பிளென்கட், வஹாப் ரியாஸ் மற்றும் சாமுவேல் பத்ரி

பக்தூன்ஸ் அணி

பக்தூன்ஸ்

சஹீட் அப்ரிடி (தலைவர்), பக்கர் ஷமான், தமீம் இக்பால், டுவைன் ஸ்மித், அஹ்மட் ஷேசாத், ஜுனைத் கான், மொஹமட் இர்பான், சொஹைல் கான், உமர் குல், மொஹமட் நபி மற்றும் லையம் டோசன்

பஞ்சாபி லெஜன்ட்ஸ் அணி

பஞ்சாபி லெஜன்ட்ஸ்

சொஹைப் மலிக் (தலைவர்), உமர் அக்மல், மிஸ்பா உல் ஹக், பாஹிம் அஷ்ரப், ஹசன் அலி, உஸாமா மிர், சார்லெஸ் பரத்வெய்ட், கிரிஸ் ஜோர்தான், ஆடில் ரஷித், லுக்கி ரொன்சி மற்றும் ரங்கன ஹேரத்

எனினும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இத்தொடருக்கான அணி தொடர்பில் இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்த மாகாணங்களுக்கிடையிலான T-20 தொடரில் சம்பியன் பட்டம் வென்ற கொழும்பு அணிக்கு இத்தொடரில் விளையாடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என போட்டி ஏற்பாட்டுக்குழுவினர் அறிவித்துள்ளனர்

இலங்கை அணி

இந்நிலையில் இப்போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணியின் தலைவராக கொழும்பு அணியின் தலைவரான தினேஷ் சந்திமால் செயற்பட்டார். அவருடன் திஸர பெரேரா, அஞ்செலோ பெரேரா, ஷெஹான் ஜயசூரிய, லஹிரு திரிமான்ன, டில்ஷான் முனவீர, கித்துரவன் விதானகே, அஞ்செலோ ஜயசிங்க, வனிந்து ஹசரங்க டி சில்வா, துஷ்மன்த சமீர, சச்சித்ர சேனனாயக்க, விஷ்வ பெர்ணாந்து, ஜெப்ரி வெண்டர்சே, கசுன் மதுஷங்க, நிபுன் கருணாநாயக்க மற்றும் அலங்கார அசங்க ஆகிய வீரர்கள் இலங்கை அணியில் இடம்பெற்றுள்ளனர்

அத்துடன், இலங்கை A அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளரான அவிஷ்க குணவர்தன, இவ்வணியின் பயிற்றுவிப்பாளராக செயற்படவுள்ளார்.

புதிய ஒருநாள் அணித்தலைவர் ஒருவரை வேண்டி நிற்கிறதா இலங்கை?

ThePapare.com இற்கு கிடைத்திருக்கும் தகவல்களின் …….

எனினும், இலங்கை அணி தற்போது இந்தியாவுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு விளையாடி வருகின்றது. இதில், தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்றுவருவதுடன், 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடர் டிசம்பர் 10ஆம் திகதியும், 3 போட்டிகளைக் கொண்ட T-20 போட்டித் தொடர் டிசம்பர் 20ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளது.

எனவே, T-10 லீக் தொடருக்காக போட்டி ஏற்பாட்டாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான வீரர்கள் இந்திய தொடரில் இடம்பெற்றுள்ளதால் குறித்த அணியில் மேலும் சில வீரர்களை இணைத்துக்கொள்ள வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, அங்குரார்ப்பண T-10 லீக் போட்டித் தொடருக்கான போட்டி அட்டவணை கடந்த செவ்வாய்க்கிழமை (21) வெளியிடப்பட்டது. இதில் கலந்துகொள்ளவுள்ள 6 அணிகளும் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. A குழுவில் பெங்கால் டைகர்ஸ், பஞ்சாபி லெஜன்ட்ஸ், கேரளா கிங்ஸ் ஆகிய அணிகளும், B குழுவில் மராத்தா அராபியன்ஸ், பக்தூன்ஸ் மற்றும் இலங்கை அணி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் ஏனைய அணிகளுடன் முதல் சுற்றில் லீக் ஆட்டங்களில் போட்டியிடவுள்ளதுடன், அதில் கடைசி இரு இடங்களையும் பெற்றுக்கொள்கின்ற அணிகள் 5 மற்றும் 6ஆவது இடங்களுக்கு போட்டியிடும். அதேநேரம், இரு குழுக்களிலும் முதலிரண்டு இடங்களைப் பெற்றுக்கொள்ளும் அணிகள் அரையிறுதியில் போட்டியிடும்.

திகதி             போட்டிகள
டிசம்பர் 14 பெங்கால் டைகர்ஸ் எதிர் கேரளா கிங்ஸ்

மராத்தா அராபியன்ஸ் எதிர் பக்தூன்ஸ்

டிசம்பர் 15 பெங்கால் டைகர்ஸ் எதிர் பஞ்சாபி லெஜன்ட்ஸ்

மராத்தா அராபியன்ஸ் எதிர் இலங்கை அணி

பஞ்சாபி லெஜன்ட்ஸ் எதிர் கேரளா கிங்ஸ்

பக்தூன்ஸ் எதிர் இலங்கை அணி

டிசம்பர் 16 முதல் அணி (குழு A) எதிர் மூன்றாவது அணி (குழு B)

மூன்றாவது அணி (குழு A) எதிர் முதல் அணி (குழு B)

இரண்டாவது அணி (குழு A) எதிர் இரண்டாவது அணி (குழு B)

டிசம்பர் 17 முதல் அரையிறுதி – முதல் அணி எதிர் நான்காவது அணி

இரண்டாவது அணி – இரண்டாவது அணி எதிர் மூன்றாவது அணி

இறுதிப் போட்ட

உலகின் மிக முக்கியமான கிரிக்கெட் தொடர்களை நடாத்திய பெருமையயைக் கொண்ட ஐக்கிய அரபு இராச்சியத்தின் சார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டிகள் இடம்பெறவுள்ளமை சிறப்பம்சமாகும். விறுவிறுப்பான இத்தொடரில் உலகின் பல்வேறு நாடுகளின் பல்வேறு துறைசார் பிரபலங்களின் பங்குபற்றுதலுடன் போட்டிகள் இடம்பெறவுள்ளமை சிறப்பம்சமாகும்.

கிரிக்கெட் போட்டிகள் மட்டுமல்லாது பிரம்மாண்டமான ஆரம்ப நிகழ்வுகள், நடன மற்றும் இசை நிகழ்ச்சிகள் என பல மாற்றங்களுடன் இப்போட்டித்தொடர் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamil – ThePapare.com

ThePapare.com Tamil – Live Sri Lanka Cricket sports coverage, breaking news, cricket results and analysis on Cricket, Rugby, Football & more in Tamil.

 மேலும் பல சுவையான கிரிக்கெட் செய்திகளைப் படிக்க