இலங்கைக் கிரிக்கட் சபையின் வழிநடத்துதலுக்கு அமைய 19 வயதிற்குட்பட்டோருக்கான சுப்பர் 19 மாகாண கிரிக்கட் போட்டி 2016 (Super Under 19 Provincial Tournament 2016) எதிர் வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி தொடக்கம் மே மதம் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டித் தொடரில் மொத்தமாக 10 அணிகள் பங்கு கொள்கின்றன.  சபரகமுவ மாகாணத்தில் பாரிய அளவு கிரிக்கட் இல்லாமையால் இரத்னபுரி மாவட்ட வீரர்கள் ஊவா மாகணத்தைப் பிரதிநித்துவப்படுத்தி விளையாடுவதோடு மேல் மாகாண வடக்கு அணி, மேல் மாகாண தெற்கு அணி மற்றும் மேல் மாகாண மத்திய அணி ஆகிய அணிகள் மேல் மாகாணத்தைப் பிரதிநித்துவப்படுத்தி விளையாட உள்ளது.

ஆரம்பக் கட்டப் போட்டிகள் இரண்டு நாட்கள் கொண்ட போட்டிகளாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, இறுதிப் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டு மைதானத்தில் 3 நாட்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போட்டித் தொடரில் சிறப்பாக விளையாடி பிரகாசிப்போரில் தலைசிறந்த வீரருக்கு இலங்கை அணியின் எதிர்வரும் இங்கிலாந்து தொடரில் பங்கு பற்றும் வாய்ப்பு வழங்கப்படும்.

இலங்கை அணியின் தேவைக்கு அமைய தெரிவாகும் வீரர் பந்து வீச்சாளரா அல்லது துடுப்பாட்ட வீரரா என்று தீர்மானிக்கப்படும். இந்த இறுதித் தீர்மானம் இலங்கை கிரிக்கட் சபையின் தெரிவாளர் குழுவினால் முடிவு செய்யப்படும்.

அதுமட்டுமன்றி அந்த வீரர்களுக்கு தொடர்ந்து பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களில் ஒருவர் அவுஸ்திரேலிய மற்றும் தென்ஆபிரிக்க அணிகளுடனான தொடருக்கு தெரிவு செய்யப்படுவார் என்று இலங்கை கிரிக்கட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கை தேசிய அணியில் விளையாடும் வீரர்கள் தமது வாய்ப்புக்களை இழக்காமல் சிறப்பாக விளையாடுவதற்காகவும் இளம் வீரர்களின் திறமையை ஊக்குவிப்பதற்காகவும் இவ்வாறான ஒரு திட்டத்தை வகுத்துள்ளதாக அவர் மேலும் கூறினார். அவர் மேலும் விரிவாகக் கூறுகையில் இந்தத் திட்டத்திற்கு மொத்தமாக 26 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இளம் வீரர்களில் அதிக அக்கறை செலுத்தி அவர்களை ஊக்குவிக்க இன்னும் பணம் செலவிடவுள்ளதாக கூறிய திலங்க சுமதிபால இந்த முயற்சியின் பலனாக எதிர்வரும் 2019ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டித் தொடருக்கு இளம் திறமையுள்ள வீரர்களை தெரிவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி 2 வருடங்களுக்கு ஒரு தடவை மட்டுமே 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணம் நடைபெறுவதால் வருடாந்தம் 19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணக் கிரிக்கட் போட்டிகளை நடாத்த மற்ற ஆசிய நாடுகளுடன் கலந்து ஆலோசித்ததாகவும் அதற்கு அவர்கள் ஆதரவு வழங்கியுள்ள நிலையில் இந்த வருடம் இலங்கையில் 19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணக் கிரிக்கட் போட்டித் தொடர் நடைபெறும் எனவும், 1997.09.01க்குப் பிறகு பிறந்தவர்கள் மட்டுமே இந்தப் போட்டித் தொடரில் விளையாட முடியும் என்று திலங்க சுமதிபால தனது நீண்ட உரையாடலில் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 19ஆம், திகதி ஆரம்பிக்கும் சுப்பர் 19 மாகாணக் கிரிக்கட் போட்டித் தொடரில் வெற்றி பெரும் அணிக்கு 300,000 ரூபாய் பணப் பரிசாகவும் இரண்டாம் இடத்தை பெரும் அணிக்கு 200,000 ரூபாய் பணப் பரிசாகவும் ஒவ்வொரு போட்டிகளிலும் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்படும் வீரருக்கு 10,000 ரூபாய் பணப் பரிசாகவும் இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகனாகத் தெரிவு செய்யப்படும் வீரருக்கு 25,000 ரூபாய் பணப் பரிசாக வழங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Western Province North – Sammu Ashan (Captain), Jehan Daniel, Revan Kelly, Thilina Vimukthi, Krishan Sanjula, Nipun Sumanasinghe, Nipun Haggalla, Helitha Bamberenda, Ruchira Ekanayake, Sanka Poorna, Supun Waragoda, Dileepa Jayalath, Avishka Indrajith, Himath Jayaweera, Dushan Guruge, Samitha Ranga, Dilhara Polgampola, Sasiri Adikari, Imesh Devinda, Jason De Silva, Chaminda Thotagamuwa (Coach), USI Perera (Manager).

Western Province North

Western Province Central Squad

Western Province Central – Vishad Randika (Captain), Charana Nanayakkara, Thanuka Dabare, Sajith Chameera, Pethum Nissanka, Pasindu Sooriyabandara, Sanjula Abeywickrama, Manelkar De Silva, Niduka Welikala, Ravindu Silva, Santhush Gunathilake, Lahiru Dilshan, Neranjan Wanniarachchi, Chathura Obeysekara, Vimukthi Kulathunga, Suwanga Wijewardene, Kasun Abeyrathne, Malindu Maduranga, Ranmith Jayasena, Dinanjaya Geeth, Rohitha Perera (Coach), K H Nandasena (Manager).

Western Province South Avishka Fernando (Captain), Thilan Nimesh, Vishwa Chathuranga, Nuwanidu Fernando, Asher Warnakoolasuriya, Mishen Silva, Lakshan Fernando, Savindu Peiris, Nadun Dharshana, Kamil Mishara, Ravindu Kodituwakku, Malinda Jayod, Pasindu Sasanka, Avishka Lakshan, Deshan Dinuranga, Ravindu Salgadu, Dilesh Nanayakkara, Inosha Geshan, Ravindra Pushpakumara (Coach), Malinda Warnapura (Manager).

Western Province South

Central Province Squad

Central Province – Hasitha Boyagoda (Captain), Shanogeeth Shanmuganathan, Thisaru Dilshan, Deshan Gunasinghe, Mohommad Alfar, Gihan Witharana, Sivakumar Tiron, T Banugoban, Sandaruwan Dharmarathne, Virajitha Jayasinghe, Bawantha Udangamuwa, Mass Rahim, Janith Tennakoon, Ravishka Lakshan, Niwantha Herath, Gajitha Kotuwegoda, Sunil Fernando (Coach), Sunil Wickramanayake (Manager).

Southern ProvinceNavindu Nirmal (Captain), Ashen Bandara, Kaveesha Dilranga, Harin Buddhila, Kavindu Edireweera, Chanuka Asinsana, Amidu Udara, Chathura Milan, Nipun Ranshika, Tilanga Udeshana, Hasidu Chanuka, Dinuka Dilshan, Kasun Maduranga, Thilan Prashan, Dilum Sudheera, Tharusha Kavindya, Chaminda Kodikara (Coach), Gajaba Pitigala (Manager).

Southern Province Squad - Photo

Uva Province

Uva Province – Avindu Theekshana, Naveen Hasaranga, M Rishad, Praveen Yasas, Ravindu Sanjana, D Mapa Malindu, Chihan Kalindu, Tharuka Roshana, A Edirisinghe, Gayana Preethimal, Kavishka Dinesh, Randika Sandun, Rajitha Nirmal, Chethaka Denuwan, Thilina Maduranga, Gihan Achintha, Wasantha Wijesooriya (Captain), Oshadee Weerasinghe (Manager).

North Western Province – Damitha Silva (Captain), Keshan Wanniarachchi, Wanitha Wanninayake, Randeer Ranasinghe, Pubudu Ganegama, Tharindu Vimukthi, Dilshan, Kolure, Tharindu Wijesinghe, Nipun Dhananjaya, Dilshan Sanjeewa, Ashan Fernando, Dulanjana Ranathunga, Kamesh Nirmal, Pasindu Manelka, Ashen Charuka, Sashan Dineth, Priyamal Singhawansa, Kaveen Bandara, Sudara Priyamal, Ajith Ekanayake (Coach), Eric Upashantha (Manager).

North Western Province - Squad Photo

North Central Province Squad

North Central Province – Dasun Senevirathne (Captain), Lakshan Kaludeera, Thilina Danajaya, Shashika Bandara, Lihaja Jayasundara, Rusith Dilshan, Heshan Senera, Pubudu Bandara, Ravintha Ilangasinghe, Sahan Ishara, Asela Sigera, Nipun Lakshan, Sajith De Silva, Sachin Dissanayeka, Maduranga Sri Chandarathne, Shehan Avandiya, Dharshana Gamage (Coach), Mahinda Pethiyagoda (Manager).

Northern Province – S.P Jenifleming (Captain), Salitha Fernando, Praveen Jayawickrama, Ayana Siriwardene, V Jathushan, C Thevaprashanth, S Komitharan, S Jeroshan, M Nithushan, G Ratheeshan, K Kapilraj, S Rushanathan, T Sooriyakanthan, S Mathushan, P Abishan, S Thaposhan, U Priyalaxan, J Hevit Alodin, Y Sanjeewan, V Janapriyan, Lakshitha Herath (Coach), Jaya Prakash (Manager).

Northern Province

Eastern ProvinceR. Thenuradan (Captain), Torin Pitigala, Deshan Fernando, Lasith Crosspulle, Naveen Gunawardene, Sasindu Diwankara, Eranga Hashan, K Lakshitha, Dinesh Madusanka, Anjana Liyanage, Mohommad Rasfas, K Prasanna, M Sharuthan, Avishka Sahan, Mohommad Faheem, Mopun Madhawa, A Janaka, Tharaka Pradeep, K Nivethiannan, S Alexshan, Niroshan Bandarathilake (Coach), Gamini Perera (Manager).

U19 Super Provincial Tournament Match Fixture