யூரோ 2020 அடுத்த சுற்றில் இத்தாலி; ரஷ்யா, வேல்ஸ் முதல் வெற்றி

145
Finland vs Russia, Turkey vs Wales, Italy vs Switzerland

தமது முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று யூரோ 2020 கால்பந்து தொடரின் 16 அணிகள் சுற்றுக்கு இத்தாலி அணி தகுதி பெற்றுக்கொள்ள, ரஷ்யா மற்றும் வேல்ஸ் அணிகள் தமது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளன. 

பின்லாந்து எதிர் ரஷ்யா 

B குழுவுக்காக ரஷ்யாவின் Gazprom அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் பின்லாந்து யூரோ 2020 தொடரில் தமது இரண்டாவது வெற்றியைப் பெறுவதற்காகவும், ரஷ்யா தமது முதல் வெற்றிக்காகவும் களம் கண்டன. 

>> ரொனால்டோவுக்கு இரட்டை கோல்; ஜெர்மனியை வீழ்த்திய பிரான்ஸ்

முதல் பாதியின் உபாதையீடு நேரத்தில் ரஷ்ய வீரர் Aleksei Miranchuk முதல் கோலைப் பெற்று அணியை முன்னிலைப் படுத்தினார். 

பின்னர் இரண்டாம் பாதியில் கோல்கள் எதுவும் பெறப்படாத நிலையில், ஆட்ட நிறைவில் ரஷ்யா 1-0 என்ற கோல் கணக்கில் முதல் வெற்றியைப் பதிவு செய்துகொண்டது. 

முழு நேரம்: பின்லாந்து 0 – 1 ரஷ்யா

கோல் பெற்றவர்கள் 

  • ரஷ்யா – Aleksei Miranchuk 45+2’

துருக்கி எதிர் வேல்ஸ் 

யூரோ 2020 தொடரின் ஆரம்பப் போட்டியில் இத்தாலியிடம் 3-0 என தோல்வியடைந்த ரஷ்யா, அசர்பிஜனின் பாகு ஒலிம்பிக் அரங்கில் இடம்பெற்ற இந்த மோதலில் வேல்ஸ் அணியை எதிர்கொண்டது. 

ஆட்டத்தின் 42ஆவது நிமிடத்தில், அணித் தலைவர் கிரேத் பேல் உயர்த்தி வழங்கிய பந்தை கோலுக்கு அண்மையில் இருந்து நெஞ்சால் நிறுத்திய ஆரொன் ரம்சி, பந்தை மிக வேகமாக கோலுக்குள் செலுத்தி வேல்ஸ் அணியை முன்னிலைப்படுத்தினார். 

Watch – கால்பந்து உலகை கண்கலங்க வைத்த Christian Eriksen | Football Ulagam  

மீண்டும் 60ஆது நிமிடத்தில் பேல் முறையற்ற விதத்தில் எதிரணியின் கோல் எல்லையில் வைத்து வீழ்த்தப்பட்டமையினால் வேல்ஸ் அணிக்கு கிடைத்த பெனால்டியை அவரே பெற்றார். எனினும், அவர் அந்த வாய்ப்பின்போது பந்தை கம்பங்களுக்கு வெளியே அடித்தார். 

எனினும், போட்டியின் உபாதையீடு நேரத்தின் இறுதி நிமிடத்தில் கிடைத்த கோணர் உதையின்போது பேல் பந்தை கோலுக்கு அண்மையில் எடுத்துவந்து Connor Roberts இற்கு வழங்க, அவர் அதனை கோலாக்கினார். 

எனவே, தமது முதல் போட்டியில் சுவிட்சர்லாந்துடன் சமநிலையடைந்த வேல்ஸ், இந்தப் போட்டி நிறைவில் 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று, தொடரில் தமது முதல் வெற்றியைப் பெற்றது. இரண்டாவது தொல்வியை சந்தித்துள்ள துருக்கி, A குழுவில் கடைசி இடத்தில் உள்ளது. 

முழு நேரம்: துருக்கி 0 – 2 வேல்ஸ்

கோல் பெற்றவர்கள்   

  • வேல்ஸ் – ஆரொன் ரம்சி 42’, Connor Roberts 90+5’

இத்தாலி எதிர் சுவிட்சர்லாந்து

இத்தாலியின் Stadio Olimpico அரங்கில் குழு A இற்காக இடம்பெற்ற அடுத்த போட்டியில், சுவிட்சர்லாந்து பலம் மிக்க இத்தாலியை எதிர்கொண்டது. 

போட்டியின் முதல் 20 நிமிடங்களுக்குள் இத்தாலி அணித் தலைவர் Giorgio Chiellini கோணர் உதையின்போது உள்வந்த பந்தை ஹெடர் செய்து முதல் கோலைப் பெற்றார். எனினும், இதன்போது அவரின் கையில் பந்து பட்டதாகத் தெரிவிக்கப்பட்டு, VAR சோதனையின் பின்னர் அந்த கோல் நிராகரிக்கப்பட்டது. 

>> ஆசிய கிண்ணத்துக்கான இறுதி தகுதிகாண் சுற்றுக்கு இலங்கை தகுதி

எனினும், போட்டியின் 26ஆவது நிமிடத்தில் பெராடி மத்திய களத்தின் ஒரு எல்லையில் இருந்து பந்தை எதிரணியின் கோல் பகுதிவரை எடுத்துச் சென்று பரிமாற்றம் செய்தபோது வேகமாக அங்கு வந்த Manuel Locatelli இத்தாலி அணிக்கான முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தார். 

மீண்டும் இரண்டாம் பாதி ஆரம்பமாகி 7 நிமிடங்களில் எதிரணியின் கோல் எல்லைக்கு வெளியில் இருந்து பந்தை உதைந்து Manuel Locatelli தனது இரண்டாவது கோலையும் பெற்றார். இது அவர் சர்வதேச மற்றும் கழக மட்ட போட்டிகளில் ஒரே போட்டியில் இரண்டு கோல்களைப் பெற்ற முதல் சந்தர்ப்பமாகும். 

தொடர்ந்து 89ஆவது நிமிடத்தில் முன்கள வீரர் Ciro Immobile இத்தாலி அணிக்கான அடுத்த கோலையும் பெற்றுக் கொடுத்தார். எனவே, போட்டி நிறைவில் 3-0 என்ற கோல் கணக்கில் இத்தாலி தொடர்ந்து இரண்டாவது வெற்றியைப் பெற்று, 2020 யூரோ கிண்ணத்தில் 16 அணிகள் சுற்றுக்கு முதல் அணியாகத் தகுதி பெற்றது. 

இந்த வெற்றியுடன் இத்தாலி அணி 2018 செப்டம்பம் மாதத்தின் பின்னர் இதுவரையில் எந்தவொரு சர்வதேசப் போட்டியையும் தோற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

முழு நேரம்: இத்தாலி  3- 0 சுவிட்சர்லாந்து

கோல் பெற்றவர்கள்   

  • இத்தாலி –  Manuel Locatelli 26’ & 52’, Ciro Immobile 89’ 

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<