IPL தொடரிலிருந்து வெளியேறும் சகீப் அல் ஹஸன்

IPL 2023

193
Shakib Al Hasan opts out of IPL 2023

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் சகீப் அல் ஹஸன் நடைபெற்றுவரும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அவருடைய நிர்ணயத்தொகையான 1.5 கோடிக்கு (இந்திய ரூபாய்) வாங்கப்பட்ட இவர், தனிப்பட்ட காரணங்களுக்காக அணியிலிருந்து விலகுவதாக அணி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.

>> மொயீன் அலியின் அபார பந்துவீச்சுடன் சென்னை அணிக்கு முதல் வெற்றி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக சகீப் அல் ஹஸன் மற்றும் லிடன் டாஸ் ஆகிய இரண்டு பங்களாதேஷ் வீரர்கள் இணைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் பங்களாதேஷ் வீரர்களுக்கு IPL தொடரில் விளையாடுவதற்கான அனுமதியை அந்நாட்டு கிரிக்கெட் சபை ஆரம்பத்தில் வழங்க மறுத்திருந்தது.

எனினும், அதன் பின்னர் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை வெளியிட்ட அறிக்கையில், அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையடுத்து வீரர்கள் IPL தொடரில் விளையாடுவதற்கான அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. எவ்வாறாயினும் தனிப்பட்ட காரணங்களுக்காக சகீப் அல் ஹஸன் முழு தொடரிலிருந்தும் தற்போது விலகியுள்ளார்.

IPL தொடரின் புதிய விதிமுறைப்படி ஏலத்தில் வாங்கப்படும் வீரர்களை அணிகள் தொடரின் போது விடுவிக்க முடியாது. தொடர் நிறைவடைந்த பின்னரே அணியிலிருந்து விடுவிக்க முடியும்.

இவ்வாறான நிலையில் சகீப் அல் ஹஸன் அணியிலிருந்து விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக புதிய வீரர் ஒருவர் இணைக்கப்படுவாரா? இல்லையா? என்பது தொடர்பில் எந்தவித அறிவிப்புகளும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<