க்லாமோர்கன் கழகத்தில் இணைகிறார் ஸ்டெயின்

619
Dale Steyn

தென் ஆபிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயின் ஐ.பி.எல். தொடரில் குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவரை தற்போது இங்கிலாந்து கவுண்டி அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

நீண்ட நாட்களாக காயத்தில் இருந்த ஸ்டெயின், உடற்தகுதி பெற்று டி20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்றார். உலகக் கிண்ணத்தில் சிறப்பாக விளையாடாததால் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புக் கொடுக்கப்படவில்லை.

அதேபோல் ஐ.பி.எல். தொடரிலும் குஜராத் அணியில் அவர் தொடர்ச்சியாக இடம்பெறவில்லை. ஆடும் 11 பேரில் அவருக்கு விளையாட வாய்ப்புக் கிடைக்காத போதிலும், இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் நெட்வெஸ்ட் டி20 பிளாஸ்ட் தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

‘நெட்வெஸ்ட் டி20 பிளாஸ்ட்’ தொடரில் விளையாடும் ‘க்லாமோர்கன்’என்ற அணி ஸ்டெயினை 7 போட்டிகளில் விளையாடுவதற்கான ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தச் செய்தியை ‘கிளாமோர்கன்’ அணி உறுதி செய்துள்ளது.

இதுகுறித்து ஸ்டெயின் கூறுகையில் ‘‘இந்த நேரத்தில் கிடைத்த சிறந்த வாய்ப்பு இதுவாகும். ஐ.பி.எல். தொடரில் விளையாடிக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையை விடத்தயார் செய்வதற்கு சிறந்தது ஏதும் கிடையாது. க்லாமோர்கன் அணியின் வெற்றிக்கு என்னால் முடிந்தளவு முயற்சியை வெளிப்படுத்துவேன்” என்றார்.

க்லாமோர்கன் அணி தனது முதல் போட்டியில் மே மாதம் 26ஆம் திகதி சரே அணியை சந்திக்கிறது. ஆனால் குஜராத் லயன்ஸ் அணி மே 27ஆம் திகதி நடைபெற இருக்கும் ஐ.பி.எல் தொடரின் 2ஆவது தகுதிகான் போட்டி மற்றும் மற்றும் மே 29ஆம் திகதி நடைபெறும் இறுதிப்போட்டிக்கும் முன்னேறினால் சரே அணிக்கெதிரான போட்டியில் ஸ்டெயினால் விளையாட முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்