மேஜர் பிரீமியர் லீக்கில் சுழலில் மிரட்டிய துனித், பிரபாத், சொனால்

SLC Major League Tournament 2022

134

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் முதல்தர கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் மூன்று நாட்கள் கொண்ட மேஜர் பிரீமியர் லீக் முதல்தர கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது வாரத்துக்கான 12 போட்டிகளின் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று (17) நிறைவுக்கு வந்தன.

இம்முறை மேஜர் பிரீமியர் லீக்கில் குழு A இல் இரண்டாமிடத்தில் உள்ள முவர்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கு எதிரான போட்டியில் கொழும்பு கிரிக்கெட் கழக வீரர் சொனால் தினூஷ 167 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் முதல்தரப் போட்டிகளில் தனது சிறந்த பந்துவீச்சுப் பிரதியைப் பதிவு செய்த அவர், இம்முறை போட்டித் தொடரில் இன்னிங்ஸ் ஒன்றில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய 4ஆவது வீரராகவும் இடம்பிடித்தார்.

எவ்வாறாயினும், குறித்த போட்டியில் கொழும்பு அணிக்காக முதல் தடவையாகக் களமிறங்கிய அசித பெர்னாண்டோ மற்றும் வனிந்து ஹஸரங்கவுக்கு எந்தவொரு விக்கெட்டையும் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது.

மேஜர் பிரீமியர் லீக்கில் நிஷான் 5ஆவது சதமடிக்க; அரைச் சதத்தை தவறவிட்டார் சரித்

இதனிடையே, BRC கழகத்துக்கு எதிரான போட்டியில் SSC கழகத்தின் பிரபாரத் ஜயசூரிய (6/71), லங்கன் கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியில் கோல்ட்ஸ் கழகத்தின் துனித் வெல்லாலகே (5/90) மற்றும் நுகேகொட விளையாட்டுக் கழகத்துக்கு எதிரான போட்டியில் கடற்படை விளையாட்டுக் கழகத்தின் நவின் கவிகார (6/100) ஆகியோர் பந்துவீச்சில் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

மறுபுறத்தில் போட்டிகளின் 2ஆவது நாளான நேற்று 4 சதங்கள் பதிவாகின. இதில் NCC கழகத்தின் சந்துன் வீரக்கொடி (150), பொலிஸ் விளையாட்டுக் கழகத்தின் ஹேஷான் தனுஷ்க (140), காலி கிரிக்கெட் கழகத்தின் சாலித் பெர்னாண்டோ (133) மற்றும் இராணுவ விளையாட்டுக் கழகத்தின் கிஹான் கோரலகே (113) ஆகிய வீரர்கள் சதமடித்து அசத்தியிருந்தனர்.

அனைத்துப் போட்டிகளினதும் மூன்றாவது நாள் ஆட்டங்கள் இன்று (18) நடைபெறவுள்ளன.

போட்டியின் சுருக்கம்

ராகம கிரிக்கெட் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

ராகம கிரிக்கெட் கழகம் – 400 (118.1) – நிஷான் மதுஷ்க 125, ஜனித் லியனகே 71, துலாஜ் பண்டார 47, சமிந்த பெர்னாண்டோ 44, நளின் ப்ரியதர்ஷன 4/95, சுபுன் மதுஷங்க 2/58, நுவன் பிரதீப் 2/76

பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 242/2 (56) – ஹேஷான் தனுஷ்க 140*, துலாஷ் உதயங்க 73


SSC கழகம் எதிர் BRC கழகம்

SSC கழகம் – 373 (103.2) – கவிந்து நதீஷான் 87, நுவனிது பெர்னாண்டோ 72, நிபுன் தனன்ஜய 54, சரித் அசலங்க 44, ரொஷேன் சில்வா 25, துஷான் ஹேமன்த 4/105, துவிந்து திலகரட்ன 3/77, உமெஷ்க மொரைஸ் 2/33

BRC கழகம் – 213 (51.1) – திலகரட்ன சம்பத் 61, மலிந்த ஜயோத் 39, பிரபாரத் ஜயசூரிய 6/71, நிசல தாரக 3/31

SSC கழகம் – 128/3 (27) – நுவனிந்து பெர்னாண்டோ 56, நிபுன் தனன்ஜய 42*, திலகரட்ன சம்பத் 3/29


குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் எதிர் செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம்

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் – 239 (83.3) – அசன்த பஸ்நாயக்க 61, ரன்தீர ரணசிங்க 48, கயான் மனீஷன் 40, தரிந்து ரத்நாயக 5/93

செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 271/7 (99) – சஷ்ரிக புஸ்ஸேகொல்ல 69, சௌராப் துபே 50, சகிந்து விஜேரட்ன 3/70


Ace Capital கிரிக்கெட் கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்

Ace Capital கிரிக்கெட் கழகம் – 288 (96.1) – ரொஷான் ஜயதிஸ்ஸ 77, ஸ்வப்னில் அனில் 63, தனுக தாபரே 62, லசித் லக்ஷான் 4/65, ரஜிந்த புஞ்சிஹேவா 2/20

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 232/8 (83) – ரவீன் யசஸ் 78*, லசித் லக்ஷான் 70, கசுன் விதுர 25, நிம்சர அத்தரகல்ல 2/41, லசித் குரூஸ்புள்ளே 2/55


லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

லங்கன் கிரிக்கெட் கழகம் – 409/9d (162.2) – இஷிவர திஸாநாயக 88, கசுன் அபேரட்ன 71, தேஷான் டயஸ் 61, துனித வெல்லாலகே 5/90

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 60/2 (15) – அவிஷ்க பெரேரா 33, ஹஷான் துமிந்து 20*


களுத்துறை நகர கழகம் எதிர் காலி கிரிக்கெட் கழகம்

களுத்துறை நகரi கழகம் – 190 (51.2) – கோசல ரவிந்து 75, சவன் கன்கானம்கே 37, யெசித் ரூபசிங்க 17, ரகு சர்மா 5/52

காலி கிரிக்கெட் கழகம் – 405/6d (111) – சாலித் பெர்னாண்டோ 133, விநுர துல்சர 77, கவிந்து எதிரிவீர 72*, சமீன் கந்தனராச்சி 71, தரிந்து சிறிவர்தன 2/52

களுத்துறை நகர கழகம் – 40/1 (15) – சுகித மனோஜ் 24*


கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் முவர்ஸ் கிரிக்கெட் கழகம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 249 (76.4) – லசித் அபேரட்ன 73, கமிந்து மெண்டிஸ் 59, மினோத் பானுக 41, பிரவீன் ஜயவிக்ம 3/71, மிலான் ரத்நாயக்க 2/24, திலங்க உதேஷன 2/29, தீசன் விதுஷன் 2/52

முவர்ஸ் விளையாட்டுக் கழகம் – 215 (56.3) – ரமேஷ் மெண்டிஸ் 89, பபசர வதுகே 37, மிலான் ரத்நாயக 24, சொனால் தினூஷ 8/67

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 151/5 (42) – சொனால் தினூஷ 34, வனிந்து ஹஸரங்க 33*, நிமேஷ குணசிங்க 28, ரமேஷ் மெண்டிஸ் 3/45, பிரவீன் ஜயவிக்ரம 2/60


நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் NCC கழகம்

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் 353 (96.4) – அஞ்சலோ ஜயசிங்க 123, ஜடின் சக்சேனா 111*, அஷேன் சில்வா 25, லசித் எம்புல்தெனிய 4/132, அஷேன் டேனியல் 2/63

NCC கழகம் – 292/3 (81) – சந்துன் வீரக்கொடி 150*, சஹன் ஆரச்சிகே 85*, லஹிரு உதார 40, உபுல் இந்திரசிறி 2/115


இராணுவ விளையாட்டுக் கழகம் எதிர் பதுரெலிய விளையாட்டுக் கழகம்

இராணுவ விளையாட்டுக் கழகம் – 471/9d (116.5) – ஷெஹான் ;பெர்னாண்டோ 166, கிஹான் கோரலகே 113*, துலின டில்ஷான் 111, மஹேஷ் குமார 22, சலன டி சில்வா 4/72

பதுரெலிய விளையாட்டுக் கழகம் – 219/7 (61) – ரமீஸ் அலாம் 51*, சாஹித் மன்சூர் 46, லக்ஷான் எதிரிசிங்க 4/51, கௌமால் நாணயக்கார 2/70


கடற்படை விளையாட்டுக் கழகம் எதிர் நுகேகொட விளையாட்டுக் கழகம்

கடற்படை விளையாட்டுக் கழகம் – 180 (48.5) – அதீஷ நாணயக்கார 93, மாலிங்க மாலிகஸ்பே 30, சுபுன் லீலாரத்ன 28, சுவத் மெண்டிஸ் 5/47, சஹன் நாணயக்கார 4/66

நுகேகொட விளையாட்டுக் கழகம் – 243 (77.2) – ரனித லியனாரச்சி 77, அபிஷேக் லியனாரச்சி 60, நயன பெர்னாண்டோ 51, நவின் கவிகார 6/100

கடற்படை விளையாட்டுக் கழகம் – 175/3 (51) – அதீஷ நாணயக்கார 74*, மாலிங்க மாலிகப்சே 49, சுவத் மெண்டிஸ் 2/45


விமானப்படை விளையாட்டுக் கழகம் எதிர் பாணந்துறை விளையாட்டுக் கழகம்

விமானப்படை விளையாட்டுக் கழகம் – 440 (85.4) – உதயவன்ச பராக்ரம 119, மொவின் சுபசிங்க 114, மதுஷான் ரவிசந்தர்குமார் 59, கலன விஜேசிறி 37, இவன்க சன்ஜுல 3/89, நிமேஷ் விமுக்தி 4/151

பாணந்துறை விளையாட்டுக் கழகம் – 276/4 (87) – பார்த் பல்வத் 73, அபிஷேக் குப்தா 71*, லக்ஷான் ரொட்றிகோ 50, துலான்ஜன மெண்டிஸ் 4/76


சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம்

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் – 253 (87) – சிதார கிம்ஹான் 89, நவிந்து விதானகே 66, மொஹமட் வகாஸ் 32, ஷிரான் பெர்னாண்டோ 4/33, ரவீன் டி சில்வா 4/53

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 299 (72.4) – நவோத் பரணவிதான 89, ரொன் சந்திரகுப்த 82, சதீர சமரவிக்ரம 29, இஷித விஜேசுந்தர 4/73, ப்ரமோத் மதுவன்த 2/29

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் – 23/1

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<