பொதுமன்னிப்புக் காலத்தில் புதிய தகவல் கிடைத்துள்ளதாக ஐ.சி.சி அறிவிப்பு

167
@ICC

இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் குறித்து முக்கிய சில தகவல்களை முறைப்பாடு செய்வதற்கு ஐ.சி.சியினால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்புக் காலம்  (31) நிறைவுக்கு வருகின்றது.

இலங்கை அணியின் தற்காலிக துடுப்பாட்ட பயிற்சியாளராக அவிஷ்க குணவர்தன

கடந்த டிசம்பர் மாதம் இலங்கை அணியின் புதிய துடுப்பாட்ட..

இந்த நிலையில், .சி.சியினால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்புக் காலத்தில் பல முக்கிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடிந்ததாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்புப் பிரிவின் பொதுமுகாமையாளர் அலெக்ஸ் மார்ஷல் தெரிவித்திருந்ததுடன், இதுவரை தகவல்களை வழங்கியவர்களுக்கு தனது  நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பாக அறிவிப்பதற்கு இம்மாதம் 16ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரை மன்னிப்புக் காலத்தை சர்வதேச கிரிக்கெட் சபை வழங்கியுள்ள நிலையிலேயே, மேற்குறித்த தகவலை அலெக்ஸ் மார்ஷல் அறிக்கையொன்றில் மூலம் வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பில் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகளில் ஈடுபடுமாறு அணுகியவர்கள் தொடர்பில் வழங்கப்பட்ட பொதுமன்னிப்புக் காலம் நாளையுடன் நிறைவுக்கு வருகிறது. எனவே இதுவரை தகவல்களை வழங்கியவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுவாக ஊழல் மோசடிகள் தொடர்பில் எந்த அணுகல்களையும், தகவல்களையும் தாமதமின்றி பொதுமன்னிப்புக் காலத்தில் தவறும் பட்சத்தில் ஐந்து வருடங்கள் வரை போட்டித்தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனினும், குறித்த மன்னிப்புக் காலத்தில் நபரொருவரால் வழங்கப்படும் தகவல்களுக்கு அவர், அதை முன்னர் அறிவிக்கவில்லை என்றால் அது குற்றமாகக் கருத்தப்படும்.  

ஊழல் மோசடி பற்றிய தகவல்களை வழங்குவதற்கு ஐ.சி.சி இனால் 2 வாரகால அவகாசம்

இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்றுள்ள ஊழல்..

இந்த நிலையில், 15 நாட்களைக் கொண்ட பொதுமன்னிப்புக் காலத்தில் முதல் வாரத்தில் ஊழல் மோசடிகள் தொடர்பில் தம்மை அணுகிய நபர்கள் தொடர்பில் ஒருசில வீரர்கள் தம்மிடம் முறைப்பாடு செய்ய முன்வந்தமை தன்னை மேலும் ஊக்கப்படுத்தியதாக அலெக்ஸ் மார்ஷல் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த தகவல்களை வைத்து விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இன்னும் பல புதிய விடயங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவர முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதுஇவ்வாறிருக்க, பொதுமன்னிப்பு காலத்தின் கடைசி இரு தினங்களிலும் ஊழல் மோசடிகள் தொடர்பான தகவல்களை எவ்வித அச்சமுமின்றி பகிர்ந்து கொள்ளுமாறும், இரகசியத் தன்மை பேணப்படும் எனவும் தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

2017 மற்றும் 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை பெற்றுவந்த தொடர் தோல்விகளில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்து இலங்கை கிரிக்கெட் அணியின் இன்னாள் மற்றும் முன்னாள் வீரர்கள் 40 பேர் மற்றும் தேர்வுக் குழு உறுப்பினராக இருந்த பிரமோத்ய விக்ரமசிங்கவின் கையொப்பத்துடனான மனுவொன்று இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டது. அதன்பிறகு குறித்த மனு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவிடம் சமர்பிக்கப்பட்டது. எனினும், தற்போதுவரை அதன் முடிகள் வெளிவரவில்லை.

இலங்கையில் ஐ.சி.சி ஊழல் மோசடி அலுவலகம் நிறுவுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த அர்ஜூன

சர்வதேச கிரிக்கெட் சபை இலங்கையில் ஊழல் மோசடி…

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் மோசடிக்கு எதிரான விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், தேர்வுக் குழுவின் முன்னாள் தலைவருமான சனத் ஜயசூரியாவிடம், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஊழல் மோசடிகள் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான நுவன் சொய்சா மற்றும் முன்னாள் சகலதுறை வீரரான தில்ஹார லொக்குஹெட்டிகே ஆகியோருக்கு எதிராகவும் ஊழல் மோசடிகள் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், தற்போது அதுதொடர்பில் .சி.சியினால் தற்போது விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றது. அத்துடன், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் குறித்த வீரர்களுக்கு இடைக்காலத்தடையும் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<