டோனியை ஓய்வு முடிவுக்கு தள்ளாதீர்கள் – இங்கிலாந்து வீரர் எச்சரிக்கை

107
MS Dhoni

தலைமுறையில் ஒரு முறை மட்டுமே தோன்றும் வீரர் டோனி என்றும் அவரால் 39 வயதிலும் இந்திய கிரிக்கெட்டுக்கு பங்களிப்பு செய்ய முடியும் என்றும் தெரிவித்த இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் நசார் ஹுசைன்,  மஹேந்திரசிங் டோனியை ஓய்வு முடிவுக்கு தள்ளாதீர்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார். 

5 ஆயிரம் பேருக்கு ஒரு மாத உணவுப்பொருள் வழங்கிய சச்சின்

மும்பையில் சுமார் 5000 பேருக்கு ஒரு மாதத்துக்கு தேவையான உலர் உணவுப்

இந்திய கிரிக்கெட் அணியின் சிரேஷ் வீரரான மஹேந்திரசிங் டோனி கடந்த ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு பிறகு எந்தப் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை

அவர் சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவாரா அல்லது ஓய்வு பெறுவாரா என்பது குறித்து எதுவும் சொல்லாமல் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார்

இதற்கிடையே, .பி.எல். டி20 கிரிக்கெட் போட்டிகளில் டோனி சிறப்பாக ஆடினால் அவுஸ்திரேலியாவில் எதிர்வரும்க்டோபர்நவம்பரில் நடைபெறவுள்ள டி20  உலகக் கிண்ணப் போட்டிக்கான இந்திய அணியில் அவர் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியிருந்தார்.  

ஆனால், கொரோனா அச்சத்தால் இம்முறை .பி.எல் கிரிக்கெட் பிற்போடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது

இந்நிலையில், எம்எஸ் டோனிக்கு ஆதரவாக இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவரும், வர்ணனையாளருமான நசார் ஹுசைன் குரல் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, நசார் ஹுசைன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அளித்த பேட்டியில் கூறியதாவது, 

”இந்திய அணிக்கு டோனியைத் தேர்வு செய்ய முடியுமா? இந்தக் கேள்வி மட்டும்தான் கேட்கப்படவேண்டும். ஓர் அணிக்குத் தேர்வாக வேண்டிய அனைவருக்கும் இக்கேள்வி பொருந்தும்.

ஒருமுறை டோனி ஓய்வு பெற்றுவிட்டால், அதன்பிறகு அவரை மீண்டும் அணிக்கு கொண்டுவர முடியாது. கிரிக்கெட் விளையாட்டில் உலகமே போற்றக்கூடிய ஒரு சில ஜாம்பவான்களே இருக்கிறார்கள். 

கைத்தொலைபேசியில் கதைக்க மரத்தின் உச்சிக்கு சென்ற ஐ.சி.சி நடுவர்

இந்தியாவைச் சேர்ந்த ஐ.சி.சியின் சர்வதேச கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி உத்தர

அத்தகைய மகத்தான வீரர்களை அரிதாக, அதாவது தலைமுறைக்கு ஒருவரைத் தான் பார்க்க முடியும். அப்படிப்பட்ட டோனியை அவசரப்பட்டு முன்கூட்டியே ஓய்வு பெற வைத்து விடாதீர்கள்.

நான் டோனியை பார்த்தவரையில் அவரால் இந்திய கிரிக்கெட்டுக்கு இன்னும் நிறைய பங்களிப்பு அளிக்க முடியும் என்று நினைக்கிறேன். உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் போது ஒரு சில ஆட்டங்களில் இலக்கை விரட்டும் போது டோனி சோபிக்கத் தவறியிருக்கலாம். ஆனாலும் அவரிடம் இன்னும் திறமை இருக்கிறது.

அவர் என்ன நினைக்கிறார் என்பது டோனிக்கு மட்டும்தான் தெரியும். கடைசியில் தேர்வுக்குழுவினர் தான் தேர்வு செய்யப்போகிறார்கள்” என்று கூறியுள்ளார்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க