சதம் கடந்த டினோசன், சென். ஜோன்ஸ் கல்லூரிக்கு மற்றுமொரு இன்னிங்ஸ் வெற்றி

481

டினோசனின் சதம் மற்றும் அணித் தலைவர் அபினாஷ் கைப்பற்றிய 10 விக்கெட்டுக்களின் உதவியுடன் பாதுக்க, ஸ்ரீ பிரியரத்ன மகா வித்தியாலய அணியினை இன்னிங்ஸ் மற்றும் 35 ஓட்டங்களால் சென். ஜோன்ஸ் கல்லூரி வெற்றிபெற்றது.

பிரிவு II பாடசாலை அணிகளுக்கு இடையிலான சிங்கர் கிண்ண சுற்றுப்போட்டியின் முதலாவது சுற்று போட்டியொன்றிற்காக யாழ்ப்பாணம், சென் ஜோன்ஸ் கல்லூரியும், ஸ்ரீ பிரியரத்ன மகா வித்தியாலய அணியும் ஹொறன ஸ்ரீபாளி மைதானத்தில் மோதியிருந்தன.

மெதிவ்ஸுக்கு துடுப்பாட்ட ஆலோசனை வழங்கிய குமார் சங்கக்கார

நியூசிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் குசல் மெண்டிஸுடன் இணைந்து சாதனை…

நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பினை தேர்வு செய்த யாழ் வீரர்கள் 90 ஓட்டங்களுக்கு பாதுக்க வீரர்களை கட்டுப்படுத்தினர். துடுப்பாட்டத்தில் கவிந்து  ஈஷ்வர 34 ஓட்டங்களினையும், அஷான் ஜயசிங்க 30 ஓட்டங்களினையும் பெற்றுக்கொடுத்தனர்.

சென். ஜோன்ஸ் கல்லூரி சார்பில் பந்துவீச்சில் அணித்தலைவர் அபினாஷ் 5 விக்கெட்டுக்களினையும், இளைய வீரர் அன்ரன் அபிஷேக் 3 விக்கெட்டுக்களினையும் சாய்த்திருந்தனர்.

பின்னர் தமது முதலாவது இன்னிங்சை ஆரம்பித்த சென். ஜோன்ஸ் கல்லூரி அணிக்கு  கடந்த போட்டியில் மிகவும் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய டினோசன் சதம் ஒன்றைப் பெற்றுக்கொடுக்க மறுபக்கம் சிரேஷ்ட வீரர் சௌமியன் அரைச்சதம் கடக்க சென் ஜோன்ஸ் கல்லூரி அணி 286 என்ற வலுவான ஓட்ட எண்ணிக்கையை பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட்ட கவிந்து ஈஷ்வர, பாதுக்க தரப்பின் சார்பில் பந்து வீச்சிலும் 8 விக்கெட்டுக்களை சாய்த்தார்.

முதலாவது இன்னிங்சில் யாழ் வீரர்களை விட 196 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் தமது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த பாதுக்க தரப்பினரின் முதலாவது நாள் ஆட்டநேர நிறைவின் போது முதல் 3 விக்கெட்டுக்களை 29 ஓட்டங்களுக்கு பறிகொடுத்திருந்தனர்.

>>Photos: Jaffna Central College vs Kokuvil Hindu College | Day 02 | Under 19 Division III<<

இன்று காலை போட்டி ஆரம்பித்ததும் அபினாசின் பந்துவீச்சிற்கு மேலும் 3 விக்கெட்டுக்களை பறிகொடுத்து 40 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்கள் என்ற நிலையில் பிரியரத்ன மகா வித்தியாலய வீரர்கள் தடுமாற்றம் கண்டனர். ஏழாம் இலக்கத்தில் களம் புகுந்த கவிந்த ஈஷ்வர 29 ஓட்டங்களினை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்தும் களத்திலிருந்த கவிந்து பெர்னான்டோ 9 ஆவது விக்கெட்டுக்காக 56 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று பலத்த போராட்டத்தின் மத்தியில் அரைச்சதம் கடந்திருந்தார்.

இன்னிங்ஸ் தோல்வியினை தவிர்ப்பதற்கு கவிந்து பெர்னான்டோ பலத்த போராட்டத்தினை வெளிப்படுத்திய போதும், அவரால் ஓட்ட இடைவளியினை குறைக்க மாத்திரமே முடிந்தது.

இறுதியில் பாதுக்க ஸ்ரீ பிரியரத்ன மகா வித்தியாலய அணியை இன்னிங்ஸ் மற்றும் 35 ஓட்டங்களால் வெற்றி பெற்ற சென். ஜோன்ஸ் கல்லூரி அணி தொடரில் தொடர்ச்சியான இரண்டாவது இன்னிங்ஸ் வெற்றியினை பதிவு செய்தது.

ஐ.பி.எல். ஏலத்தில் கோடிகளை அள்ளிய வருண் சக்ரவர்த்தி

சர்வதேச கிரிக்கெட்டில் இரசிகர்கள் மத்தியில் தற்போது அதிகமாக பேசப்பட்டு வரும் கிரிக்கெட் வீரராக, ஒரு தமிழ் வீரர்…

பந்துவீச்சில் அபினாஷ் 28 ஓட்டங்களினை மாத்திரம் விட்டுக்கொடுத்து மேலும் ஒரு 5 விக்கெட் பெறுதியினை வெளிப்படுத்த, இளைய வீரர் அன்ரன் அபிஷேக் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

ஸ்ரீ பிரியரத்ன மாகா வித்தியாலயம், பாதுக்க (முதல் இன்னிங்ஸ்) – 90 (32.1) – கவிந்த ஈஷ்வர 34, அஷான் ஜயசிங்க 30, மேர்ஃபின் அபினாஷ் 5/28, அன்ரன் அபிஷேக்  3/23  

சென். ஜோன்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம் (முதல் இன்னிங்ஸ்) – 286 (52.4) -தெய்வேந்திரம் டினோசன் 125, நாகேந்திரராசா சௌமியன் 78, C.P தனுஜன் 20, கவிந்த ஈஷ்வர 8/113, மதுஷான் பீரீஸ் 2/103

ஸ்ரீ பிரியரத்ன மாகா வித்தியாலயம், பாதுக்க (இரண்டாவது இன்னிங்ஸ்) – 163 (39.2) – கவிந்த பெர்னான்டோ 66, கவிந்த ஈஷ்வர 29, அபினாஷ்  5/78, எல்ஷான் டெனுஷன் 3/22 அன்ரன் அபிஷேக் 2/29 

முடிவு – சென். ஜோன்ஸ் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 35 ஓட்டங்களால் வெற்றி

 

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<