இங்கிலாந்து தொடருக்கான இலங்கை மகளிர் குழாம் அறிவிப்பு

Sri Lanka women tour of England 2023

98

இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20i போட்டிகளுக்கான இலங்கை மகளிர் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை மகளிர் அணி இம்மாத இறுதியில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20i போட்டிகளில் விளையாடவுள்ளது. 

இலங்கை கிரிக்கெட் சபையின் யூத் லீக் தொடரில் பல தமிழ் பேசும் வீரர்கள் 

குறித்த இந்த தொடருக்கான 16 பேர்கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இதில் இறுதியாக நடைபெற்ற நியூசிலாந்து தொடரில் விளையாடிய அனைத்து வீராங்கனைகளுக்கும் வாய்ப்புக்கொடுக்கப்பட்டுள்ளது. 

குறித்த இந்த வீராங்கனைகளுடன் அச்சினி குலசூரிய மற்றும் அனுஷ்கா சஞ்சீவனி ஆகியோர் மீண்டும் குழாத்துக்கு திரும்பியுள்ளதுடன், அணித்லைவியாக தொடர்ந்தும் சமரி அதபத்து செயற்படவுள்ளார். 

சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான தொடர் இம்மாதம் 31ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், அடுத்த மாதம் 14ம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கை மகளிர் குழாம்  

சமிர அதபத்து (தலைவி), விஷ்மி குணரத்ன, ஹர்சிதா சமரவிக்ரம, நிலக்ஷி டி சில்வா, கவீஷா டில்ஹாரி, அனுஷ்கா சஞ்சீவனி, ஓசதி ரணசிங்க, காவ்யா கவிந்தி, சுகந்திகா குமாரி, இனோகா ரணவீர, உதேசியாக பிரபோதனி, ஹன்சிமா கருணாரத்ன, இனோஷி பெர்னாண்டோ, இமேஷா டுலானி, ஹாசினி பெரேரா, அனுஷ்கா சஞ்சீவனி, அச்சினி குலசூரிய 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<