இலங்கை அணியுடனான மூன்றாவது டெஸ்ட்டில் அன்டர்சனுக்கு ஓய்வு

219

சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கொழும்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23) நடைபெறவுள்ள மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இருந்து இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சனுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை (ECB) தெரிவித்துள்ளது.

இலங்கை டெஸ்ட் குழாமில் புதுமுக சுழல் பந்துவீச்சாளர் இணைப்பு

கொழும்பு, SSC மைதானத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23) ஆரம்பமாகவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான 3 ஆவது மற்றும்…

இதேநேரம், அன்டர்சனுக்கு பதிலாக இங்கிலாந்துஇலங்கை அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் மூன்றாவது இறுதிப் போட்டியில் விளையாடும் பதில் வீரர் யார் என்ற விபரமும் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் ஆடாமலிருந்த வேகப்பந்து வீச்சாளரான ஸ்டுவார்ட் ப்ரோட், குறித்த போட்டிக்கான இங்கிலாந்து குழாத்திற்குள் இணைக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்துஇலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், இங்கிலாந்து அணி தொடரினை 2-0 என கைப்பற்றியுள்ளது. இந்த டெஸ்ட் தொடர் வெற்றிக்காக அன்டர்சன் இங்கிலாந்து அணிக்கு எதிர்பார்த்த பங்களிப்பு ஒன்றினை வழங்க தவறியிருந்தார். நடைபெற்று முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில், நான்கு இன்னிங்ஸ்களிலும் பந்துவீசிய அன்டர்சன் அவற்றில் 41 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டினை மாத்திரமே சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மறுமுனையில் சுழல் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய இந்த டெஸ்ட் தொடரின் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டு விட்ட காரணத்தினால் இங்கிலாந்து அணி ஏனைய வேகப்பந்து வீச்சாளர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கி பரிசோதனைகள் செய்ய தீர்மானித்திருக்கின்றது. இதனாலேயே, அன்டர்சனுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு ஸ்டுவார்ட் ப்ரோட் அழைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை மண்ணில் உலக சாதனை படைத்த இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள்

பல்லேகலை மைதானத்தில் கடந்த 14ஆம் திகதி தொடங்கிய இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது…

இங்கிலாந்து அணிக்காக மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கென உள்வாங்கப்பட்டுள்ள ப்ரோட், இந்த ஆண்டு இந்திய அணியுடன் இங்கிலாந்தின் சொந்த மண்ணில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரில் 16 விக்கெட்டுக்களைச் சாய்த்து தனது தரப்பு குறித்த டெஸ்ட் தொடரை கைப்பற்ற காரணமாகவிருந்தார்.

மேலும், இங்கிலாந்து அணி அடுத்த வருட ஆரம்பத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. குறித்த சுற்றுப் பயணத்தின் போது நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிகளுக்கான பரிசோதனையாகவும் ஸ்டுவார்ட் ப்ரோட் இலங்கை அணியுடன் இடம்பெறும் டெஸ்ட் போட்டியில் ஆடவிருக்கின்றார்.

இதேவேளை, இங்கிலாந்துஇலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் உபாதைக்கு ஆளாகிய பந்துவீச்சு சகலதுறை வீரர் சேம் கர்ரனும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது உறுதியாகாத நிலையில் அவரின் இடத்தினை நிரப்ப துடுப்பாட்ட வீரரான ஜோனி பெயர்ஸ்டோவ் இங்கிலாந்து அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.  

 

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<