தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தொடர்ந்து சிம்பாப்வேவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அபிவிருத்தி அணியினர் முதலாவது டெஸ்ட் போட்டியை சிம்பாபே அபிவிருத்தி அணியுடன் 28ஆம்  திகதி  ஹராரே மைதானத்தில் ஆரம்பித்தனர்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அபிவிருத்தி  அணியின் தலைவர் ரமேஷ் புத்திக சிம்பாபே அபிவிருத்தி அணியினரை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார். ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய அணித்தலைவர் பிரியன் சாரீ, சார்லஸ் குஞ்செ ஆகியோர் இணைப்பாட்டமாக 131 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு வலுவூட்டினர். அதைத் தொடர்ந்து அரைச்சதம் பெற்ற குஞ்சே 53 ஓட்டங்களுடனும், சாரீ 76 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். சிம்பாபே அபிவிருத்தி அணி முதலாவது இனிங்ஸுக்காக சகல விக்கட்டுகளயும் இழந்து 349 ஓட்டங்களைக் குவித்தனர்

இலங்கை அபிவிருத்தி அணியின் பந்து வீச்சைப் பொருத்தமட்டில் செஹான் மதுசங்க, அணுக் பெர்னாண்டோ, அசலங்க ஆகியோர் தலா 2 விக்கட்டுகளை வீழ்த்தினர். முதல் இனிங்ஸ்  முடிவில் சிம்பாபே அபிவிருத்தி அணியினர் 100.1 ஒவர்களுக்கு முகம் கொடுத்து 349 ஓட்டங்களுக்கு சகல  விக்கட்டுகளையும் இழந்தனர்.

முதலாவது இனிங்ஸைத் தொடர்ந்த இலங்கை அபிவிருத்தி அணியினர் சகல விக்கட்டுகளையும்  இழந்து 346 ஓட்டங்களைக் குவித்தனர். இதில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய சந்துன் வீரக்கொடி 167 பந்துகளை எதிர்கொண்டு 21 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கலாக 151 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். மறு முனையில் நிதானமாக ஆடிய அசலங்க 103 ஓட்டங்களைப் பெற்று சதத்தை பூர்த்திசெய்தார். இவர்கள் இருவரும் இணைப்பாட்டமாக 236 ஓட்டங்களைப் பெற்று  அணிக்கு வலுவூட்டினர். மும்பா சிறப்பாக பந்துவீசி 89 ஓட்டங்களைக் கொடுத்து 6 விக்கட்டுகளையும், விக்டர் 42 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.

மூன்றாவது நாளில் இரண்டாவது இனிங்ஸைத் தொடர்ந்த  சிம்பாபே அபிவிருத்தி அணியினர் இலங்கை அபிவிருத்தி அணியினரின் பலத்த பந்து வீச்சு காரணமாக சகல விக்கட்டுகளையும் இழந்து 177 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர். இதில் அதிக பட்சமாக அணித்தலைவர் பிரியன் சாரி 59 ஓட்டங்களைக் குவித்தார். இலங்கை அபிவிருத்தி அணி சார்பகப் பந்து வீச்சில் கசுன் மதுசங்க, சதுரங்க ஆகியோர் தலா 3 விக்கட்டுகளை வீழ்த்தினர். மூன்றாவது நாளில் 191 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அபிவிருத்தி அணியினர் 1 விக்கட்டை இழந்து 38 ஓட்டங்களை பெற்றிருந்தனர். வாதுக 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.  

இறுதி நாளில்  9 விக்கட்டுகள் கைவசத்துடன் 143 ஓட்டங்களை வெற்றி  இலக்காகக் கொண்டு இலங்கை அபிவிருத்தி அணியினர் 4 வது நாளை தொடரவுள்ளனர். இப்போட்டியின் முடிவு எவ்வாறு அமையும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

போட்டியின் சுருக்கம்

சிம்பாபே அபிவிருத்தி அணி – 349 பிரியன் சாரீ 76, சார்லஸ் குஞ்சே 53, கும்பீ 47,  முஸகண்டா 61, ஜொங்வெ 50 – அசலங்க 2/79 , செஹான் மதுசங்க 2/69, சதுரங்க 1/52, தனஞ்சய 1/73, பெர்னாண்டோ 2/23

இலங்கை அபிவிருத்தி அணி –  346 வீரக்கொடி 151, அசலங்க 103, கசுன்  மதுசங்க 25* – விக்டர் 3/48, மும்பா 6/89, ஜோங்வெ 1/69

சிம்பாபே அபிவிருத்தி அணி – 177 பிரியன் சாரீ 59, சார்லஸ் குஞ்சே 53 , கும்பீ 23,  முஸகண்டா 24, ஜொங்வெ 20 – அசலங்க 2/79 , செஹான்  மதுசங்க 3/25, சதுரங்க 3/50, கசுன் மதுசங்க 2/33,பெர்னாண்டோ 1/24

இலங்கை அபிவிருத்தி அணி –  38/1 வாதுக 22* – ஜோங்வெ 1/3