தற்பொது நடைபெற்று வரும் உள்ளூர் LMS (Last Man Stand) போட்டிகளில் வெற்றி பெறும் அணி, உலக LMS கிரிக்கெட் அணியுடனான கண்காட்சி போட்டியொன்றில் விளையாடவுள்ளது. இப்போட்டி நவம்பர் 11ஆம் திகதி ஞாயிற்றுகிழமை  P.சரா ஓவல் மைதானத்தில் மாலை 2.3 மணிக்கு நடைபெறும்.  

இதுதொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடொன்று நேற்று புதன்கிழமை MCA மைதானத்தில் நடைபெற்றது. இதன்போதே அதிகாரிகள் இந்த போட்டி தொடர்பிலான அறிவிப்பை வௌியிட்டனர்.

12 கிரிக்கெட் அணிகளை உள்ளடக்கியள்ளூர் LMS சுற்றுத்தொடரின் குழு மட்டத்திலான போட்டிகள் தற்பொழுது கந்தானை டி மெசனொட் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இதன் இறுதி லீக் போட்டிகளை டிசம்பர் 1௦ஆம் திகதி நடாத்துவற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இதில் முதல் நான்கு இடங்களையும் பெறும் அணிகள் அரையிறுதிப் போட்டிகளுக்குத் தெரிவாகும். அதன்படி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் எதிர்வரும் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெறும். இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி இலங்கை அணியாக பிரதிநிதித்துவப்படுத்தி உலக கிரிக்கெட் அணியுடன் அதே தினத்தில் மோதும்.

சாதாரணமாக இரண்டு மணித்தியாலயங்கள் நடைபெறும் குறித்த LMS போட்டிகளானது, “கிரிக்கெட் விளையாட ஒரு புதிய வழிஎன்ற எண்ணக்கருவில் உருவானதாகும். அத்துடன், கிரிக்கெட் விளையாடும் மற்றும் பழகும் அனைத்து கிரிக்கெட் பிரியர்களுக்கும் இது சிறந்த போட்டியையும் உட்சாகத்தையும் வழங்குகின்றது.

8 கிரிக்கெட் வீரர்களை உள்ளடக்கிய இந்த LMS T-20 வடிவமானது, ப்ஜோர்ன் ப்ரிக்ஸ் மற்றும் வேய்ன் கிரீவ் ஆகிய ஆங்கிலேயர்களால் இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்ப கட்டமாக இந்த லீக் போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் இடம்பெற்றன. பின்னர்  பிரசித்திபெற்ற இந்தப் போட்டி ஏனைய நாடுகளுக்கும் பரவி, தற்போது 25௦௦க்கும் அதிகமான அணிகள் விளையாடி வருகின்ற ஒரு போட்டியாக இது உருவெடுத்துள்ளது.

LMS விளையாட்டிற்கு என்று தனியான இணையதளமொன்றும் செயற்படுகின்றது. அவ்விணையதளத்தில் வீரர்களின் விபரங்கள் மற்றும் தரவரிசை என்பன பதியப்பட்டு வருகின்றன. குறித்த விபரங்கள் மூலம் LMS T-20 போட்டிகளில் பங்குபற்றிய அனைத்து வீரர்கள் குறித்த விபரங்கள் மற்றும் அவர்களது திறமைகள் தொடர்பிலான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். அதேநேரம், போட்டியிட்ட அணிகளும் சர்வதேச அளவில் தரவரிசைப்படுத்தப்பட்டும் உள்ளமை முக்கிய விடயமாகும்.   

பிரசித்தி பெற்ற தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, நியுசிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ், இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அரபு இராட்சியம் போன்ற நாடுகளும் இந்த LMS T-20 போட்டிகளுக்கு தற்பொழுது அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றன. அத்துடன் கிரிக்கெட் போட்டிகளில் வளர்ந்து வரும் நாடான ஐக்கிய அமெரிக்காவும் LMS T-20 போட்டிகளில் கவரப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை LMS T-20 உலக கிண்ணப் போட்டிகள் நடைபெறுகின்றமை இதன் மீதான ஆர்வத்திற்கு மற்றொரு சான்றாக உள்ளது.

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை தொழிலதிபர் மற்றும் கிரிக்கெட் பிரியரான ஷேரன் பெர்னாண்டோ, LMS T-20 போட்டியை இலங்கைக்கு அறிமுகப்படுத்தினார். 2021ஆம் ஆண்டு LMS T-20 உலக கிண்ண போட்டிகளை இங்கு நடாத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

”இந்த புதிய LMS T-20 வடிவமானது இலங்கைக்கு ஒரு வரப்பிரசாதமாகும். இப்போட்டிகளை கண்டி, காலி, நீர்கொழும்பு, கம்பஹா போன்ற நகரங்களுக்கு எதிர்காலத்தில் விரிவுபடுத்த எதிர்பார்க்கின்றோம். மேலும், கிரிக்கெட் பிரியர்கள் அனைவரையும், ஞாயிற்றுகிழமை நடக்கவிருக்கும் இந்த அற்புதமான கிரிக்கெட் போட்டியை வந்து பார்த்து ரசிக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறோம் என்று தெரிவித்தார்.

215ஆம் ஆண்டுக்கான சம்பியன்சிப் போட்டிகள் அவுஸ்திரேலியாவின் கென்சிங்டன் ஓவலில் இடம்பெற்றதோடு, குறித்த போட்டிகள் உலகம் முழுவதும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டன.

அடுத்த உலக சம்பியன்ஷிப் போட்டிகள் தென்னாபிரிக்காவின் கேப்டவுன் நகரில் 217ஆம் ஆண்டு நடைபெறவுள்ளன. எந்தவொரு நாடும் குறித்த போட்டிகளில் பதிவு செய்து பங்குபற்றுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த போட்டிகளை உள்ளூர் மற்றும் தேசிய ரீதியில் வளர்ச்சியடையச் செய்வதற்கு ஊக்குவிப்புத் தொகைகளும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.       

LMS T-20 தளத்தினை பார்வையிட