யங் ஹீரோஸ் வீரர்களை வீழ்த்திய சிவனாந்த அணி

136

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) கிழக்கு மாகாண உள்ளூர் கழகங்கள் இடையே ஏற்பாடு செய்து நடாத்தும் டிவிஷன் – II ஒருநாள் தொடரின் போட்டியொன்றில், ஏறாவூர் யங் ஹீரோஸ் அணியினை மட்டக்களப்பு சிவானந்தா அணியினர் 5 விக்கெட்டுக்களால் தோற்கடித்திருக்கின்றனர்.

ஓட்டமாவடி அமீர் அலி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (2) ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஏறாவூர் யங் ஹீரோஸ் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து கொண்டது.

லக்கி விளையாட்டுக் கழகத்தினை தோற்கடித்த ஏறாவூர் யங் ஸ்டார் அணி

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) கிழக்கு மாகாண உள்ளூர் கிரிக்கெட் ……..

அதன்படி, போட்டியில் முதலில் துடுப்பாடிய யங் ஹீரோஸ் அணியினர் 38 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து, 186 ஓட்டங்களை எடுத்திருந்தனர்.

யங் ஹீரோஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில், அரைச்சதம் பெற்ற அஸார்தீன் 62 ஓட்டங்களையும், பாஷில் 50 ஓட்டங்களையும் பெற்றனர்.

இதேநேரம், சிவனாந்த அணியின் பந்துவீச்சில் லக்ஷான் 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, சாத்வீகன் மற்றும் ரொபின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

பின்னர், போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 187 ஓட்டங்களை அடைய சிவனாந்த அணி பதிலுக்கு துடுப்பாடியது. ஆரம்பத்தில் சிவனாந்த அணி, துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட தவறிய போதிலும், சஞ்சீவ் மற்றும் தவா ஆகியோர் தமது பெறுமதியான ஓட்டங்கள் மூலம் தமது தரப்பிற்கு வலுச் சேர்த்தனர். 

தொடர்ந்து, இந்த இரண்டு வீரர்களினதும் துடுப்பாட்ட உதவியோடு சிவானந்த அணி போட்டியின் வெற்றி இலக்கினை 45.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து அடைந்து கொண்டது. 

சிவனாந்த அணியின் வெற்றிக்கு உதவிய சஞ்சீவ் 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்க, தவா 30 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.

Photo Album : Inter Provincial Cricket Tournament 2019 | Division II – Eravur YHSC Vs Batticaloa Sivananda SC

ஏறாவூர் யங் ஹீரோஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் இஹ்கான், முஜீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் சாய்த்த போதிலும் அவர்களின் பந்துவீச்சு வீணாகியிருந்தது.

போட்டியின் சுருக்கம்

யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் – 186 (38) அஸார்தீன் 62, பாஷில் 50, லக்ஷன் 4/37, ரொபின் 2/16, சாத்வீகன் 2/42

சிவானந்த விளையாட்டுக் கழகம் – 187/5 (45.3) சஞ்சீவ் 42*, தவா 30*, முஜீப் 37/2, இஹ்கான் 2/42

முடிவுசிவானந்தா விளையாட்டுக் கழகம் 5 விக்கெட்டுக்களால் வெற்றி

கிழக்கு மாகாண கழக அணிகள் பங்குபெறும் இந்த டிவிஷன் – II கிரிக்கெட் தொடர் பற்றிய மேலதிக விபரங்கள், புகைப்படத் தொகுப்பு என்பவற்றினைப் பெற்றுக்கொள்ள தொடர்ந்து ThePapare.com உடன் இணைந்திருங்கள். 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<