அமெரிக்காவில் நடைபெறவுள்ள புதிய T20 லீக்கில் 4 இலங்கை வீரர்கள்!

Major League Cricket 2023

310
Major League Cricket 2023

அமெரிக்காவில் முதன்முறையாக நடைபெறவுள்ள மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் (MLC) இலங்கையைச் சேர்ந்த நான்கு வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

மொத்தமாக 9 சுற்றுகளாக நடைபெற்ற MLC வீரர்கள் வரைவில் சர்வதேசத்தைச் சேர்ந்த பல முன்னணி வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர். இதில், இலங்கையைச் சேர்ந்த முன்னணி சகலதுறை வீரர் வனிந்து ஹஸரங்க வொசிங்டன் பிரீடம் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

>>இன்னிங்ஸ் தோல்வியுடன் டெஸ்ட் தொடரில் வைட்வொஷ் செய்யப்பட்ட இலங்கை

அதேநேரம் இலங்கையைச் சேர்ந்த செஹான் ஜயசூரிய, அஞ்செலோ பெரேரா ஆகியோர் சீட்ல் ஓர்கஸ் அணியில் இடம்பிடித்துள்ளதுடன், லஹிரு மிலந்த டீம் டெக்சஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். இந்த நான்கு வீரர்களும் இம்முறை விளையாவுள்ள MLC தொடரில் சர்வதேசத்தின் பல முன்னணி வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இதில் சீட்ல் ஓர்கஸ் அணியில் குயிண்டன் டி கொக், மிச்சல் மார்ஷ் ஆகியோரும் வொசிங்டன் பிரீடம் அணியில் வனிந்து ஹஸரங்கவுடன் அன்ரிச் நோக்கியா, சென் பிரான்சிகோ யுனிகோர்ன்ஸ் அணியில் ஆரோன் பின்ச், மார்கஸ் ஸ்டொயிஸ், கோரி எண்டர்சன் மற்றும் லியம் பிளங்கட் ஆகியோர் விளையாடவுள்ளனர்.

தொடரில் மொத்தமாக 6 அணிகள் விளையாடவுள்ளதுடன் 4 அணிகளை இந்தியன் பிரீமியர் லீக்கின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர். இதில் டீம் லொஸ் ஏஞ்சல்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உரிமையாளர்கள் வாங்கியுள்ளதுடன், டீம் டெக்சஸ் அணியை சென்னை சுபர் கிங்ஸ் நிர்வாகவும், சீட்ல் ஓர்கஸ் அணியை டெல்லி கெப்பிட்டல்ஸ் நிர்வாகமும், எம்.ஐ. நியூவ் யோர்க் அணியை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகமும் வாங்கியுள்ளன.

MLC தொடர் ஜூலை 13ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், வீரர்கள் வரைவு நிறைவுபெற்றாலும் அணிகள் தொடர்ச்சியாக வீரர்களை அணிகளில் ஒப்பந்தம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு அணியில் 8 வெளிநாட்டு வீரர்களுடன் 18 வீரர்களை இணைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<