இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையடுத்து குறித்த பதவியிலிருந்து விலகுவதாக இவர் தேர்வுக்குழுவிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
>>அமெரிக்காவில் நடைபெறவுள்ள புதிய T20 லீக்கில் 4 இலங்கை வீரர்கள்!
சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் இன்று நிறைவுப்பெற்றது. தொடரின் முதல் போட்டியில் இலங்கை வீரர்கள் போராடி தோல்வியடைந்திருந்த போதும், இரண்டாவதுப் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்திருந்தனர். இந்தநிலையில் தன்னுடைய பதவி விலகல் தொடர்பில் திமுத் கருணாரத்ன அறிவித்துள்ளார்.
திமுத் கருணாரத்ன கடந்த 2019ஆம் ஆண்டு தினேஸ் சந்திமாலுக்கு பதிலாக டெஸ்ட் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். முதல் தொடரில் தென்னாபிரிக்க அணியை அவர்களுடைய சொந்த மண்ணில் இலங்கை அணி வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது. இதனால் தென்னாபிரிக்காவில் டெஸ்ட் தொடர் வென்ற முதல் வெளிநாட்டு அணியின் தலைவர் என்ற பெருமையும் இவரை சார்ந்திருந்தது.
திமுத் கருணாரத்ன தலைமையில் இலங்கை அணி இதுவரை 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன் 10 வெற்றிகள், 9 தோல்விகள் மற்றும் 7 போட்டிகளை சமப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<