Home Tamil இளையோர் ஒருநாள் தொடரை சமநிலை செய்த இங்கிலாந்து

இளையோர் ஒருநாள் தொடரை சமநிலை செய்த இங்கிலாந்து

114
Sri Lanka vs England 2024 - 2nd Youth ODI

சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து 19 வயதின் கீழ்ப்பட்டோர் அணிகள் இடையிலான இளையோர் ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில், இங்கிலாந்து 30 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.  

மேலும் இந்த வெற்றியுடன் மூன்று போட்டிகள் இளையோர் ஒருநாள் தொடரினையும் ஒரு போட்டி மீதமிருக்க இங்கிலாந்து 1-1 என சமநிலை செய்துள்ளது. 

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை இளம் கிரிக்கெட் அணி அங்கே மூன்று போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரில் தற்போது பங்கேற்று வருகின்றது 

>>தினேஷ் கார்த்திக்கிற்கு RCB அணியில் புதிய பதவி<<

அதன்படி இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இலங்கை வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி ஹோவ் நகரில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து இளம் வீரர்கள் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தனர். அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 360 ஓட்டங்கள் எடுத்தது. 

இங்கிலாந்து தரப்பில் ஆரம்ப வீரராக களம் வந்த ப்ரெட்டி மெக்கேன் அசத்தல் சதம் விளாசியதோடு 139 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு 22 பெளண்டரிகள் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 174 ஓட்டங்கள் பதிவு செய்தார். இலங்கை இளையோர் பந்துவீச்சில் அதன் தலைவர் தினுர கலுப்பான 81 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார் 

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 361 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை சிறந்த ஆரம்பம் பெற்ற போதிலும் 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 330 ஓட்டங்களுடன் தோல்வியினைத் தழுவியது 

இலங்கைத் துடுப்பாட்டம் சார்பில் புலிந்து பெரேரா 64 ஓட்டங்கள் எடுத்திருந்தார். அதேநேரம் கயான வீரசிங்க 57 ஓட்டங்களோடு போராட்டத்தினை வெளிப்படுத்தினார் 

>>சகலதுறையிலும் அசத்திய ஷானக! ; கண்டி அணிக்கு இலகு வெற்றி!<<

மறுமுனையில் இங்கிலாந்து பந்துவீச்சு சார்பில் லுக் பென்கென்செய்டேன் 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க தன்சிம் செளத்ரி, டொமினிக் கெல்லி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்தனர்.

Result


England U19
360/7 (50)

Sri Lanka U19
330/10 (49.2)

Batsmen R B 4s 6s SR
Keshana Fonseka c Pulindu Perera b Dinura Kalupahana 9 20 1 0 45.00
Freddie McCann c Diniru Abeywickramasinghe b Dinura Kalupahana 174 139 22 3 125.18
Noah Thain c Mahith Perera b Dinura Kalupahana 66 76 8 1 86.84
Charlie Allison c Pulindu Perera b Dumindu Sewmina 46 43 4 2 106.98
Luc Benkenstein c Mahith Perera b Dumindu Sewmina 10 3 1 1 333.33
Rocky Flintoff b Dinura Kalupahana 3 5 0 0 60.00
Dominic Kelly not out 32 11 4 2 290.91
Haydon Mustard b Dinura Kalupahana 2 2 0 0 100.00
Farhan Ahmed not out 1 1 0 0 100.00


Extras 17 (b 0 , lb 0 , nb 0, w 12, pen 5)
Total 360/7 (50 Overs, RR: 7.2)
Bowling O M R W Econ
Hivin Kenula 7 0 44 0 6.29
Dumindu Sewmina 10 1 91 2 9.10
Dinura Kalupahana 10 0 81 5 8.10
Thisara Ekanayake 8 0 62 0 7.75
Vihas Thewmika 10 0 35 0 3.50
Praveen Maneesha 5 0 42 0 8.40


Batsmen R B 4s 6s SR
Pulindu Perera c Dominic Kelly b Luc Benkenstein 64 59 8 1 108.47
Thisara Ekanayake c Noah Thain b Dominic Kelly 2 3 0 0 66.67
Gayana Weerasinghe c Freddie McCann b Farhan Ahmed 57 42 10 0 135.71
Mahith Perera lbw b Tazeem Chaudry Ali 15 19 0 1 78.95
Sharujan Shanmuganathan b Tazeem Chaudry Ali 25 29 3 0 86.21
Dinura Kalupahana c Haydon Mustard b Luc Benkenstein 6 12 0 0 50.00
Diniru Abeywickramasinghe c Noah Cornwell b Luc Benkenstein 22 29 1 0 75.86
Praveen Maneesha lbw b Luc Benkenstein 38 29 5 0 131.03
Hivin Kenula c Luc Benkenstein b Dominic Kelly 30 37 3 0 81.08
Dumindu Sewmina run out (Luc Benkenstein) 14 22 2 0 63.64
Vihas Thewmika not out 24 16 5 0 150.00


Extras 33 (b 0 , lb 4 , nb 1, w 28, pen 0)
Total 330/10 (49.2 Overs, RR: 6.69)
Bowling O M R W Econ
Noah Cornwell 8 0 66 0 8.25
Dominic Kelly 9.2 0 52 2 5.65
Farhan Ahmed 10 0 71 2 7.10
Noah Thain 2 0 19 0 9.50
Tazeem Chaudry Ali 10 0 41 2 4.10
Luc Benkenstein 10 0 77 4 7.70



>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<