வீண் போன இலங்கை கனிஷ்ட கரப்பந்தாட்ட அணியின் போராட்டம்

121
Sri Lanka U19 volleyball

ஆசிய கனிஷ்ட கரப்பந்தாட்ட சம்பியன் கிண்ணத் தொடரில் பங்கு கொண்ட இலங்கையின் கரப்பந்தாட்ட கனிஷ்ட அணியினர், தாம் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளனர்.  

யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்க தொடரில் சென்றலைட்ஸ், K.C.C.C அணிகள் சம்பியன்

ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளுக்கும் இடம்பெற்றிருந்த இத்தொடரின் முதலாவது சுற்று லீக் முறையிலும் அதற்கு அடுத்த சுற்று Play off முறையிலும் இடம்பெற்றிருந்தன….

இந்த ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்ட ஆசிய கனிஷ்ட கரப்பந்தாட்ட சம்பியன் கிண்ணத் தொடர் மார்ச் 28ஆம் திகதி முதல் மியன்மாரில் நடைபெற்று வருகின்றது. இந்த சம்பியன்ஷிப் போட்டித் தொடருக்காக இலங்கை உள்ளிட்ட 12 நாடுகள் பங்குபற்றுகின்றன. குறித்த 12 நாடுகளின் அணிகளும் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் மூன்று அணிகள் இடம்பெறும் விதத்தில் போட்டிகள் இடம்பெறுகின்றன.

தாய்லாந்து எதிர் இலங்கை

இலங்கை கனிஷ்ட அணி இத்தொடரில் தமது முதல் போட்டியாக வலிமை மிக்க தாய்லாந்து அணியுடன் மோதியது. இந்தப் போட்டியில் தாய்லாந்து அணி 25-10, 25-15, 25-23 என்ற செட் கணக்கில் வெற்றியீட்டியது.

கடந்த முறை இலங்கையில் நடைபெற்றிருந்த சம்பியன் கிண்ண தொடருக்கு தாய்லாந்து அணி பங்குபற்றியிருக்கவில்லை. எனினும், இம்முறை வலிமைமிக்க அணியுடன் களமிறங்கிய அவர்கள், முதலாவது சுற்றில் முழு அணியின் சிறந்த பங்களிப்பு மற்றும் சிறந்த களத் தடுப்பு ஆகியவற்றால் 25-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றனர்.

இரண்டாவது சுற்றிலும்  தாய்லாந்து அணியினரே தமது முழு ஆதிக்கத்தையும் செலுத்தி இருந்தனர். சிறப்பாக விளையாடிய மஹேல பண்டார ஜெயலத் தாய்லாந்து அணிக்கு சாவலாக இருந்த போதிலும், அவர்கள் தடைகள் அனைத்தையும் முறியடித்து 25-15 என்ற செட் கணக்கில் மீண்டும் வெற்றி பெற்றனர்.

மூன்றாவது சுற்றில் தாய்லாந்து அணி 8-5 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை வகித்தது. எனினும் சிறப்பாக விளையாடிய இலங்கை அணி 10-10 என்ற அடிப்படையில் வலிமைமிக்க தாய்லாந்து அணியை சமப்படுத்தியது.

அதனையடுத்து தாய்லாந்து அணி தமது தரப்பில் இரண்டு வீரர்களை மாற்றம் செய்து மாற்றுத் திட்டத்துடன் விளையாடியது. அந்த வகையில் அவ்வணி மேற்கொண்ட மாற்றங்களால் போட்டியின் நிறைவில் தகுந்த பலனைப் பெற்று, 23-21  என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றியீட்டியது.     

இலங்கை எதிர் ஜப்பான்

நேற்றைய தினம் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கிடையிலான விறுவிறுப்பான போட்டியில், ஜப்பான் 3-0 அடிப்படையில் வெற்றியீட்டி, தொடரில் தமது முதலாவது வெற்றியைப் பதிவு செய்துகொண்டது. ஜப்பான் அணி முதலாவது சுற்றில் 25-14 என்ற புள்ளிகள் அடிப்படையில் இலகுவான வெற்றியை பதிவு செய்த போதும், இரண்டாவது சுற்றில் பலத்த போட்டிக்கு மத்தியில் இலங்கை அணியை 25-21 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிகொண்டது.

இறுதிச் சுற்றில் இலங்கை அணி கடுமையான முறையில் போராடிய பொழுதிலும், வலிமைமிக்க ஜப்பான் அணி 25-17 என்ற அடிப்படையில் இலகுவான வெற்றியை பதிவு செய்து கொண்டது.

ஜப்பான் அணி சார்பாக சிறப்பாக விளையாடிய சுநிசிரோ சடோ அவ்வணி சார்பாக ஆகக் கூடுதலாக 15 புள்ளிகளை பதிவு செய்த அதேவேளை, இலங்கை அணி சார்பாக பிரிஸ் ஹெவா 16 புள்ளிகளைப் பதிவு செய்தார்.

ஏனைய போட்டிகளின் முடிவுகள்

ஹொங்கொங் 0 – 3 மியன்மார் (15-25, 17-25, 15-25)
சீனா 3 -1 தாய்பேய் (28-30, 25-23, 25-19, 25-18)
இரான் 0 – 3 கொரியா (19-25, 21-25, 21-25)
அவுஸ்திரேலியா 3-0 ஹொங்கொங் (25-15, 25-7, 25-21)