ஆப்கானுடனான வெற்றிக்கு அம்லா மற்றும் தாஹிரைப் புகழும் டு ப்ளெசிஸ்

117
Image Courtesy - Getty Images

உலகக் கிண்ண கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று (15) நடைபெற்ற லீக் ஆட்டத்தில், 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்க அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

தென்னாபிரிக்க அணி இந்த தொடரில் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து மிக மோசமான நிலைமையில் இருந்தது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது.

உலகக் கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்க அணிக்கு முதல் வெற்றி

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின்…

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றி அந்த அணிக்கு நம்பிக்கை அளித்து உதவும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த அணியின் அனுபவமிக்க பந்துவீச்சாளரான இம்ரான் தாஹிரின் அபார பந்துவீச்சு மற்றும் ஹஷிம் அம்லாவின் துடுப்பாட்டம் என்பவற்றின் உதவியுடன் தென்னாபிரிக்க அணி இலகு வெற்றியொன்றைப் பெற்றுக்கொண்டது.

இந்த நிலையில், வெற்றிக்குப் பிறகு தென்னாபிரிக்க அணியின் தலைவர் பாப் டு ப்ளெசிஸ் அளித்த பேட்டியில்,

”இன்று எங்களுக்கு ஒரு சிறந்த நாள். நாங்கள் கிரிக்கெட் விளையாடிய விதம் மிகவும் பாராட்டத்தக்கது. அதேபோன்று, நல்லதொரு தொடக்கத்தைப் பெறுவது முக்கியமானது. எனவே, இந்த வெற்றியானது எமக்கு ஆறுதலைக் கொடுத்துள்ளது.

இந்த ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு உகந்ததல்ல. கிறிஸ் மொரிஸும், இம்ரான் தாஹிரும் மத்திய ஓவர்களில் அருமையாக பந்துவீசியிருந்தனர். அதிலும் குறிப்பாக, மத்திய ஓவர்களில் விக்கெட்டுக்களைக் கைப்பற்றும் திறமை இம்ரான் தாஹிரிடம் உண்டு. கடந்த இரண்டு வருடங்களாக தென்னாபிரிக்காவை ஒரு வலுவான அணியாக மாற்றுவதற்கு இம்ரான் தாஹிர் முக்கிய பங்கு வகித்திருந்தார்.

இம்ரான் எப்பொழுதும் போலவே சிறப்பான பந்துவீச்சாளர். குறிப்பாக இதுபோன்ற ஒரு ஆடுகளத்தில் குறிப்பாக சுழல் பந்துவீச்சாளர்கள் நான்கு விக்கெட்டுகளைப் கைப்பற்றுவது என்பது நம்பமுடியாத விடயமாகும். எனவே இன்றைய போட்டியில் இம்ரான் தாஹிரின் பந்துவீச்சு அற்புதமாக இருந்தது.

அதேபோன்று, மத்திய ஓவர்களில் கிறிஸ் மொரிஸ் மற்றும் அன்டைல் பெஹ்லுக்வேயோ சிறப்பாக பந்துவீசியிருந்தனர். அவர்கள் இருவரும் தொடர்ச்சியாக தமது திறமைகளை வெளிப்படுத்தி வருவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என அவர் குறிப்பிட்டார்.

அதேபோன்று, துடுப்பாட்டத்தில் குயின்டன் டி கொக் மிகவும் சுதந்திரமாக விளையாடுகிறார். ஆனால் புதிய பந்தை எதிர்கொண்டு விளையாடுவது அவருக்கு முக்கியமானது. எங்களுக்கு முதல் விக்கெட்டுக்காக 60 அல்லது 70 ஓட்டங்கள் இணைப்பாட்டம் ஒன்று தேவை. அதன் பின்னர் ஓட்ட விகிதத்தில் எங்களுக்கு அவதானம் செலுத்த முடியும்.

அத்துடன் ஹஷிம் அம்லா மிகவும் முக்கியமான வீரர் ஆவார். ஓட்டங்களைக் குவிப்பது மாத்திரமல்லாது, ஒரு போட்டியை வெற்றிகரமாக முடித்து தனக்குத்தானே நம்பிக்கையை அவர் பெற்றுக்கொள்ள வேண்டும். எனவே இந்தப் போட்டியில் அவர் அந்த குறையை நிவர்த்தி செய்துவிட்டார். எஞ்சியுள்ள நான்கு போட்டிகளிலும் ஹஷிம் அம்லா கட்டாயம் அணியில் இடம்பெற வேண்டும் என்பதுடன், ஓட்டங்களைக் குவிப்பதும் மிக முக்கியமான விடயமாகும்.

துடுப்பாட்டத்தில் ஒரே தவறை செய்து வருகிறோம் – குல்படீன் நையிப் கவலை

இம்முறை உலகக் கிண்ணத்தில் ஒரே தவறை…

அதேபோன்று, அடுத்துவரும் போட்டிகளில் சராசரி ஓட்ட விகிதம் முக்கிய பங்கு வகிக்காது என நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, ஆப்கானிஸ்தான் அணி, தமது அடுத்த லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்வரும் 19 ஆம் திகதி பேர்மிங்ஹம்மில் சந்திக்கவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<