கொரோனா வைரஸுக்கு மாற்று வீரரை அனுமதிக்க இங்கிலாந்து வேண்டுகோள்

79

டெஸ்ட் போட்டிகளின் போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு மாற்று வீரரை அனுமதிக்க வேண்டும் என்று ஐ.சி.சி.யிடம் இங்கிலாந்து கிரிக்கெட் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தங்கள் நாட்டில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்து வருகிறது

>> இங்கிலாந்து செல்ல அனுமதி வழங்கிய மே.தீவுகள் கிரிக்கெட் சபை

இந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு பிறகு கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை சர்வதேச கிரிக்கெட் பேரவை (.சி.சி.) அண்மையில் வெளியிட்டிருந்தது.

இதன்படி, 14 நாட்கள் தனிமைப்படுத்தல் மற்றும் மருத்துவ ரீதியான உயரிய பாதுகாப்பு மற்றும் முறையான பரிசோதனைக்கு பிறகே வீரர்கள் களம் இறக்கப்படுவார்கள் என .சி.சியின் புதிய விதியில் கூறப்பட்டுள்ளது

எனினும், .சி.சியினால் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகளின்படி போட்டியின் இடைநடுவே வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் அவருக்குப் பதிலாக மாற்று வீரர் ஒருவரை களத்தடுப்பில் ஈடுபடுத்தலாம். ஆனால், அவருக்கு துடுப்பெடுத்தாடவோ அல்லது பந்துவீசவோ முடியாது.

ஆனாலும், .சி.சியினால் அண்மையில் வெளியிடப்பட்ட விதியின்படி, பௌண்சர் பந்தால் யாராவது வீரரொருவர் தாக்கப்பட்டு மயக்க நிலைக்குச் சென்றால் அவருக்குப் பதிலாக மாற்று வீரரை அணியில் கொண்டுவந்து துடுப்பெடுத்தாட வாய்ப்பு கொடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணி எதிர்வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளது

எனவே, கொரோனா வைரஸுக்குப் பிறகு நடைபெறுகின்ற முதலாவது டெஸ்ட் தொடர் என்பதால்போட்டி நடந்து கொண்டிருக்கும் போது ஏதாவது ஒரு வகையில் வீரருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், அந்த வீரருக்கு பதிலாக மாற்று வீரரை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் சபை, .சி.சி.க்கு கோரிக்கை விடுத்துள்ளது.  

இதுதொடர்பில் இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் இயக்குனர் ஸ்டீவ் எல்வொர்த்தி கூறுகையில்

”டெஸ்ட் போட்டிக்கு மட்டுமே மாற்று வீரர் அனுமதியை கோரியுள்ளோம். ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கு அல்ல. டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக இதற்கான ஒப்புதலை .சி.சி. வழங்கும் என்று நம்புகிறோம்” என்று கூறியுள்ளார்.

இதனிடையே, எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெவுள்ள இங்கிலாந்து அணியுடனான 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<