Home Tamil கண்டி டஸ்கர்ஸிற்கு எதிரான வெற்றியுடன் கோல் கிளேடியேட்டர்ஸ் அரையிறுதியில்

கண்டி டஸ்கர்ஸிற்கு எதிரான வெற்றியுடன் கோல் கிளேடியேட்டர்ஸ் அரையிறுதியில்

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

183
SLC

நடைபெற்று முடிந்திருக்கும் லங்கா ப்ரீமியர் லீக் (LPL) தொடரின் 19ஆவது போட்டியில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணி, கண்டி டஸ்கர்ஸ் அணிக்கு எதிராக 9 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது. 

மேலும், இந்த வெற்றியுடன் லங்கா ப்ரீமியர் லீக் தொடருக்கான புள்ளிகள் அட்டவணையில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணி மொத்தமாக இரண்டு வெற்றிகளுக்கு கிடைத்த 4 புள்ளிகளுடன் புள்ளிகள் அட்டவணையில் 4ஆம் இடத்தினைப் பெற்று லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கும் தெரிவாகியிருக்கின்றது.

மறுமுனையில், இப்போட்டியில் தோல்வியினை தழுவிய கண்டி டஸ்கர்ஸ் அணி புள்ளிகள் அட்டவணையில் 4 புள்ளிகளைப் பெற்ற போதும் ஓட்டவிகிதம் (Net Run Rate) போதாத காரணத்தினால் லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் இருந்து வெளியேறும் அணியாக மாறுகின்றது. 

தொடர் தோல்விகளை சந்திக்கும் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி!

கோல் கிளேடியேட்டர்ஸ் மற்றும் கண்டி டஸ்கர்ஸ் ஆகியவற்றின் இறுதி குழுநிலை ஆட்டமாக அமைந்த இந்தப் போட்டி வியாழக்கிழமை (10) ஹம்பாந்தோட்டை நகரில் ஆரம்பமாகியது. 

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் தலைவர் பானுக்க ராஜபக்ஷ முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை கண்டி டஸ்கர்ஸ் அணிக்கு வழங்கியிருந்தார். 

இப்போட்டிக்கான கோல் கிளேடியேட்டர்ஸ் அணி விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர் சட்விக் வால்டனுக்குப் பதிலாக ஹஸ்ரத்துல்லா சஷாயினை உள்வாங்கியிருந்தது. மறுமுனையில், தமது இறுதிப் போட்டியில் ஜப்னா ஸ்டாலியன்ஸினை வீழ்த்திய கண்டி டஸ்கர்ஸ் மாற்றங்கள் ஏதுமின்றி களமிறங்கியது. 

கோல் கிளேடியேட்டர்ஸ் – தனுஷ்க குணதிலக்க, ஹஸ்ரத்துல்லா சஷாய், பானுக ராஜபக்ஷ (C), தனன்ஜய லக்ஷான், அசாம் கான் (WK), அஹ்சன் அலி, செஹான் ஜயசூரிய, லக்ஷான் சந்தகன், மொஹமட் ஆமிர், செஹான் ஆராச்சிகே, நுவன் துஷார

கண்டி டஸ்கர்ஸ் – குசல் பெரேரா (தலைவர்), குசல் மெண்டிஸ், அசேல குணரத்ன, டில்ருவான் பெரேரா, ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ், சீகுகே பிரசன்ன, ப்ரெண்டன் டெய்லர், இர்பான் பதான், நுவான் பிரதீப், விஷ்வ பெர்னாண்டோ, டேல் ஸ்டெய்ன்

பின்னர் போட்டியின் நாணய சுழற்சிக்கு அமைவாக போட்டியில் முதலில் துடுப்பாடிய கண்டி டஸ்கர்ஸ் அணிக்கு கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர்களான மொஹமட் ஆமீர் மற்றும் நுவான் துஷார ஆகியோர் நெருக்கடி தந்தனர். இதனால், ஆரம்பத்தில் இருந்தே தடுமாற்றமான துடுப்பாட்டத்தினை கண்டி டஸ்கர்ஸ் அணியினர் வெளிப்படுத்தினர். 

அவ்வணியின் நம்பிக்கைக்குரிய வீரர்களான அணித்தலைவர் குசல் ஜனித் பெரேரா, ரஹ்மனுல்லா குர்பாஸ், ப்ரென்டன் டெய்லர் அனைவரும் மோசமான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தி மைதானத்தினை விட்டு வெளியேறினர். எனினும், குசல் மெண்டிஸ் தனியொருவராக போராடினார். ஆனால், அவரின் விக்கெட்டும் இறுதியில் பறிபோக கண்டி டஸ்கர்ஸ் அணி 19.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 126 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது. 

கண்டி டஸ்கர்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் போராட்டம் காண்பித்த குசல் மெண்டிஸ் தன்னுடைய 12ஆவது T20 அரைச்சதத்துடன் 42 பந்துகளுக்கு 4 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 68 ஓட்டங்களைப் பெற்றார். 

மறுமுனையில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் மொஹமட் ஆமீர், நுவான் துஷார, தனஞ்சய லக்ஷான் மற்றும் சஹான் ஆராச்சிகே ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர். 

Video – LPL தொடரில் பங்கேற்கும் நான்கு சகோதர ஜோடிகள்…!

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட மிகவும் சவால் குறைந்த 127 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய கோல் கிளேடியேட்டர்ஸ் அணி போட்டியின் வெற்றி இலக்கினை 17 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் பறிகொடுத்து 130 ஓட்டங்களுடன் அடைந்தது. 

கண்டி டஸ்கர்ஸ் அணியின் வெற்றி இலக்கினை அடைவதற்கு உதவியாக இருந்த தனுஷ்க குணத்திலக்க தான் இந்த தொடரில் பெற்ற நான்காவது அரைச்சதத்துடன் 12 பௌண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கலாக 66 பந்துகளில் 94 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காமல் தனது திறமையினை வெளிப்படுத்தியிருந்தார். குணத்திலக்கவுக்கு உதவியாக இருந்த ஹஸ்ரத்துல்லா சஷாய் 20 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

கண்டி டஸ்கர்ஸ் அணியின் பந்துவீச்சில் டில்ருவான் பெரேரா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றியிருந்த போதும் அவரது பந்துவீச்சு வீணாகியிருந்தது. 

போட்டியின் ஆட்டநாயகன் விருது கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்காக சிறந்த துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியிருந்த தனுஷ்க குணத்திலக்கவுக்கு வழங்கப்பட்டது. 

போட்டியின் சுருக்கம்

Result


Galle Gladiators
130/1 (17)

Kandy Falcons
126/10 (19.1)

Batsmen R B 4s 6s SR
Kusal Janith lbw b Nuwan Thushara 0 2 0 0 0.00
Rahmanullah Gurbaz c Shehan Jayasuriya b Nuwan Thushara 4 13 1 0 30.77
Kusal Mendis c Dhananjaya Lakshan b Sahan Arachchige 68 42 6 4 161.90
Brendon Taylor b Lakshan Sandakan 20 19 3 0 105.26
Seekkuge Prasanna b Dhananjaya Lakshan 1 3 0 0 33.33
Asela Gunarathne lbw b Sahan Arachchige 12 8 1 0 150.00
Irfan Pathan b Dhananjaya Lakshan 11 15 0 0 73.33
Dilruwan Perera c Shehan Jayasuriya b Mohammad Amir 3 7 0 0 42.86
Dale Steyn b Mohammad Amir 1 5 0 0 20.00
Nuwan Pradeep not out 0 0 0 0 0.00
Vishwa Fernando lbw b Shehan Jayasuriya 0 1 0 0 0.00


Extras 6 (b 0 , lb 0 , nb 0, w 6, pen 0)
Total 126/10 (19.1 Overs, RR: 6.57)
Fall of Wickets 1-0 (1.2) Kusal Janith, 2-9 (3.4) Rahmanullah Gurbaz, 3-57 (9.5) Brendon Taylor, 4-58 (10.2) Seekkuge Prasanna, 5-86 (12.3) Asela Gunarathne, 6-112 (16.3) Irfan Pathan, 7-124 (17.4) Kusal Mendis, 8-126 (18.4) Dilruwan Perera, 9-126 (18.6) Dale Steyn, 10-126 (19.1) Vishwa Fernando,

Bowling O M R W Econ
Mohammad Amir 4 1 11 2 2.75
Nuwan Thushara 2 0 8 2 4.00
Dhananjaya Lakshan 4 0 32 2 8.00
Bhanuka Rajapakse 1 0 10 0 10.00
Lakshan Sandakan 4 0 41 1 10.25
Sahan Arachchige 4 0 24 2 6.00
Shehan Jayasuriya 0.1 0 0 1 0.00


Batsmen R B 4s 6s SR
Hazratullah Zazai b Dilruwan Perera 20 34 1 1 58.82
Danushka Gunathilaka not out 94 66 12 4 142.42
Ahsan Ali not out 2 3 0 0 66.67


Extras 14 (b 5 , lb 0 , nb 1, w 8, pen 0)
Total 130/1 (17 Overs, RR: 7.65)
Did not bat Bhanuka Rajapakse, Azam Khan, Shehan Jayasuriya, Sahan Arachchige, Dhananjaya Lakshan, Mohammad Amir, Lakshan Sandakan, Nuwan Thushara,

Fall of Wickets 1-101 (14.3) Hazratullah Zazai,

Bowling O M R W Econ
Dale Steyn 4 0 23 0 5.75
Vishwa Fernando 1 0 9 0 9.00
Nuwan Pradeep 3 0 23 0 7.67
Dilruwan Perera 4 0 30 1 7.50
Irfan Pathan 1 0 9 0 9.00
Asela Gunarathne 4 0 31 0 7.75



முடிவு – கோல் கிளேடியேட்டர்ஸ் அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<