டேனியலின் அபார சதத்துடன் பலம் பெற்ற இலங்கை

149

சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து 19 வயதின் கீழ் (U19) கிரிக்கெட் அணிகள் இடையே நடைபெறும், இரண்டாவது இளையோர் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நிறைவில் இலங்கை இளம் அணி செவோன் டேனியலின் அபார சதத்துடன் பலம் பெற்றிருக்கின்றது.

முதல் இன்னிங்ஸில் சிறந்த ஆரம்பம் பெற்றுள்ள இலங்கை U19 கிரிக்கெட் அணி

இரு அணிகளும் மோதும் இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் (29) ஆட்ட நிறைவில் இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸை அடுத்து, தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடி வந்த இலங்கை U19 கிரிக்கெட் அணி 203 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் காணப்பட்டது. களத்தில் ஆட்டமிழக்காது இருந்த செவோன் டேனியல் 92 ஓட்டங்களுடனும், பவன் பதிராஜ 37 ஓட்டங்களுடனும் காணப்பட்டிருந்தனர்.

இதன் பின்னர் செவ்வாய்க்கிழமை (30) தொடர்ந்த போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் இலங்கைத் தரப்பு செவோன் டேனியலின் அபார சதம் மற்றும் பவன் பதிராஜவின் அரைச்சதம் ஆகியவற்றுடன் பலப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து முன்னேறிய ஆட்டத்தில் இலங்கையின் மத்திய வரிசை துடுப்பாட்டவீரர்களும் அரைச்சதங்களை விளாச, இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நிறைவின் போது 480 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து பலமான நிலையில் காணப்படுகின்றது.

தற்போது இங்கிலாந்தை விட 99 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ற இலங்கை துடுப்பாட்டம் சார்பில் செவோன் டேனியல் சதத்துடன் ஒரு சிக்ஸர் மற்றும் 25 பெளண்டரிகள் அடங்கலாக 155 ஓட்டங்களை எடுத்திருந்தார். இதேநேரம் பவன் பதிராஜ அரைச்சதம் விளாசி 9 பெளண்டரிகள் உடன் 55 ஓட்டங்கள் பெற்றார்.

இவர்கள் ஒரு புறமிருக்க மத்திய வரிசையில் களமிறங்கிய வினுஜ ரன்போல் சற்று அதிரடி கலந்த ஆட்டத்துடன் துடுப்பாடி 78 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பெளண்டரிகள் அடங்கலாக 65 ஓட்டங்களை குவித்தார்.

நஸீம் சாஹ்விற்கு உபாதை சிக்கல்கள் ஏற்படவில்லை – பாபர் அசாம்

இதேநேரம் களத்தில் ஆட்டமிழக்காது நிற்கும் அணித்தலைவர் ரவீன் டி சில்வா 65 ஓட்டங்களுடனும், வனுஜ சஹான் 2 ஓட்டங்களுடனும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து U19 கிரிக்கெட் அணி பந்துவீச்சில் பேர்டி போர்மன், பென்ஜமின் கிளிப்(f) ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் டோம் லேவ்ஸ், யூசேப் மஜித் மற்றும் ஜேம்ஸ் சேல்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடரும்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<