காலிறுதியில் வெற்றி பெற்ற SLASC, SLAC, MIC, GW அணிகள்

143
SL Army Inter Regiment Football Tournament quarter final

இலங்கை இராணுவப் படையணிகளுக்கு இடையிலான இவ்வருடத்திற்கான கால்பந்து சுற்றுப்போட்டியின் காலிறுதிப் போட்டிகளில் இலங்கை இராணுவ சேவை படைப்பிரிவு (SLASC), இலங்கை இராணுவ கவசப் படைப்பிரிவு (SLAC), இராணுவ புலனாய்வுப் பிரிவு (MIC)  மற்றும் கெமுனு கண்காணிப்பு பிரிவு (GW) ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

SLASC v SLLI (முதலாவது காலிறுதி)

களனி கால்பந்து மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில் இலங்கை இராணுவ சேவை படைப்பிரிவு (SLASC) 1–0 என்ற கோல் வித்தியாசத்தில் இலங்கை காலாட்படையை (SLLI) வீழ்த்தியது.

இலங்கை இராணுவ படைப் பிரிவுகளுக்கு இடையிலான கால்பந்து தொடரின் குழு மட்ட முவுகள்

இந்த ஆண்டுக்கான இலங்கை இராணுவப் படையணிகளுக்கு இடையிலான கால்பந்து சுற்றுத் தொடரில்…

போட்டியின் ஆரம்ப கட்டத்திலேயே ஸமீல் தாலிப் பெற்றுக்கொடுத்த கோல் ஆட்டத்தின் இறுதிவரை வெற்றி கோலாக இருந்தது. இதன்போது SLLI  பதில் கோலை போட்டு சமநிலைக்கு கொண்டுவரும் முயற்சி, அனுபவ வீரர்களைக் கொண்ட SLASC முன் முடியாமல் போனது. குறிப்பாக பிரீமியர் லீக்கில் விளையாடும் ஒருசில வீரர்களை கொண்டிருந்த எதிரணியினரை எதிர்கொள்வது SLLI அணிக்கு சவாலாக மாறியது.

கோல் பெற்றவர்கள்

SLASCமீல் தாலிப் 6’


SLAC v SLAOC (இரண்டாவது காலிறுதி

இலங்கை இராணுவ கட்டளைத் தளபதிப் பிரிவை (SLAOC) எதிர்கொண்ட இலங்கை இராணுவ கவசப் படை (SLAC) பெனால்டி முறையில் 4–3 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வென்றது.

களனிய கால்பந்து மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியின் முழு நேரம் முடிவடையும்போது இரு அணிகளும் கோல்கள் பெறாத நிலையில் பெனால்டி அடிப்படையிலேயே முடிவு தீர்மானிக்கப்பட்டது.

போட்டியை ஆரம்பிக்கும் விசில் ஊதப்பட்டத்தில் இருந்து SLAOC க்கு எதிராக ஆக்கிரமிப்பு ஆட்டத்தை வெளிப்படுத்திய SLAC அணி தற்காப்பு ஆட்டம் ஒன்றையே வெளிப்படுத்தியது. எனினும், அனுபவம் மிக்க இராணுவப்படை அணியின் கோல் காப்பாளரான முஹமட் அஜ்மல் SLAC வசம் இருக்கும் நிலையில், அந்த அணியின் தற்காப்பு ஆட்டம் SLAOC க்கு எதிராக பெனால்டிக்கு சென்றது சாதகமாக இருந்தது.   

இந்த மூலோபாயம் வெற்றிதரும் வகையில் அஜ்மலினால் இரு பெனால்டி உதைகளை தடுக்க முடிந்தது.

கோல் விபரம்

SLAC – டி. அபேரத்ன (P), டி. வினோதன் (P), எச். பண்டாரகொட (P), ஏ.டி பிரியன்த (P)

SLAOC –  எல்.டி. ருக்ஷான் (P),  பி.ஜி. விக்ரமதன்திரி (P), சுராஜ் பெர்னாட் (P)  


MIC v SLNG (மூன்றாவது காலிறுதி)

முதல் இரண்டு போட்டிகளும் இடம்பெற்ற அதே மைதானத்தில் நடந்த பரபரப்பான போட்டியில் இராணுவப் புலனாய்வுப் பிரிவு (MIC) அணி இலங்கை தேசிய காவற்படையை (SLNG) 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் உக்கிர போட்டி நிலவியதால் SLNG வீரர் ஒருவர் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு சம்பியனான MIC, வலுவான இராணுவப்படை அணியில் அங்கம் வகிக்கும் தடுப்பு வீரர்களை கொண்ட SLNG அணிக்கு எதிராக வலுவான முன்கள வீரர்களுடன் களமிறங்கியது. பலப்பரீட்சை ஆரம்பமாகியது முதலே ஆட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இலங்கை தேசிய கால்பந்து அணியின் பயிற்றுவிப்பாளர்கள் பணி நீக்கம்

இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL) தேசிய கால்பந்து அணியின் பயிற்றுவிப்பாளர்களை வியாழக்கிழமை (27) பதவி நீக்கம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது .”

போட்டியின் முதல் பாதி கோலின்றி முடிவடைந்த நிலையில் இரண்டாவது பாதியின் 5 நிமிடங்களில் MIC சார்பில் எம்.சி. பிரியதர்ஷன கோலொன்றை போட்டார். இந்நிலையில் SLNG அணியின் பின்கள மத்திய நிலை வீரரான அசிகுர் ரகுமான் மத்தியஸ்தரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது அந்த அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது.

பத்து வீரர்களுடன் ஆடிய  SLNG  கோலொன்றை போட்டு சமன் செய்ய முயன்றாலும் MIC யின் தற்காப்பு ஆட்டத்தின் முன் அது முடியாமல்போனது.

கோல் விபரம்

MIC – எம்.சி. பிரியதர்ஷன 50’


GW v CES (நான்காவது காலிறுதி)

பொறியியலாளர்கள் சேவைகள் படைப்பிரிவு அணியை (CES) களனி கால்பந்து மைதானத்தில் எதிர்கொண்ட கெமுனு கண்காணிப்பு பிரிவு (GW) 3-0 என்ற கோல்கள் கணக்கில் இலகு வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

போட்டியின் முதல் பாதி முடியும்போது எச்.ஜி. சான்த மற்றும் டி.எஸ். குணசிங்க பெற்ற கோல்கள் மூலம் கெமுனு கண்காணிப்புப் பிரிவு 2-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் குணசிங்க தனது இரண்டாவது கோலையும் போட கடந்த ஆண்டு இரண்டாவது இடத்தை பிடித்த அணி இலகு வெற்றியீட்டியது.  

கோல் விபரம்

GW – எச்.ஜி. சான்த 29’, டி.எஸ். குணசிங்க 31’ & 75’