Home Tamil இளையோர் ஒருநாள் தொடர் பங்களாதேஷ் அணி வசம்

இளையோர் ஒருநாள் தொடர் பங்களாதேஷ் அணி வசம்

168

சுற்றுலா இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி மற்றும் பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி ஆகியவை இடையே நடைபெற்று முடிந்த இளையோர் ஒருநாள் தொடரின் நான்காவது போட்டியில் பங்களாதேஷ் தரப்பு 5 விக்கெட்டுக்களால் வெற்றியினை பெற்றிருப்பதோடு 5 போட்டிகள் கொண்ட தொடரினையும் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க 3-0 எனக் கைப்பற்றியுள்ளது. 

பங்களாதேஷ் இளையோரிடம் படுதோல்வியடைந்த இலங்கை

சுற்றுலா இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் அணி மற்றும்….

இந்த இளையோர் ஒருநாள் தொடரின் முதல் போட்டி முடிவுகள் ஏதுமின்றி கைவிடப்பட்டிருந்தது. இதன் பின்னர் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் பங்களாதேஷ் இளம் வீரர்கள் வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலை பெற்றனர். இந்நிலையில் நான்காவது போட்டி இன்று (17) ஆரம்பமானது. 

இலங்கை வீரர்கள் இந்த இளையோர் தொடரினை தக்கவைக்க இன்று இடம்பெற்ற போட்டியில் கட்டாய வெற்றியினை எதிர்பார்த்த வண்ணம் களமிறங்கினர். போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை இளம் அணியின் தலைவர் நிப்புன் தனன்ஞய முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தனது தரப்பிற்காக பெற்றார். 

அதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி 50 ஓவர்கள் நிறைவிற்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 260 ஓட்டங்களைக் குவித்தது. 

இலங்கை இளம் வீரர்களின் துடுப்பாட்டம் சார்பில் சோனால் தினுஷ 43 ஓட்டங்கள் குவிக்க, அபிஷேக் கஹட்டுவராச்சி 37 ஓட்டங்களையும், மொஹமட் சமாஸ் 34 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். 

அதேநேரம், பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட அணியின் பந்துவீச்சு சார்பாக தன்ஸிம் ஹஸன் 3 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தார். 

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 261 ஓட்டங்கள் என்கிற வெற்றி இலக்கினை 50 ஓவர்களில் பெற பங்களாதேஷ் தரப்பு தமது துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்தது.

பங்களாதேஷ் தரப்பிற்கு இந்த இளையோர் ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியிலும் சதம் கடந்த தவ்ஹீத் ரித்தோய் இம்முறையும் சதம் பெற்று உதவினார். 

தவ்ஹீத் ரித்தோயின் சத உதவியோடு பங்களாதேஷ் தரப்பு போட்டியின் வெற்றி இலக்கினை 47.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 265 ஓட்டங்களுடன் அடைந்தது.

பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட அணியின் வெற்றியினை உறுதி செய்திருந்த தவ்ஹீத் ரித்தோய் 120 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 9 பௌண்டரிகள் அடங்கலாக 115 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். அதேநேரம், பங்களாதேஷ் தரப்பின் தலைவர் அக்பர் அலி 66 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழக்காமல் நின்றிருந்தார். 

இலங்கைத் தரப்பின் பந்துவீச்சில் அம்ஷி டி சில்வா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றிய போதிலும் அவரது பந்துவீச்சு வீணாகியிருந்தது. போட்டியின் ஆட்டநாயகனாக பங்களாதேஷ் தரப்பின் தவ்ஹீத் ரித்தோய் தெரிவாகினார். 

இரட்டைச் சதங்களில் பிராட்மனை முந்திய மயங்க் அகர்வால்

இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மயங்க் அகர்வால்….

பங்களாதேஷ் – இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிகள் இடையிலான இளையோர் ஒருநாள் தொடரின் ஐந்தாவதும் கடைசியுமான போட்டி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (19) நான்காவது போட்டி அதே மைதானத்தில்  நடைபெறுகின்றது. 

போட்டியின் சுருக்கம்

Scorecard –

Result


Sri Lanka U19
260/7 (50)

Bangladesh U19
265/5 (47.2)

Batsmen R B 4s 6s SR
Navod Paranavithana c Shahadat Hossain b Tanzid Hasan 31 34 5 0 91.18
Mohammad Samaaz c Akbar Ali b Tanzid Hasan 34 22 5 1 154.55
Thaveesha Abhishek b Shamim Hossain 37 62 1 0 59.68
Ravindu De Silva c Shahadat Hossain b Rakibul Hasan 25 38 1 0 65.79
Nipun Dananjaya c Shahadat Hossain b Tanzid Hasan 27 33 1 1 81.82
Sonal Dinusha not out 43 52 2 0 82.69
Chamindu Wijesinghe run out (Akbar Ali) 29 35 1 0 82.86
Dilum Sudheera run out () 16 19 1 0 84.21
Kavindu Nadeeshan not out 8 6 0 1 133.33


Extras 10 (b 1 , lb 4 , nb 1, w 4, pen 0)
Total 260/7 (50 Overs, RR: 5.2)
Fall of Wickets 1-69 (9.1) Navod Paranavithana, 2-69 (9.2) Mohammad Samaaz, 3-111 (21.2) Ravindu De Silva, 4-162 (30.6) Thaveesha Abhishek, 5-162 (31.2) Nipun Dananjaya, 6-218 (43.2) Chamindu Wijesinghe, 7-251 (48.5) Dilum Sudheera,

Bowling O M R W Econ
Tanzid Hasan 10 0 54 3 5.40
Shoriful Islam 10 0 58 0 5.80
Shamim Hossain 10 0 59 1 5.90
Rakibul Hasan 10 0 43 1 4.30
Ashraful Islam 10 0 41 0 4.10


Batsmen R B 4s 6s SR
Tanzid Hasan c Mohammad Samaaz b Dilum Sudheera 26 30 4 0 86.67
Sajid Hossain Seam lbw b Amshi De Silva 3 2 0 0 150.00
Mahmudul Hasan c Thaveesha Abhishek b Amshi De Silva 14 16 1 0 87.50
Tawhid Hridoy c Ravindu De Silva b Navod Paranavithana 115 120 9 3 95.83
Shahadat Hossain c Nipun Dananjaya b Kavindu Nadeeshan 23 43 0 0 53.49
Akbar Ali not out 66 60 4 2 110.00
Shamim Hossain not out 11 14 1 0 78.57


Extras 7 (b 2 , lb 0 , nb 1, w 4, pen 0)
Total 265/5 (47.2 Overs, RR: 5.6)
Fall of Wickets 1-13 (1.3) Sajid Hossain Seam, 2-37 (5.4) Mahmudul Hasan, 3-69 (11.5) Tanzid Hasan, 4-131 (26.3) Shahadat Hossain, 5-241 (43.6) Tawhid Hridoy,

Bowling O M R W Econ
Yasiru Rodrigo 9 0 48 0 5.33
Amshi De Silva 8 0 55 2 6.88
Chamindu Wijesinghe 5.2 1 24 0 4.62
Dilum Sudheera 10 0 51 1 5.10
Kavindu Nadeeshan 10 0 48 1 4.80
Navod Paranavithana 4 0 28 1 7.00
Sonal Dinusha 1 0 9 0 9.00



முடிவு – பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி 

 மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க