மூன்றாவது தடவையாக நடைபெறவுள்ள மேமன் புட்சால் சம்பியன்ஷிப்

144
WMO Memon Futsal

உலக மேமன் அமைப்பினால் தொடர்ந்தும் மூன்றாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மேமன் புட்சால் சம்பியன்ஷிப் கால்பந்து தொடர் எதிர்வரும் டிசம்பர் 2ம் திகதி மருதானையில் அமைந்துள்ள Futsal World உள்ளக புட்சால் அரங்கில் இடம்பெறவுள்ளது.

தொடர்ந்து இரண்டாவது முறை நடைபெறும் மேமன் புட்சால் போட்டித்தொடர்

மேமன் சமூக அணிகள் போட்டியிடும் மேமன்..

இம்முறை போட்டித் தொடரில் மொத்தமாக 22 அணிகள் பங்கேற்கவுள்ளன. இதில் மூத்த வீரர்களுக்கான 12 அணிகளும், இளையோர் போட்டிகளுக்கான 10 அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதன்படி, மூத்த வீரர்களுக்கான போட்டித் தொடரில் உள்வாங்கப்பட்டுள்ள 12 அணிகளும், மூன்று அணிகள் அடங்கிய நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இளையோர் தொடருக்கான அணிகளில் A,B,C என மூன்று குழுக்கள் பிரிக்கப்பட்டுள்ளதுடன், இதில் A,B குழுக்களில் தலா 3 அணிகளும், C குழுவில் 4 அணிகளும் இடம்பெற்றுள்ளன.

மூத்தோருக்கான A,B,C,D ஆகிய குழுக்களில், கடந்த முறை கிண்ணத்தை வென்ற கன்னர்ஸ் எப்.சி அணி மற்றும் பிளேட் சம்பியனாகிய ரெனேகட்ஸ் அணிகள் A  குழுவில் இடம்பிடித்துள்ளன. அதேநேரம், கிண்ணத்துக்கான இறுதிப் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்த புட்சால் அமீகஸ் அணி B குழுவிலும், பிளேட் சம்பியனுக்கான இரண்டாவது இடத்தை பிடித்த கொழும்பு நைட் ரைடர்ஸ் அணி C குழுவிலும் இடம்பிடித்துள்ளன.

மூத்தோர் அணிகளுக்கான குழு விபரம்

A –யுனைடட் கிக்கர்ஸ், கன்னர்ஸ் எப்.சி, ரெனேகட்ஸ்

B – ப்ளெமிங்கோ எப்.சி, புட்சால் அமிகோஸ், மிஸ்பிட்ஸ்

C – கொழும்பு நைட் ரைடர்ஸ், ரீபெல் எப்.சி, 8 கண்டெய்னர்ஸ்

D – எம் போய்ஸ், யுனைடட் அமிகோஸ், ப்ளெமிங்கோ யுனைடட்

மூத்தோர் அணிகளுக்கான போட்டித் தொடரை பொருத்தவரை, தங்களது குழுக்களில் முதல் இடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக கிண்ணத்துக்கான அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பதுடன், குழுவில் இரண்டாம் இடத்தை பிடிக்கும் அணிகள் பிளேட் சம்பியனுக்கான அரையிறுதிக்கு முன்னேறும்.

Photos: 3rd Annual Memon Futsal Tournament – Press Conference

ThePapare.com | Hiran Weerakkody | 28/11/2018..

இளையோர் அணிகளுக்கான குழு விபரம்

A – மேமன் நைட் ரைடர்ஸ், பொர்ஷா செவன்ஸ், லெஜன்ட்ஸ்

B – யுனைடட் சிக்ஸர்ஸ், செவன் படீஸ், சுப்பர் 8’s

C – லிவர்பூல் எப்.சி, ப்ளெமிங்கோ ஜுனியர்ஸ், மென்செஸ்டர்ஸ் மேமன்ஸ், ப்ரீடேட்டர்ஸ்  

இளையோருக்கான போட்டித் தொடரை பொருத்தவரை, A மற்றும் B குழுக்களில் முதலிடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்பதுடன், C குழுவின் முதல் மற்றும் இரண்டாம் இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கான வாய்ப்புகளை பெறும்.

சம்பியன் கிண்ணத்துக்கான போட்டித் தொடரில் முதலிடத்தை பிடிக்கும் அணிக்கு ரூபா 50 ஆயிரம் பணப் பரிசாக வழங்கப்படவுள்ளதுடன், இரண்டாம் இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூபா 25 ஆயிரம் பரிசாக வழங்கப்படவுள்ளது. இதேவேளை, பிளேட் சம்பியனாகும் அணிக்கு ரூபா 25 ஆயிரம் பணப்பரிசு வழங்கப்படும் என்பதுடன், இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணிக்கு 15 ஆயிரம் ரூபா பணப்பரிசாக வழங்கப்படும்.

இதேவேளை, கடந்த வருடம் கிண்ணத்துக்காக நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், கன்னர்ஸ் எப்.சி. அணி வெற்றிபெற்று, சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்திருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<